பொது நல வழக்கு போடுவது எப்படி ?*

*வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி?*

*பொது நல வழக்கு போடுவது எப்படி ?*

பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு, உயர்நீதிமன்றம். இப்போது, கீழ் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

பொதுவாக சார்பு நீதிமன்றத்திலேயே, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பத்து நபர்கள் இணைந்து வழக்கு போடுவது நல்லது. இதற்கு முதலில், லீவ் மனு போட வேண்டும். இது, வழக்குடன் இணைந்தது. முதலில் சிவில் வழக்கு போட, பிராது தயாரிக்க வேண்டும். முதலில், நீதிமன்றத்தின் பெயர், அதன் கீழ், ஊர், அதன் கீழ், முதலேற்பு வழக்கு எண் என போட்டு, இடம் விட்டு, எந்த வருடம் தாக்கல் செய்கிறோமோ, அந்த வருடத்தை போட வேண்டும். அதன் பின்பு, பத்து பேர் வழக்கு போடுவதாக இருந்தால் அவர்கள் பெயரை, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, வாதிகள் என்று காண்பியுங்கள். அதன் பின்பு, எதிரிடை என்று போட்டு, எதிர் பார்ட்டி நபர்கள் பெயரை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, பிரதிவாதிகள் என்று காண்பியுங்கள். இதன் பெயர், short cause title எனப்படும்.சிவில் வழக்கில், பிராதை, ஆர்டர் 7, விதி 1 இன் கீழேயே தாக்கல் செய்ய முடியும். ஆகையால், இப்போது, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும், பிராது, ஆர்டர் 7, விதி 1 என்று, நடு மையத்தில் எழுதுங்கள். அதன் பின்பு, வாதிகளின் விலாசம் என்று, தலைப்பிட்டு, வாதி வசிக்கும் மாவட்டம், ஊர், தெரு, கதவு இலக்கம், மற்றும், ஹிந்து என்றால், ஹிந்து என்றும், அப்பா பெயர், வயது, அதன் பின்பு, வாதியின் பெயர் என எழுதுங்கள். பல பேர் இருந்தால், வரிசையாக ஒன்று, இரண்டு என எழுதுங்கள். அதன் பின்பு, வாதிக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று எழுதுங்கள். அதன் பின்பு, பிரதிவாதிகளின் விலாசம் என்று தலைப்பிட்டு, மேலே சொன்னது போல, வாதிகளின் முகவரி போலவே, எழுதி கொள்ளுங்கள். அதன் கீழ், பிரதிவாதிகளுக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று குறிப்பிடுங்கள். இதன் பெயர் லாங் cause டைட்டில் ஆகும். இப்போது, அடுத்த பாராவாக, நீதிமன்ற jurisdiction குறிக்க வேண்டும். நீங்கள் வழக்கு போடும் ஊர், தாவா நீதிமன்ற எல்லைக்குட்பட்டதால், இந்த வழக்கு இங்கு தாக்கல் செய்யபடுகிறது என்று எழுதுங்கள். ஒவ்வொன்றும் ஒரு பாரா ஆகும். இப்போது மூன்று பாரா முடிந்திர்க்கும். . வழக்கு போடுபவர், வாதி என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள். வழக்கின் எதிராளி, பிரதிவாதி ஆவார். யார் மேல் பரிகாரம் கோருகிறீர்களோ, அவர்கள் அனைவரையும் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். அடுத்த பாரா, வழக்கு விவரங்களை ஆரம்பியுங்கள். வாதியானவர், இந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இப்படி, வழக்கின் சாராம்சத்தை, சுருக்கமாக, பல பாராக்களாக பிரித்து எழுதுங்கள். உதாரணமாக, பொது பாதை, இவ்வளவு நாளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது, இன்ன நபர், அதை ஆக்கிரமித்துள்ளார். இதனை தெரிவித்து, எதிர் மனுதாருக்கு, இந்த