சட்ட விழிப்புணர்வு முகாம் கூடலூர்

கூடலூர் பாரதியார் கலை அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப் பெற்றது.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கூடலூர் கலை அறிவியல் கல்லூரி, கூடலூர் சட்ட பணிகள் ஆணைக்குழு ஆகியன சார்பில்  சமூக நீதி தினம் மற்றும் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நடைப்பெற்ற 

சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வே. சுரேஷ் தலைமை தாங்கினார். 

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கார்த்திக் வரவேற்றார்.   

கூடலூர் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது

சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டம் எனக்கு தெரியாது என கூறுவதே சட்டப்படி தவறு ஆகும்.  சட்டப்படி வாழவேண்டியது நம் கடமையாகும்.

 சட்டங்கள் மக்களை நெறிபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டவையாகும்,  சட்சிகள், ஆவணங்கள் மூலம் குற்றம் செய்வது நிருபணமானால் தண்டிக்கப்படுகிறது.  

தண்டிக்க வேண்டும் என்பது சட்டத்தின் நோக்கமல்ல, தவறுகளை திருத்திகொள்ள வேண்டும் என்பதே  நோக்கம் ஆகும்.  சட்டங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அதன்மூலமே நமக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நிவாரணம் பெற முடியும்,  சட்டம் தெரியாது என்றாலோ சட்டம் சம்பந்தமான விளக்கம் தேவைப்பட்டாலோ  சட்ட உதவிகளை செய்ய சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்படுகின்றது. 

அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் செயல்படும் சட்ட பணிகள் ஆணைக்குழுவை நாடி பயன்படுத்தி கொள்ளலாம்.  ஆண்டுக்கு 1 லட்சத்திற்கு குறைவான வருவாய் உள்ளவர்கள் வழக்குகளில் வாதாட இலவச வழக்கறிஞர் உதவி வழங்கப்படும். 

மாணவர்கள் இருசக்கரங்களில் செல்லும்போது கட்டாயம் தலைகவசம் அணிவதோடு, பாதுகாப்பாகவும், குறைந்த வேகத்திலும் வாகணங்களை இயக்க வேண்டும்.

  லைசென்ஸ் இல்லாமல் வாகணம் ஓட்டினால் அதற்கான இழப்பீடு எதுவும் பெற முடியாது.  சட்டங்களை சரியாக பயன்படுத்தினால் நாம் யாருக்கும் பயப்படதேவையில்லை. 

வழக்கறிஞர்கள் தான் சட்டம் படிக்கவேண்டும் என்பதில்லை. மாணவர்களும் சட்டங்களை படித்து எழை எளியோருக்கு உதவு முன்வரவேண்டும் என்றார்.  

நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம்,  சட்ட பணிகள் ஆணைக்குழு பொறுப்பாளர் மகேஷ், சமூக ஆர்வலர் மேபீல்டு மோகன், கல்லூரி பேராசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.  

கல்லூரி கண்காணிப்பாளர் ஜார்ஜ், பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவசங்கரன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...