பகை- பழியை - தக்காளியையும் தூக்கி எறியுங்கள்''

''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா  உங்களுக்குசந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா,  நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை.
எல்லா மாணவர்களும் ஒரே குரலில் 'ஆமாம்...' என்றனர்அவர்களைஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார்ஒருவன் 'பத்துஎன்றான்அடுத்தவன் 'பதினைந்துஎன்றான்இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.
இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியைவகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ''நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படிகூடையில் உள்ள தக்காளிகளை எடுத்துஉங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்'' என்றார்மாணவர்களும் தங்களது பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
அவர்களிடம், ''இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டார்புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.
ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லைஆனால்அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கினநாற்றம் அடிக்கும் மூட்டையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர்ஒரு கட்டத்தில்... ஆசிரியையிடம் சென்றுமூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமா..? அந்த நாற்றத்தைப் போலவேபகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றனஎனவேபகைபழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால்தக்காளியையும் தூக்கி எறியுங்கள்'' என்றார்!மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்.

No comments:

Post a Comment

Ckyc என்றால் என்ன

  CKYC (Central Know Your Customer) என்றால் என்ன? CKYC (Central Know Your Customer) என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட Central KYC Rec...