தேதியில் வாதியால் மனு, பதிவு தபாலில் அனுப்ப பட்டது. அதை பெற்று கொண்டு, இன்று வரை, பிரதிவாதிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காமல், காலம் கடத்தி வருகின்றனர். இவ்வாறாக, உங்கள் கரு பொருளை மையபடுத்தி, பிராது விவரங்களை சொல்லுங்கள். நீங்கள் அனுப்பிய மனுவின் நகலை தாக்கல் செய்தால், ஒன்றாம் பிரதிவாதிக்கு அனுப்பிய மனு, தபால் ரசீது ஆகியவை வாதி தரப்பு ஒன்றாவது சான்றாவணம் ஆகும் என்று குறிப்பிடுங்கள். சட்ட பாயிண்ட் களையும், குறிப்பிடுங்கள். அதன் பின்பு, அடுத்த பாராவாக, உங்கள் வழக்கின் வியாச்சிய மூலத்தை எழுதுங்கள். அதாவது, எந்த தேதியில் ஆக்கிரமிப்புதாரர் ஆக்கிரமித்தார், எப்போது பிரதிவாதிகளுக்கு மனு செய்யப்பட்டது, இன்று வரை பிரதிவாதிகள் வீண் காலம் கடத்தி வருகிறார்கள், மற்றும், வாதி இருக்கும் ஊர், பிரதிவாதி இருக்கும் ஊர், வழக்கு சொத்து இருக்கும் ஊர் ஆகியவற்றை சொல்லி, இதில் உற்பத்தி என்று காண்பியுங்கள். இது தனி பாரா. அடுத்து, வாதி, நீதிமன்ற கட்டணமாக TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள். அதன் பின்பு, prayer. இதில், நீங்கள் என்ன பரிகாரம் கூறுகிறீர்கள், யார் மீது கூறுகிறீர்கள் என்று சொல்லுங்கள். உதாரணமாக, ஒன்றாம் பிரதிவாதி, பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால், ஒன்றாம் பிரதிவாதியை, இரண்டு, மூன்று பிரதிவாதிகள் தாவா பொது இடத்தில் இருந்து அகற்ற, உத்தரவிடும் படிக்கும். அதன் பின்பு, வாதிக்கு, பிரதிவாதிகள் வழக்கிடை செலவை தரும்படிக்கும், மற்றும், நீதிமன்றம் கருதும் இன்ன பிற பரிகாரங்களை வழங்கும்படிக்கும், பிரார்திக்கபடுகிறது என்று முடியுங்கள். இதில், அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதால், பிரிவு என்பது, சிவில் procedure code படி, வழக்கு தொடுப்பதற்கு தொண்ணூறு நாட்களுக்கு முன் அறிக்கை அனுப்ப வேண்டும். அவசரமாக, இந்த வழக்கை தாக்கல் செய்தால், exemption மனு, பிரிவு, 80(2), civil procedure code படி, தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனு, இந்த பிராதுடன் தாக்கல் செய்திருப்பதாக, பிராதில், சொல்லுங்கள். இப்போது, இடது பக்கம் வழக்கறிஞர் கையொப்பமும், வலது பக்கம் வாதிகள் கையொப்பமும் போட வேண்டும். அதன் பின்பு, பிராதை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்று, particulars ஒப் valuation என்று தலைப்பிட்டு, சொத்து மார்க்கெட் மதிப்பு காட்டுங்கள். அதன் பின்பு,TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள். அதன் பின்பு, சரி பார்த்தல் என்று தலைப்பிட்டு, மேலே கண்ட சங்கதிகள் எல்லாம் என் அறிவிற்கு எட்டிய வரை உண்மை என சொல்லி, மதுரையில் வைத்து, தேதியில் கை எழுத்திட்டேன் என சொல்லுங்கள். அதன் பின்பு, சொத்து விவரம் எழுதுங்கள். கிரைய பத்திரத்தில் சொத்து விவரம் கொடுத்திருப்பார்களே, அந்த மாதிரி. அதன் பின்பு, மீண்டும், சரி பார்த்தல் என்று மேலே சொன்னவாறு, எழுதுங்கள். அதன் பின்பு, மேலே சொன்ன short cause title எழுதி, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும் ஆவணங்கள், ஆர்டர் ஏழு, விதி பதினான்கின் படி என்று தலைப்பிட்டு, நான்கு column கட்டமிட்டு கொள்ளுங்கள் முதல் column