ரசீது இல்லாமல் நுகர்வோர் பொருட்கள் வாங்கக் கூடாது கலெக்டர் வேண்டுகோள்

ரசீது இல்லாமல் நுகர்வோர் பொருட்கள் வாங்கக் கூடாது 
கலெக்டர் சங்கர் வேண்டுகோள்
நுகர்வோர் எந்த பொருள் வாங்கும் போதும் ரசீது இல்லாமல் பொருட்களை வாங்கக் கூடாது, மாணவர்களுக்கு நுகர்வேர் கடமைகள் குறித்து மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என நுகர்வோர் தின விழாவில் கலெக்டர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பயிற்சி அரங்கில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பாதுகாப்பு தின விழா நடந்தது.
விழாவில், மாவட்ட கலெக்டர் சங்கர் பேசியதாவது: தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா, நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. நுகர்வோர் இல்லாமல் எதுவும் கிடையாது. ஒரு பொருளின் தயாரிப்பு, விற்பனை, போக்குவரத்து செலவு, லாபம் என அனைத்தும் நுகர்வோரிடம் பெறப்படுகிறது.
எனவே தான் நுகர்வோருக்கு அதிக உரிமை உண்டு. நுகர்வோரின் உரிமைகள், கடமைகள், உணவுக் கலப்படம், பாதுகாப்பு, தவறான விளம்பரங்கள் குறித்து இங்கு வந்திருக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பிரதிநிதிகள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
மேலும், நுகர்வோர் கடைகளுக்கு பொருட்களை வாங்கச் செல்லும்போது கடை வியாபாரிகள் ரசீது இல்லாமல் பொருட்கள் வழங்கினால் அந்த பொருளை வாங்கக் கூடாது. மேலும், வியாபாரிகள் குறைந்த விலையில் பொருட்கள் தரப்படும் என கூறி தரமில்லாத பொருட்களை விற்பனை செய்வார்கள்.  நுகர்வோர் மிக கவனமாக பொருட்களை வாங்க வேண்டும். இங்கு வந்திருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தான் நுகர்வோரின் கடமைகள் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நுகர்வோர் தாங்கள் கடையில் வாங்கும் எந்த ஒரு பொருள் குறித்து விவரங்களை தெரிந்துக் கொள்ளும் உரிமை உண்டு.        மேலும் நுகர்வோருக்கு, தரமில்லாத பொருட்கள் விற்பனை செய்பவர்களிடமிருந்து நியாயமான நஷ்டஈடு பெறவும் உரிமை உண்டு. நுகர்வோர் எந்த பொருள் வாங்கும் போதும் ரசீது இல்லாமல் வாங்கக் கூடாது.
மேலும் எடை, காலாவதியான தேதி, தரம் குறித்து நுகர்வோர் எழுத்து மூலம் பதில் கேட்க வேண்டும். புகார் இருப்பின் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகினால் உடனடியாக நியாயம் கிடைக்கும். எந்த ஒரு பொருள் வாங்கும் போதும் தரம் இல்லை என்றால், அந்த பொருளை நுகர்வோர் நிராகரிக்க வேண்டும். மேலும், கலப்படங்கள் எப்படி கண்டு பிடிக்க வேண்டும், தர முத்திரை குறித்தும் மாணவர்களுக்கு எடுத்து கூற வேண்டும்.          இவ்வாறு கலெக்டர் பேசினார்.
தவறான வழிகளை காட்டும் விளம்பரங்கள் குறித்து கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் பேசினார். நுகர்வு கலாச்சாரம் குறித்து குன்னூர் நுகர்வேர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகரன், உணவுக் கலப்படம் மற்றும் பாதுகாப்பு குறித்து கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் ராஜன் மேலும், தேவைக்கேற்ற நுகர்வு குறித்து கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் நாகேந்திரன்,  நுகர்வோர் பாதுகாப்பு குறித்து ஆகியோர் பேசினர்.
விழாவில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நல்லசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் ராஜா, மண்டல உணவு பாதுகாப்பு நல அலுவலர் ரவி, மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரவி, தொழிலாளர் ஆய்வாளர் வேல்முருகன், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...