மாவட்டத்தில் உள்ள கடை, ஓட்டல்களில் காலாவதி, கலப்பட உணவு விற்றால் தகவல் தெரிவிக்க வலியுறுத்தல்
ஊட்டி,
: கடை, ஓட்டல்களில் காலாவதி மற்றும் கலப்பட உணவு விற்பனை செய்யப்படுவது
தெரிய வந்தால், உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரி விக்க
வேண்டும் என நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு நுகர்வோர் துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சாம் ராஜ் மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது.
தலைமையாசிரியர் லதா தலைமை
தாங்கினார்.
நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், நுகர்வோர்
விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் நுகர் வோர் மன்றங்கள்
செயல்படுத்தப்படுகிறது. உணவு கலப்படம், தரமற்ற உணவுகளால் ஏற்படும்
பாதிப்புகள் அதிகமாகும். பாஸ்ட் புட் மற்றும் ஜங்புட் எனப்படும் விரைவு
உணவுகளும், நொறுக்கு தீனிகளும் உடலுக்கு மிகவும் பாதிப்பை
ஏற்படுத்துகின்றன. இளவயது குழந்தைகள் சிறுவர்களிடையே பசியின்மை முதல்
புற்றுநோய், இதயநோய்களை இவ்வகை உணவு பழக்கங்கள் ஏற்படுத்துகிறது. தற்போது,
பல உணவுகளில் சுவைக்காகவும், அழகுக்காகவும் சேர்க்கப்படும் ரசாயன
சுவையூட்டிகள், நிறமிகளும் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.
பல கடைகளில்
காலாவதி உணவு, கலப்பட உணவு விற்பனை செய்யப்படுகின்றன. இதை அறிந்தால்
உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இயற்கையாக நமக்கு கிடைக்கும் தானிய உணவு, கீரைகள் பழங்களே பெரிதும்
உடலுக்கு தேவையான ஊட்டசத்துகளை வழங்கும் என்றார்.
மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில்,
‘நுகர்வோர் குறைபாடுகளுக்கு புகார் தெரிவிக்க பலரும் முன்வருவதில்லை. எனவே
பாதிப்புகள் அதிகமாக உள்ளது. நுகர்வோர் குறைபாடுகளை வெளி கொண்டு வர மக்கள்
முன்வர வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர், உறவினர்,
நண்பர்களிடம் நுகர்வோர் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’
என்றார்.
நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
No comments:
Post a Comment