உலக மகளீர் தினம் பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி மகளீர் பொது சேவை மையம் ஆகியன சார்பாக நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி செலின் தலைமை தாங்கினார்
மகாத்மா காந்திபொது சேவை மைய தலைவர் நவுசாத்,ஆலோசகர் காளிமுத்து, செந்தாமரை மகளீர் பொது சேவை மைய செயலாளர் தீபா, ஆகியோர்மு ன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைபாளராக கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது பெண்கள் படிப்பை நேசித்து படிக்க வேண்டும், இன்று முதல் பெண் மருத்துவராக சாதித்த முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் பெண்களின் மருத்துவதுறையின் நுழைவுக்கு ஆரம்பமாக உள்ளார், பெண்கள் படிப்பு மற்றும் ஊட்டசத்துக்களில் கவணம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதால் எதிர்காலத்தில் பெண்கள் மேலும் வளர்ச்சி பெற முடியும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது இன்று அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பெண்கள் அன்பு பண்லுத்துவது முதல் எதிர்த்து போராடும் வல்லமை வரை பல பெண்கள் முன்மாதிரியாக சுட்டிகாட்டப்படுகின்றனர் இவர்களை போல் உருவாக வேண்டியது அவசியம். இன்று பல்வேறு இடங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வேலை கொடுக்க குறைந்த சம்பளம், எதிர்த்து கேட்கும் திறன் இன்மை, என கருதுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றது. இதனை எதிர்கொள்ள தங்களின் திறமைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
மகளீரின் உரிமைகள் குறித்து மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுபோட்டியில் வெற்றி பெற்றவர்கள் பேசினார்கள்.
பேச்சு போட்டியில் 6,7,8ம் வகுப்பு பிரிவில் முதலிடத்தை மெர்னிதாசன், இரண்டாமிடத்தை விஸ்வசஞ்சனா. மூன்றாமிடத்தை தர்சினி, ஜூலியா ஜாக்லின், 9, 10 வகுப்பு பிரிவில் முதலிடத்தை சாய்ஸ்ரீ, இரண்டாம் சாகிலா தெஸ்னி, முன்றாம் இடத்தை சுஸ்மிதா ஆகியோர் பெற்றனர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் காந்தி சேவை மைய நிர்வாகிகள் அபுதாகீர், மற்றும்மாணவிகள் ஆசிரியர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
http://cchepnlg.blogspot.in/?m=1
No comments:
Post a Comment