நூலக அடையாள அட்டை வழங்கும் விழா

பந்தலூர் புனித சேவியர் ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

பந்தலூர் கிளை நூலகம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சகோ. ஜாஸ்மின் தலைமை தாங்கினார்.  

பள்ளி தாளாளர் சகோ. செலின்   மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், பொருளாளர் செந்தாமரை, நுகர்வோர் மைய இணை செயலர் கணேசன் நிர்வாகி ராஜா, நூலக உதவியாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேவாலா காவல் உதவி ஆய்வாளர் ஸ்டிபென்சன் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
தலைவர் காளிமுத்து, பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், பந்தலூர் கிளை நூலகர் அறிவழகன் ஆகியோர் நூலகம் குறித்தும், புத்தகம் வாசிப்பின் பயன்கள், மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தும் விதங்கள், போட்டி தேர்வுகள் பொது அறிவு வளர்ச்சி போன்றவை குறித்து பேசினார்கள். தொடர்ந்து பள்ளியில் 5.ம் வகுப்பு படிக்கும் 104 மானாக்கர்களுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர் அமலா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...