இல், வரிசை என், அடுத்த column இல் ஆவன தேதி, அடுத்த column இல் ஆவன விவரம், அடுத்த column இல் ஆவன தன்மை, அது நகலா அல்லது அசலா என்று காண்பியுங்கள். இப்போது, உங்கள் கைவசம் உள்ளல ஆவனங்களை, வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதன் கீழ், இடது பக்கம், ஊர், தேதியும், வலது பக்கம், வழக்கறிஞர் என்று காண்பியுங்கள். வழக்கறிஞர் இல்லாவிட்டால், வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள். அசல் ஆவநங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யுங்கள். அது முடியாவிட்டால், சான்றிட்ட நகல் தாக்கல் செய்யலாம். அதுவும் இல்லாவிட்டால், நகலை தாக்கல் செய்யலாம். ஆனால், விசாரணை வரும்போது, அசல் அல்லது சான்றிட்ட நகலைத்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதை, பின்பு கொடுப்பதாக குறிப்பில் காண்பிக்கலாம். இந்த ஆவண பட்டியல் தனி தாளில் தயார் செய்து, பிராதுடன் இணைக்கலாம். இப்போது பிராது தயார். இதனுடன், நீங்கள் வழக்கறிஞர் வைத்தால், வக்காலத்து வைக்க வேண்டும். அதன் பின்பு, ஆவணங்களை, ஒரு தனி தாளில் டாக்கட் போட்டு, தைத்து, அசல ஆவணங்கள தவிர, மற்றவற்றிற்கு, ஐந்து ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டி கொடுங்கள். பிராதின், முதல் பக்கத்தில், valuation சீட் வைக்க வேண்டும். அதன் பின்பு, நீதிமன்ற ஸ்டாம்ப் பேப்பர், அதன் கீழ் பிராது வைத்து தைத்து கொள்ளுங்கள். உள்ளே, வக்காலத்து, ஆவணங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டும். சில நீதிமன்றத்தில், வாதி, பிரதிவாதி விலாசம் தனி தாளில் அடித்து வைக்க வேண்டி உள்ளது. முன்பே சொன்னது போல, short cause title எழுதி, STATEMENT U/O. VI, RULE 14-A என்று, தலைப்பிட்டு அதன் கீழ், வாதி, பிரதிவாதி விலாசங்கள் எழுத வேண்டும். அதன் பின்பு, supporting affidavit. இதுவும், short cause title எழுதி, SUPPORTING AFFIDAVIT FILED BY THE 1st PLAINTIFF ABOVENAMED U/O VI, R. 15(4) OF C.P.C. என்று தலைப்பிட்டு, அதன் கீழ், வாதியின் விலாசத்தை தலை கீழாக எழுதி, பிராதில் வாதியின் விலாசம் எழுதுவீர்களே, அது போல, ஆகிய நான், சத்திய பிரமாணத்தின் பேரில் எழுதி வைத்த அப்பிடவிட் என்று எழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு, நான் வழக்கின் வாதி ஆவேன். எனக்கு வழக்கு விவரங்கள் பூராவும் நன்கு தெரியும் என்று சொல்லி, அடுத்த பாராவில், சுருக்கமாக பிராதின் விவரத்தை சொல்லுங்கள். பல வாதிகள் இருந்தால், பிற வாதிகளுக்காக, இந்த அப்பிடவிட் தை தாக்கல் செய்வதாக கூறி கொள்ளுங்கள். இறுதியாக, தனி பாராவாக, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் பிராதுபடி தீர்ப்பளிக்க வேண்டும் என்று முடியுங்கள். அதன் பின்பு, இடது பக்கம், மேலே சொன்ன சங்கதிகள் யாவும் உண்மை என சொல்லி, தேதியில், என் முன்பாக, ஊரில் வைத்து கை எழுத்திட்டார் என எழுதுங்கள். வலது பக்கம், வாதியின் கையொப்பம் இடுங்கள். அதன் நடுவில், ஒரு வழக்கறிஞரின் attestation வாங்கி கொள்ளுங்கள். இப்போது supporting அப்பிடவிட் ரெடி. பிராதின் ஒவ்வொரு பக்கத்திலும், supporting affidavit ஒவ்வொரு பக்கத்திலும், வாதி கையெழுத்து  வாங்க வேண்டும். அடுத்து, அரசு