வீடு வழங்க தாமதம் ரூ.75 ஆயிரம் இழப்பீடு

[பதிவு – 1,631]

வீடு வழங்க தாமதம் ரூ.75 ஆயிரம் இழப்பீடு

---------------------------------------------------

சென்னை:வீடு வழங்க தாமதம் செய்த கட்டுமான நிறுவனம், வாடிக்கையாளருக்கு இழப்பீட்டுடன், 75 ஆயிரம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், நொளம்பூரைச் சேர்ந்த லீனா பிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனு:ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில், திருத்தணி மூவேந்தர் நகரில் புது வீடு வாங்க, 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தினேன். கட்டுமான பணிகள் தாமதம் மற்றும் மற்றொரு இடத்தில் வீடு கட்டப்பட உள்ளதாக தெரிவித்ததால், வாங்க விருப்பவில்லை. முன்பணத்தை திரும்ப கேட்டும் நிறுவனம் தரவில்லை. முன்பணத்துடன், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

விசாரணையில், கட்டுமான நிறுவனம் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.இந்த வழக்கில், நீதிபதி மோனி பிறப்பித்த உத்தரவு:கட்டுமான நிறுவனம், சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. மனுதாரர் செலுத்திய முன்பணம், 50 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்குவதுடன், 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, 5,000 ரூபாய் வழக்கு செலவும், கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...