இரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு விழா

கூடலூரில் இரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு விழா கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய முதல்வர்  ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.   தொழிற்பயிற்சி மைய முதன்மை பயிற்றுனர் மாதையன் வரவேற்றார்.

கூடலூர் சட்டமன்ற உறுப்பினர்  மு. திராவிடமணி  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரத்த கொடையாளர்களுக்கு பராட்டு சான்று வழங்கி சிறப்புரையாற்றியபோது

இரத்த தானம் கண் தானம் என்பது தற்போது மிகவும் அவசியமானதாகும்.  கூடலூர் அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி அமைக்கப்பட்டு அதன் மூலம் இப்பகுதி ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்றனர்.  

தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்  ஊட்டசத்தான உணவு உட்கொள்ளாமலும், அட்டை உன்னி போன்ற பூச்சி கடிகளாலும் இரத்ததை இழந்து இரத்த சோகை போன்ற நோய்களுக்கு ஆட்படுவதோடு,  இரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளின் பயன்பாட்டினால் புற்று நோய்க்கும், சிறுநீரக கோளறுகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  

எனவே இதுபோன்ற ஏழை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில்  இரத்த தானம் வழங்கியது பராட்ட கூடியதாகும். அடுத்தவருக்கு உதவும் ஈகை குணம் மாணவ பருவத்திலேயே உருவாகி தொடரவேண்டும்.  

இரத்த தானம் வழங்க மனம் இருப்பது போல் மன வலிமையும், உடல் வலிமையும் அவசியம்.  இளைஞர்கள் தீய பழக்கத்திற்கு ஆளாகாமல்   கல்வியை முறையாக கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஏட்டு படிப்பை விட செயல்முறை படிப்பு மிகவும் முக்கியமானது.  இதன் மூலம் சுயமான தொழிலை கற்றுக்கொள்ள முடியும்.   

கூடலூர் வட்டாரத்தில் போதுமான தொழில் நிறுவனங்கள் இல்லாத நிலையே உள்ளது.  இப்பகுதியில் புதிய தொழிற்சாலைகள் கார்மென்ட்ஸ் போன்றவை கொண்டு வர முயற்சிகள் மேற்க்கொண்டோம்.  இங்குள்ள பருவநிலை சமவெளி பகுதிகளில் உள்ள தொழில்கள் செய்ய இயலாத நிலையினால் வேறு தொழில்கள் இப்பகுதிக்கு கொண்டு வர இயலவில்லை.  

அரசு மூலம் உதவிப்பெறும் தொழிற்பயிற்சி மையமாக இதனை மாற்ற முயற்சிகள் மேற்க்கொள்ளகின்றேன்.  தோட்ட தொழிலாளர்களாகிய மாணவர்கள் பெற்றோர்களின் சிரம்மத்தை கருத்தில் கொண்டு கல்வியின் கவனம் செலுத்த வேண்டும்.  கல்வியே மிக சிறந்த மூலதனம் என்பதை உணர்ந்து போதைக்கு அடிமையாகாமல் மாணவர்கள் கற்று மேன்மையடைய வேண்டும் என்றார்.

தொடர்ந்து இரத்த தானம் வழங்கிய மாணவர்கள் மற்றும் கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் காளிமுத்து,கூட்டுறவு சங்க பணியாளர்கள் கனேசன், சினு, பாப்பன்னன் ஆகியோருக்கும் மரத்தான் ஓட்டபோட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நிறைவில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...