தரமற்ற, போலி டீத்தூள் பயன்பாடு:

தரமற்ற, போலி டீத்தூள் பயன்பாடு: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

by SENTHIL
நாமக்கல்: நாமக்கல் அதன் சுற்று வட்டாரத்தில் செயல்படும் டீக்கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் உத்தரவின்படி, அலுவலர்கள் பாஸ்கரன், பாலமுருகன் ஆகியோர், நாமக்கல்லில் உள்ள டீக்கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தரமான டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா, பால் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், போலி அல்லது கலப்பட டீத்தூளை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் எச்சரித்தனர். 
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு அலுவலர் கவிக்குமார் கூறியதாவது: மாவட்டத்தில், நான்கு மாதங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், 73 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், 18 லட்சம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல், தற்போது வரை, 31 கிலோ வரை தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலப்பட, காலாவதியான, தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை குறித்து, 94440-12322 என்ற, வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவித்தால், 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...