நித்தம் உயிர்காக்கும் ரத்தம்: இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம்


ரத்ததானம் அளிப்பதன் மூலம், யாரோ ஒருவருடைய உயிர் காப்பற்றப்படுகிறது. மற்றொருவர் ரத்த தானம் செய்வதற்கும் வழிகாட்டியாக அமைகிறது. இன்று நீங்கள் ரத்த தானம் செய்தால், அது நாளை உங்களுக்கு கூட பயன்படலாம். பாதுகாப்பாக ரத்ததானம் செய்வது பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 14ம் தேதி, உலக ரத்ததானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. "தாய்மார்களை காப்பற்ற, பாதுகாப்பாக ரத்தம் அளித்தல்' இந்த ஆண்டு இத்தினத்தின் மையக்கருத்தாக உள்ளது.


ரத்தம் அளிக்கும் முறை:

நல்ல உடல்நலத்துடன், எடை 45 கிலோவுக்கு மேல் உள்ள, 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின், ரத்ததானம் செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலை 37.50 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின் போது, 350 மி.லி., ரத்தம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. 2 நாட்களில் இழந்த ரத்தத்தை உடல் மீட்டு விடுகிறது. 2 மாதங்களில், சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவுக்கு வந்து விடுகிறது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததானம் வழங்கலாம்.


ரத்தம் அளிப்பதால் ஏற்படும் நன்மை:

ரத்தம் வழங்குவதால், மற்றவர் பயன்பெற்றாலும், தானம் செய்பவர்களுக்கும் இது பலன் அளிக்கிறது. புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதை கருதலாம். ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள ரத்ததானம் செய்வது உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு, தானம் செய்யும் போது சீரடைகிறது. ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து, தேவைப்படுபவர்களுக்கு ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளட்கள் என பயன்படுத்த முடியும். இதனால் மூன்று பேர் உயிரை, ஒருவரால் காப்பாற்ற முடிகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருக்கு ஏதாவது ஒரு விதத்தில் ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் தானாக முன்வந்து தானம் செய்தால் மட்டுமே, தேவைப்படும் ரத்தத்தை பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை.


S.SIVASUBRAMANIAM, President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.
94 88 520 800-94 898 60 250,   944 29 740 75,  948 639 34 06

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...