இளையோர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி நேரு யுவ கேந்திரா ஆகியன் இணைந்து இளையோர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு கூடலூர் சக்சஸ் கல்வி நிலையத்தில் நடத்தின. 

நிகழ்ச்சிக்கு கல்வி நிலைய முதல்வர் ராஜேஷ் தலைமை தங்கினார்.
  
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மின்சார வாரிய உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன் பேசும்போதுஇளைய தலைமுறையினர் பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றனர்.  ஆனால் அவர்கள் படித்தபின் வேலைக்கு செல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர்.  அவர்களின் திறமையை பயன் படுத்தி சுய தொழில் செய்து மற்றவர்களுக்கு வேலை கொடுக்க முன் வருவதில்லை.  இதனால் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இன்றி வேலை கிடைக்கும் இடத்திற்கு இடம் பெயர்கின்றனர்.  ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே வளர்கிறது கிராம புரங்கள் மேம்பாடு அடைவது இல்லை.   இளைஞர் கள் தங்கள் படிப்பை கிராம வளர்ச்சிக்கு உகந்த வகையில் மாற்றி சுய தொழில் செய்ய முன்வரும் பட்சத்தில் சமூக பொருளாதாரம் மேம்படும் என்றார்.  

நேரு யுவ கேந்திர நிகழ்ச்சி அலுவலர் ஜெய பிரகாஷ் பேசும்போது  இளையோர்கள் மேம்பாடு அடைய வேண்டும் தங்கள் திறமைகளை மேம்படுத்த வழிக்காட்ட வேண்டும் என்ற நோக்கில் நேரு யுவ கேந்திரா துவங்க பட்டுள்ளது.  மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட  இளைஞர் மன்றங்கள் இருந்தாலும் பெரும்பான்மையான மன்றங்கள் துவக்கத்தில் உள்ள வேகம் இன்றி செயல் படாமல் உள்ளது.  கிராம ஒற்றுமைக்கு முக்கிய துவம் அளித்து இளையோர்கள் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செயல் படும் மன்றங்களுக்கு நேரு யுவ கேந்திரா சார்பில் பரிசுகள் விளையாட்டு உபகரணங்கள் வழங்கபடுகிறது என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்  பேசும்போது  இளைஞர்கள் தற்போது சமூக சேவையில் ஆர்வம் இன்றி உள்ளனர்  மக்கள் சேவை மற்றும் அரசு சேவைகள் கிராமங்களில் உள்ள மக்களுக்கு கிடைக்க இளைஞர் முன்வர வேண்டும்.  என்றார்.

நிகழ்ச்சியில் சுவாமி விவேகனந்தர் குறித்து நடத்தபட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற முதல் பரிசு கௌரி, இரண்டாம் பரிசு விக்டர், மூன்றாம் பரிசு கலாதேவி, ஆறுதல் பரிசு அமுல், ஸ்ரீ காளிதாஸ், ராஜலிங்கம் ஆகியோருக்கு பரிசுகளுடன்  பாராட்டு சான்றிதழ்களும்,  பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், வழங்கப்பட்டது.   நிகழ்ச்சியில் கூடலூர் மின்வாரிய உதவி மின் பொறியாளர் பாலாஜி சசக்ஸ் கல்வி மைய ஆசிரியர்கள் சுமித்ரா, திருச்செல்வி, கௌதமி,  நேரு யுவ கேந்திரா தேசிய சேவை தொண்டர்கள்  ஜீவிதா, ஆண்டம்மாள், இளையோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

முன்னதாக ஆசிரியர் மாணிக்க சாமி வரவேற்றார் முடிவில் ஆசிரியர் மும்மூர்த்தி நன்றி கூறினார்.



No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...