பந்தலூர் அருகே மேங்கோரேஞ்சு மருத்துவ மனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிடப்பிள் டிரஸ்ட்,மேங்கோரேஞ்சு மருத்துவமனை மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தங்கினார். நுகர்வோர் மைய செயலாளர் பொன் கணேசன் நிர்வாகி தனிஸ்லாஸ் மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் ஷாலோம் சேரிடப்பிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊட்டி
அரசு கண் மருத்துவர் அகல்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு
கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 5 பேர் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டது. அவர்கள் விருப்பத்துடன் கண் புரை அறுவை சிகிச்சைக்கு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில் கண் பரிசோதகர் கலாவதி, ஸ்ரீதர், மேங்கோரேஞ்சு எஸ்டேட் ரிச்மௌண்ட் மருந்தாளுனர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
S.SIVASUBRAMANIAM, President
No comments:
Post a Comment