போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


கூடலூர் பாரதியார் பல்கலை கழக கலை அறிவியல் கல்லூரியில், மத்திய மாநில அரசு பணிகளுக்கு நடத்தும் 
போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பாரதியார் பல்கலை கழக கலை அறிவியல் கல்லூரி, 
கூடலூர் காசிகா IAS அகாடமி, 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் 
ஆகியன சார்பில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில்

கல்லூரி ஆங்கில துறை தலைவர் பெற்கோ வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் பழனிசாமி தலைமை தாங்கினார். 

 கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முருகையன், வட்டாட்சியர் ரவி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவா்கள் போட்டி தேர்விற்கான கையேடுகளை வெளியிட்டு பேசும்போது

கல்லூரி பருவம் இலக்கை நோக்கி பயணிக்கும் பருவம், இலக்கு சரியான வழிகாட்டலுடன், சரியான திசையை நோக்கி இருக்க வேண்டும்,  

எல்லாரும் போகும் பாதையில் செல்வதால் நமது இலக்கை அடைய முடியாது,  இலக்கை அடைய சிரம்மங்களையும், கஷ்டங்களையும் தாண்டிதான் ஆகவேண்டும். 

 சரியான நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இலக்கை தேர்வு செய்து அதனை அடைய நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். 

இளைஞர்கள் நல்ல வேலை, நல்ல வருமாணம் நல்ல வாழ்க்கை என்றும் பெண்கள் நல்ல கணவன், நல்ல குடும்பம் என்றும் நம்மை பற்றி சிந்திக்கின்றோம்.    சமூக மேம்பாட்டை பற்றியும் சிந்திக்க வேண்டும்.

வாழ்க்கையில் சாதிப்பது முக்கியம்,  சந்தோசமாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அடுத்தவருக்கு உதவுவதில், அடுத்தவர்களை மகிழ்விப்பதில் தான் மனது நிறைவடையும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிதான் உண்மையானது.

நேர்மையாக பணியாற்றுவது மிகவும் சவாலானது,  இதனால் பல்வேறு சிரமங்கள் இருக்கும், அதையும் தாண்டி நேர்மையாக இருப்பது தான் நேர்மைக்கு கிடைக்கும் பரிசு, 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற கடுமையான முயற்சி, பயிற்சி தேவை, மேலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து படித்தால் எளிதில் வெற்றியை அடைய முடியும். 

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற மத்திய அரசு போட்டி தேர்வுகள் மற்றும் குருப் 1 உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் தோல்வி ஏற்பட்டாலும் துவண்டு விடாமல் மீண்டும் முயற்சித்தால் வெற்றி பெறலாம்,

பெரும்பாலும் போட்டி தேர்வுகள் அனைத்திற்கும் ஓரே மாதிரியாகவே உள்ளது.  

இதனால் அனைத்து வகையான போட்டி தேர்வுகளையும் எழுத வேண்டும். 

அதனால் பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும்.  அதன் மூலம் வெற்றி பெற முடியும்.

நானும் குரூப் 1 தேர்வு பெற்று துணை ஆட்சியராக பணியில் சேர்ந்து 7 ஆண்டுகளில் ஐஏஎஸ் தகுதி பெற்றேன். தோல்விகளை கண்டு பயப்படவில்லை.

திடமான நம்பிக்கை, தீக்கமான முடிவு எடுத்துக்கொண்டால் இலக்கை எளிதில் அடையலாம்,  போட்டி தேர்வுகளுக்கு தயாராக இதர வாய்ப்புகளை விடுவதில் தவறில்லை.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்வுகளை எழுதுவது மிகவும் சிரமம், பலரும் இதுபோன்று முயற்சித்து தோற்று போகின்றனர்.  இதற்காக பயிற்சி பெறுவதும், முயற்சி செய்வதும் வெற்றியை தரும்.

ஐஏஎஸ் பதவி என்பது அதிகாரம் நிறைந்த, கௌரவம், செல்வாக்கு, பணம் போன்றவை இருக்கும் என்பதை தவிர்த்து  மத்திய மாநில அரசு பணிகளை சம்பளத்திற்கான வேலையாக பார்க்காமல் சேவை செய்யும் வாய்ப்பாக பார்க்க வேண்டும்.  

இந்த மணபாண்மை இருந்தால் தான் அரசு பணி சிறப்பான பணியாக அமையும்.

ஐஏஎஸ் தகுதி முடிவெடுக்கும் வாய்ப்பு அதிகம், சிறந்த முடிவுகள் மக்களுக்கு நலன் பயக்கும் முடிவாக எடுக்க வேண்டும்.  

தினசரி குறைந்தது 12 மணி நேரம்  படிப்பதால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம்,  அதுபோல் மாநில அரசு தேர்வுகளும் குறைந்தபட்சம் ஓராண்டுகள் முயற்சி செய்து படித்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலானோர் அரசு பணிக்கு வருவதற்கு தயாராவதில்லை. 

இந்நிலை மாற வேண்டும், இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எதிர்கலத்தில் அரசு பணிக்கு வரவேண்டும் அதற்கான முயற்சியில் மாணவர்கள்  பங்கேற்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தேவாலா காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், காசிகா ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுரேஸ்குமார் ஆகியோர் போட்டி தேர்வுகள் குறித்து விளக்கமளித்தனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு போட்டி தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  
   
நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.   
   
முடிவில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார்.                                                                                  


No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...