நுகர்வோர் விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர் வோர் மன்றங்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே நுகர்வோர் கல்வி யை பரப்பும் வண்ணம் கடந்த 2005ம் ஆண்டு முதல் பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது இதனை குடிமக்கள் நுகர்வோர் மன் றம் என்ற பெயரில் அனைத்து பள்ளிகளிலும் துவங்கி செயல்படுத்திட அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்த, அனைத்து கல்வி நிறுவங்களிலும் உடனடியாக, ‘குடிமக்கள் நுகர்வோர்
மன்றங்கள்’ துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகள், பாதுகாப்புச் சட்டங்கள்,
போலிகளை கண்டறிவது எப்படி என்பது குறித்து இன்னும் பொதுமக்கள் மத்தியில்
போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. பள்ளி வயதிலேயே இது குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2005ல் அனைத்துப் பள்ளிகளிலும்
குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் (சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப்) துவங்க அரசு
உத்தரவிட்டது.
இதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளிலும், குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன
இதற்காக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13.9.12
அன்று முதன்மை கல்வி அலுவலர் வாசு தலைமையில் அனைத்து பள்ளி ஆசிரியர்
ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இன்னும் சில
பள்ளிகள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்க எந்தவித விண்ணப்பமும் வழங்காமல் உள்ளனர்.
இதுவரை குடிமக்கள் நுகர்வோர் மன்றம்
துவங்காத பள்ளிகள் விரைவில் துவங்க வேண்டும். பல பள்ளிகளில்
துவங்கப்பட்டும் பல பள்ளிகள் முறையான கூட்டங்கள் விழிப்புணர்வு முகாம்கள்
நடத்தாமல் உள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர் வோர் மன்றங்களை செயல்படுத்த வேண்டும்.
தற்போது அரசு சார்பில் நுகர்வோர் மன்றம் துவங்கிய பள்ளிகள் பட்டியலை பதிவு செய்ய உள்ளத்தால் பள்ளியில் செயல்படும் மாணவர் நுகர்வோர் மன்ற உறுப்பினர்கள் பட்டியலை விரைவில் cchepnlg@gmail.com cchep.siva@gmail.com cchepnlg @in.com ஆகிய மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் மன்றங் கள் சிறப்புடன் செயல்பட அரசு சார்பில் ஆதரவும்/ கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையம் சார்பில் வழிகாட்டல் மற்றும் பயிற்சியும் வழங்கப்படும்.
குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஏற்படுத்துதல், கூட்டங்கள் நடத்துதல் போன்ற ஆலோசனைகளை பெற 9442974075 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER
PANDALUR, PANDALUR TALUK & POST
THE NILGIRIS 643 233.
9488520800-9489860250 Web: www.cchepnlg.blogspot.in,
Facebook: http://facebook.com/
No comments:
Post a Comment