தகவல் அறியும் உரிமைச் சட்டம் மேல்முறையீடுகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
மேல்முறையீடுகள்
இணைய தளங்களைப் பயன்படுத்துவோரின் வசதியைக் கருத்தில் கொண்டு, பிரதமர் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேல்முறையீடுகளுக்கென RTI.அப்பீல்(அட்)கவ்(டாட்)இன் (rti.appeal(at)gov(dot)in) எனும் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி ஒன்றை ஒதுக்கியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான உங்கள் மேல்முறையீடுகளை இந்த மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தாமதத்தைத் தவிர்க்க பல்வேறு விஷயங்கள் தொடர்பான தகவல்களைக் கோரி பிரதமர் அலுவலகத்திற்கு மனுக்கள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றினால் கவனிக்கப்படுபவை என்ற நிலையில், இத்தகைய மனுக்கள் சம்பந்தப்பட்ட விஷயத்திற்குப் பொறுப்பான அலுவலருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
எனவே, குறிப்பிட்ட அமைச்சகம் அல்லது துறைகள் தொடர்பான குறிப்பிட்ட விஷயங்கள் பற்றிய தகவல்களைக் கோரி அனுப்பப்படும் மனுக்களை நேரடியாக சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவருக்கு அனுப்பி வைத்தால் அவர்களது கோரிக்கைகள் உரிய நேரத்தில் கவனிக்க வழியேற்படும்.
எந்தவொரு நபரும் கோரும் தகவலானது அடிப்படையில் மற்றொரு பொது அலுவரின் செயல்பாட்டிற்குள் வரக்கூடியது எனில், அத்தகைய மனுக்கள் சம்பந்தப்பட்ட பொது அலுவலருக்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டை 2005ஆம் ஆண்டின் தகவல் அறியும் சட்டம் அறிவுறுத்தியுள்ளது. கட்டணம் தகவல் அறியும் சட்டம் 2005இன் கீழ் தகவல் கோரி அனுப்பப்படும் மனுக்களுடன் அதற்கான கட்டணமான ரூ. 10/-ஐ (ரூபாய் பத்து மட்டும்) கீழ்கண்ட ஏதாவதொரு வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.:- பணமாகச் செலுத்துவதெனில் பிரதமர் அலுவலகத்தில் உள்ள காசாளரிடம் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
மனுச் செய்பவர் வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ள பிரிவைச் சேர்ந்தவர் எனில், இதற்கான கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர் என்ற வகையில், அதற்குரிய செல்லத்தக்க சான்றாதாரத்தை மனுதாரர் தனது மனுவுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவோலை / வங்கிக் காசோலையாக ரூ. 10/- மதிப்பிற்கு(மனுவிற்கான கட்டணமாக). இந்த வரைவோலை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் “பிரிவு அலுவலர், பிரதமர் அலுவலகம்” என்ற பெயரில் எடுக்கப்பட வேண்டும். போஸ்டல் ஆர்டராக இருப்பின் “பிரிவு அலுவலர், பிரதமர் அலுவலகம்” என்ற பெயரில் எடுக்கப்பட வேண்டும்.
அல்லது

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...