ஊழியர்கள் மேல் வழக்கு தொடுக்கும் முன், உரிய அறிவிப்பு அனுப்பாவிட்டால், அதற்கும் ஒரு அப்பிடவிட், மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கம் போல, short cause டைட்டில் எழுதுங்கள். இது தனி இடை நிலை மனு ஆகும். எனவே, லேசாக மாற்றி, நீதிமன்ற பெயர், ஊர் எழுதி, அதன் கீழ், இடைநிலை மனு எண் என எழுதி, இடம் விட்டு, பார் போட்டு, 2014 என வருடத்தை போட்டு கொள்ளுங்கள். இதில், வாதிகள் மனுதாரர்கள் ஆவார்கள். எனவே, வாதிகள் பெயரை எழுதி, மனுதார்கள் / வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள். அதே போல, கீழே, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகள் என்று, அரசு அலுவலர்களை மட்டும் சேர்க்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் பொது நல வழக்கு போடும்போது, முதல் பார்ட்டி ஆக, ஆக்கிரமிப்புதாரரை காண்பித்து இருந்தால், இரண்டாம் பார்ட்டி ஆக, அரசு அதிகாரிகளை காண்பித்து இருப்பீர்கள். இங்கு, அரசு அலுவலர்கள் மட்டும் வருவதால், அவர்களை, இம்மனுவில், எதிர்மனுதார்களாக காண்பிக்கும்போது, வரிசையாக காண்பித்து, அவர்கள் முக்கிய வழக்கில் எந்த cadre ஒ, அந்த cadre காண்பியுங்கள். உதாரணமாக, மாவட்ட ஆட்சியர், முக்கிய வழக்கில் இரண்டாம் பிரதிவாதி என்றால், இங்கு, முதல் எதிர்மனுதாராக காண்பித்து இருந்தால், முதல் எதிர்மனுதார் / இரண்டாம் பிரதிவாதி என்று காண்பியுங்கள். இப்போது, அப்பிடவிட் க்கு வருவோம். முதல் மனுதார் / முதல் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யும் அப்பிடவிட் என்று தலைப்பிட்டு கொள்ளுங்கள். அல்லது, எந்த மனுதார் வேண்டுமானாலும் அப்பிடவிட் தாக்கல் செய்யலாம். வழக்கம் போல, sworn செய்து கொள்ளுங்கள். அதாவது, விலாசத்தை தலை கீழாக எழுதி, ஆகிய நான் சமர்ப்பிக்கும் அப்பிடவிட் என்று காண்பியுங்கள். அடுத்து. முதல் பாரா, supporting அப்பிடவிட் இல் சொன்னது போல எழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு, ஒவ்வொரு சிறு பாராவாக, வழக்கு இந்த அரசு அதிகாரிகள் மீது உடனே தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால், அவர்களுக்கு அனுப்ப வேண்டிய அறிவிப்பை, அனுப்ப முடியவில்லை என்று பொருத்தமான காரணத்தை காண்பியுங்கள். இறுதியாக, தனி பாராவில், இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு பெருத்த இழப்பு ஏற்படும். ஆனால், எதிர்மனுதாருக்கு எவ்வித ஆட்சேபனையும் இம்மனு தாக்கல் செய்ய இருக்க போவதில்லை என்று எழுதி கொள்ளுங்கள். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள். இங்கும், supporting அப்பிடவிட் இல் இருப்பது போல முடித்து கொள்ளுங்கள். அப்பிடவிட் ரெடி. இப்போது மனு. இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட் short cause title அதே போல எழுதி கொள்ளுங்கள். மனுதார் / வாதி தரப்பு மனு பிரிவு 80(2) c.p.c. படி என்று எழுதி கொள்ளுங்கள். இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட்டில் கண்டுள்ள காரநன்களால், கணம் கோர்ட்டார் அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள். அதாவது, அப்பிடவிட் prayer உம, மனு prayer உம, ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் இந்த