கூடலூர் பிரிவு 17 நில பிரச்சனைக்கு தீர்வுக்கு ஆளுனருக்கு மனு

பெறுனர்

மேன்மைமிகு ஆளுனர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு  உதகை முகாம்.

பொருள்  : கூடலூர் நிலப்பிரச்சனை  சட்ட மசோதா 2019 திருத்தம்
அனுமதி அளிக்க கூடாது எனவும்,  இப்பகுதியில் குடியிருக்கும்
ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் கேட்டல் சார்பாக.

மேன்மைமிகு ஆளுநர் அய்யா அவர்களுக்கு 
பணிவான வணக்கங்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர்  பகுதியில் ஜென்ம நிலங்களை அரசு கையகபடுத்தியது.  அதன்பின் சில பகுதிகள் டேன்டீ தோட்டங்களாகவும், வனத்துறைக்கும், வருவாய்துறை மற்றும் உள்ளாட்சிகள், தனியார் எஸ்டேட்டுகள் குத்தகைக்கும் வழங்கப்பட்டது.

மேலும் ஆங்காங்கே சில பகுதிகளில் குடியிருந்தவர்களுக்கு சிறப்பு ஆட்சியர் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு பட்டா வழங்கப்பட்டது.  அதனை தொடர்ந்து செட்டில்மென்ட் அலுவலர்கள் மூலம் நோட்டிசு அனுப்பட்டு ஆய்வும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரிவு 17 வகை நிலங்கள் யாருக்கும் சொந்தமில்லாத நிலங்களில் ஆங்காங்கே சிலர் விவசாயம் செய்து வந்தனர்.  அப்போது  இலங்கையில் இருந்து  தாயகம் திரும்பியவர்கள் பலரும் இந்த இடங்களை காசுகொடுத்து வாங்கி விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

தற்போது இப்பகுதியில்  ஏற்கனவே ஆண்டாண்டு காலமாக வசித்து வந்தவர்களும், தாயகம் திரும்பியவர்களும் பல ஆயிரகணக்கானோர்

மேற்படி பிரிவு 17 வகை நிலத்தில் குடியிருந்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில்  இவர்கள் வாழும் இடங்களை வனமாக மாற்றுவதால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு  எதிர்காலம் மிகவும் கேள்விகுறியாக உள்ளது.

 இந்த நிலங்கள் மட்டுமே இவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வாதாரமாக உள்ளது.  இந்த நிலங்களை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். 

இவர்கள் வாழும் பகுதிகளில் பட்டா இல்லாததினால் சாலை வசதி, மின் இணைப்பு பெற முடியாமை, அடிப்படை வசதியை பெற முடியாமல் அவதிப்படும் நிலையில் வசிக்கின்றனர்.



இந்நிலையில் கூடலூர் பந்தலூர் பகுதயில் உள்ள பிரிவு 17 வகை நிலங்களை வனமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  முதற்கட்டமாக ஏற்கனவே 19000 ஏக்கர் மக்கள் பயன்படுத்தாத சில பகுதிகளில் வனமாக மாற்றி அறிவித்தனர்.  இந்த பகுதியில் மக்கள் வசிக்காததினால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை.

தற்போது வனமாக அறிவிக்கும் வகையில் தமிழ்நாடு வனச்சட்டத்தில் திருத்தம் செய்து பிரிவு 16 (a)  பட்டியலில் பிரிவு 17 வகை சார்ந்த சுமார 29000 ஏக்கர் நிலத்தை சேர்த்து திருத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால் இந்த குழு மக்களிடம் விசாரணை ஏதும் மேற்கொள்ளவில்லை.  மக்களிடம் கருத்து கேட்கவில்லை. மக்கள் வசிப்பது குறித்து கணக்கில் எடுத்து கொண்டனரா  என்று தெரியவில்லை.

இதில் ஏழை எளிய மக்கள் வசிக்கும் இடங்களை வனமாக அறிவித்தால் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே மேற்படி சட்ட திருத்தம் மேற்கொண்டு தங்களின் மேலான அனுமதிக்காக தமிழக அரசு அனுப்பியுள்ளது.  இந்த சட்ட திருத்ததிற்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைத்து உதவுமாறும்

ஏற்கனவே இப்பகுதியில் வசிப்பதற்கு ஆதாரமாக அரசு தரப்பு ஆவணங்களே சாட்சியாக உள்ளன.  வாக்காளர் பட்டியல், ஊராட்சி மற்றும் உள்ளாட்சிகள் வீட்டு கதவு எண்கள், ரேசன்கார்டுகள் மூலம் அரசின் பொருட்கள் வழங்குதல்,  வருவாய் துறை சார்பில் சான்றுகள் வழங்கப் பட்டவை, பள்ளிகளில் படித்த மாணவர்கள், மருத்துவம் பெற்றவர்கள் என பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் ஆய்வு மேற்க்கொண்டு

இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் ஏழை எளிய மக்களின் நிலங்களை அவர்களுக்கு பட்டா வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிசெய்திட  ஆவண செய்தும்,  வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க செய்தும்

மீதமுள்ள நிலங்களை வனமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்புடன்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...