தேசிய.இளையோர் தினததை முன்னிட்டு கூடலூர் காசிகா IAS இலவச பயிற்சி மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு கூடலூர் காசிகா IAS இலவச பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
காசிகா இலவச பயிற்சி மைய நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொதுச்செயலர் சிவசுப்பிரமணியம், நிர்வாகி சத்தியநேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக காலந்து கொண்ட கா. இன்பசேகர் IAS பேசும்போது
இளைஞர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ள வழிகளில் பயன்படுத்த வேண்டும். சமூகத்தில் முக்கிய பங்கு இளைஞர்களுக்கு உண்டு.
சமூக வலைத்தளங்களில் தாங்கள் தேடுவது அனைத்தும் கிடைக்கும் அதில் நல்லவற்றை பயன்படுத்திக்கொள்ளுதல் எதிர்காலத்திற்க்கு நல்லவழியை காட்டும்.
போட்டி தேர்வுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடத்துகின்றன.
தமிழில் ஐ ஏ எஸ் தேர்வுகள் எழுத முடியும். நேர்முக தேர்வுவரை தமிழில் எதிர்கொள்ளமுடியும். எனினும் மாற்ற மொழி திறன்களை வளர்த்துக்கொள்வதும் அவசியம்.
IAS தேர்வுகளை பொறுத்தவரை 7 நிமிடங்களில் கேள்வியை படித்து பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு பதில் அளிக்க தாமதமானால் அடுத்த கேள்விக்கான நேரம் கிடைக்காது. அதற்கேற்ப தயாராவது அவசியம். 6ம் வகுப்பு முதல் உள்ள பள்ளி பாட புத்தகங்களை ஆழ்ந்து படித்து நினைவில் கொள்ளுதல் அவசியம். அவற்றில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அதுபோல் தினசரி செய்தி தாள்கள் படித்து நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளுதல் அவசியம்.
அதில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ளமுடியும். ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.
அப்போதுதான் அதில் கேட்கப்படும் எந்தவிதமான கேள்விக்கும் பதில் அளிக்க முடியும்.
எல்லா புத்தகங்களையும் படிப்பதைவிட முக்கியமான புத்தகங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். சோர்ந்து விடாமல் தொடர் முயற்சி செய்வதன் மூலம் மட்டுமே வெற்றியை பெறமுடியும். வெற்றி பெரும்வரை முயறசிப்பது அவசியம்.
இப்பகுதியில் போட்டி தேர்வுகள் குறித்து தற்போது ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு தொடரவும், இளைஞர்கள், மாணவர்கள் பங்களிப்பு அவசியம் தேவை. படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு வர கடின உழைப்பு இருக்க வேண்டும்.
சாதித்த அனைவரும் தோற்றும் இருக்கிறார்கள். எனவே தோல்வியை கண்டு முயற்சியை கைவிடாமல் வெல்லும்வரை தொடர வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களின் சந்தோகங்களுக்கு விளக்கம் அளித்தார். இதில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் காலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment