காகித பொட்டலத்தில் உணவு :விழிப்புணர்வு இல்லாத அவலம்

பெரும்பாலான கடைகளில், செய்தித்தாள் காகிதங்களில், உணவு பதார்த்தங்களை பொட்ட லமிட்டு வழங்குவது, உடல் உபாதைக்கு வித்திடுகிறது.
எண்ணெயால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை பொட்டலம் செய்ய, பெரும்பாலான வியாபாரிகள், செய்தித்தாள் காகிதம் பயன்படுத்துகின்றனர். 
அதில் அச்சிடப்பட்டுள்ள மையில் கலந்துள்ள, காரீயம் போன்ற ரசாயனப் பொருட்கள், உணவு பதார்த்தங்களில் கலக்கிறது.
அவை, உணவோடு, உடலில் சேரும் போது, ரத்த சோகை, செரிமான குறைபாடு உட்பட பிரச்னைகள் ஏற்படுகின்றன. 
முதியவர்கள், சிறுவர்களுக்கு 'வைட்டல் ஆர்கன்' எனப்படும் நுரையீரல், கல்லீரல், இதயம் சார்ந்த பாதிப்பு ஏற்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம், உணவுப் பொருட்களை பொட்டலம் செய்ய, செய்தித்தாள் காகிதத்தை பயன்படுத்தக்கூடாது என, அறிவுறுத்தியுள்ளது.
 இருப்பினும், மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடைகளில் இச்செயல் தொடர்கிறது. 
எனவே, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், இவ்விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...