*கிளினிக்குகளை முறைப்படுத்தும் அரசாணை: தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு*
Published : 30 Jan 2019 21:21 IST
கிளினிக் மற்றும் மருத்துவ ஆலோசனை மையங்களை முறைப்படுத்த அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் உள்ள கிளினிக்குகளை முறைப்படுத்த கடந்தாண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதில், கிளினிக்குள் 100 சதுர அடியில் இருக்க வேண்டும், நோயாளிகள் அமர தனி அறை இருக்க வேண்டும், நவீன கருவிகள் வைத்திருக்க வேண்டும் என பல கட்டுபாடுகள் இடம் பெற்றிருந்தன.
இந்த அரசாணை 2019 ஜனவரி முதல் அமலுக்கு வத்த நிலையில் இதற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த மருத்துவர் வெற்றிவேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, தமிழகத்தில் செயல்படும் கிளினிக்குகள் நோயாளிகளிடம் குறைவான தொகையை கட்டணமாக வசூலித்து வருவதாகவும், இந்த அரசாணையில் சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசின் அரசாணைக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
https://tamil.thehindu.com/tamilnadu/article26129656.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

No comments:
Post a Comment