பெறுனர்
உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நீலகிரி மாவட்டம்.
பொருள் : பந்தலூர்
பொன்னானி ஆறு தடுப்பணைகள் அமைக்க வேண்டும்
நீர் வீனாவை தடுக்க கேட்டல்
சார்பாக..
அம்மையீர் வணக்கம்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் கூவமூலா பகுதியில் உற்பத்தியாகி அத்திக்குன்னா வாளவயல், பொன்னானி பாலவயல், வழியாக
கேரளா எல்லையில் நுழைந்து மீண்டும் கர்நாடாகா மாநிலம் காவிரி ஆற்றில் கலக்கும்பொன்னானி
ஆறு சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் தமிழ்நாட்டிற்குள்
ஓடுகின்றது.
எப்போதும் வற்றாத நீர்
வரத்து உடைய இந்த ஆற்றில் கடந்த 2014,ல் பொன்னானி ஆற்றின் குறுக்கே பொதுமக்களின் தண்ணீர்
தேவைக்கும், நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்கும் விதமாகவும், கேரளாவிற்கு செல்லும்
நீரை சேமிக்கும் விதமாகவும் ஆற்றின் குறுக்கே 2 அடி உயரத்திற்கு மட்டும் தடுப்பனை கட்ட
வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம்,
அதன் அடிப்படையில் 17
கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ஆற்றில் மக்கள் பயன்பெறும் வகையில் 500 மீட்டருக்கு ஒரு
தடுப்பனை அதாவது ஒரு கிலோ மீட்டார் தூரத்திற்கு 2 தடுப்பனைகள் வீதம் 34 தடுப்பனைகள்
கட்ட நடவடிக்கை எடுப்படும் என்று பொதுபணி துறை மூலம் உறுதியளிக்கப்பட்டது.
கடந்த 2018 ம் ஆண்டு பந்தலூர்
அருகே கூவமூலா மற்றும் அத்திக்குன்னா பகுதிகளில் சில தடுப்பணைகள் மட்டும் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்கு
பயணடைந்து வருகின்றனர். மற்ற பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை.
இதனால் பல்வேறு பகுதிகளில்
உள்ள மக்கள் மிகவும் சிரம்மப்படுகின்றனர்.
ஆறு தூர் வாரப்பட்டு அகலப்படுத்தபட்ட மழைகாலங்களில் வெள்ள பாதிப்பு குறைந்தது. தற்போது சில இடங்களில் மண் சரிந்து மீண்டும் ஆறு குறுகலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வெயில் காலம்
ஆனதால் பந்தலூர் உப்பட்டி நெல்லியாளம், பொன்னானி, பாலவயல் மற்றும் இந்த ஆறு செல்லும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
துணிகள் துவைக்கவும்,
குளிக்கவும், கால்நடைகள் பராமரிக்கவும் தண்ணீர் தேவைக்கு தற்போது இந்த ஆற்றையே நம்பியுள்ளனர்
.
அதனால் இந்த ஆற்றினை மீதமுள்ள
பகுதிகளில் விரைவில் தடுப்பனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்
பொது செயலாளர்.
CCHEP. Nilgiris
No comments:
Post a Comment