வழக்கை உடனடியாக தாக்கல் செய்ய, அரசு ஊழியர்களுக்கு உரிய அறிவிப்பை கொடுக்க exemption செய்ய முறையான காரணங்களை சொல்லாவிட்டால், நீதிமன்றம் உங்கள் வழக்கை உடனடியாக கோப்பிற்கு எடுக்காது. நோட்டீஸ் அனுப்பி விட்டு, மூன்று மாதம் கழித்து தாக்கல் செய்ய சொல்லுவார்கள். அடுத்து, லீவ் மனு. அதாவது, நீங்கள் பொது நல மனு தாக்கல் செய்ய, நீதிமன்றந்தில் லீவ் வாங்க வேண்டும். இது ஒரு விதமான், அனுமதி ஆகும். இதுவும், இடை நிலை மனுதான். இதற்கும் அப்பிடவிட், மனு வைக்க வேண்டும். அப்பிடவிட், ஒருமையில் இருக்க வேண்டும். அதாவது, நான், கேட்கிறேன் என்று வர வேண்டும். ஆனால், பிராதோ, வாதி, வாதி கோருகிறார் என்று அந்த நடையில் வர வேண்டும். ஒரு பொதுவான நலத்திற்கு எல்லா நபர்களுக்கும் ஒரே நபரே வழக்கு நடத்த, நீதிமன்றம் அனுமதி கொடுக்க வேண்டும். அதற்குதான், இந்த மனு. வழக்கம் போல, அப்பிடவிட், இதில் நீங்கள் ஏன் ஒரு நபரே இந்த வழக்கை நடத்த வேண்டும் என்று காரணம் கூற வேண்டும. அதே போல மனுவை, ஆர்டர் 1, விதி 8 இன் படி தாக்கல் செய்ய வேண்டும். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், இவ்வழக்கில் ஒன்றாம் வாதியே, பிற வாதிகளுக்காக, இந்த வழக்கை நடத்த, உத்தரவிட வேண்டியது, அவசியமாயும், நியாயமான்யும் உள்ளது என முடியுங்கள். ஒவ்வொரு இடை நிலை மனுவில் இரண்டு ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டுங்கள். இதன் கீழே, படி மெமோ. அதாவது, பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் வைக்க வேண்டும். பிராது copy, நோட்டீஸ், படி மெமோ, போஸ்டல் கவர் மற்றும், அஞ்சல் ஒப்புதல் அட்டை ஆகியவற்றை வைக்க வேண்டும். ஒரு எதிர்பார்ட்டி க்கு உள்ளூர் என்றால் ஐந்து ரூபாய் மற்றும் போஸ்டல் ஸ்டாம்ப் முப்பத்தைந்து ருபாய் ஒட்டுங்கள். பிரதிவாதி குடி இருப்பது வேறு நீதிமன்றம் மூலம் போகும் என்றால், கூடுதலாக பத்து ரூபாய், ஒரு நபருக்கு ஓட்டுவது நல்லது, நீதிமன்ற வில்லை. பிராதுக்கு ஒரு டாக்கட் வாங்கி வைத்து, கூடுதலாக நான்கு பச்சை காகிதங்கள் பிராதின் அடியில் வைத்து, பிராது டாக்கட், அதன் மேல் நான்கு கூடுதல் ஷீட்ஸ், அதன் மேல் பிராது, அதன் மேல் கோர்ட் பீஸ், அதன் மேல் valuation சீட் வைத்து தைத்து கொள்ளுங்கள். இப்போது, எல்லாம் தயார். இனி, இந்த வழக்கை இன்றே, நீதிமன்றம் கோப்பிற்கு எடுக்க வேண்டுமானால், emergent மனு மற்றும் அப்பிடவிட் வைக்க வேண்டும். இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் மனுவில் ஒட்டுங்கள். இதை மேலே வைத்து, காலை பத்து முப்பதுக்கு நீதிபதியிடம் சமர்ப்பியுங்கள். இதில், வழக்கு முடியும்வரை, உருத்து கட்டளை வேண்டும் என்றால், அதற்கு தனி அப்பிடவிட், மனு. மனு ஆர்டர் 39, விதி 1 இன் படி. அப்பிடவிட், வழக்கம் போலதான். அதில் கூடுதலாக, இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு இழப்பு ஏற்படும். எனக்கு prima facie case and balance of convenience உள்ளது என சேர்த்து கொள்ளுங்கள். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், எதிர்மனுதார் / பிரதிவாதி, வழக்கு முடியும்வரை, தாவா சொத்தை பயன்படுத்தக்கூடாது என இடைக்கால உருத்து கட்டளை வழங்கும்படிக்கும்,அதன் தொடர்ச்சியாக, இன்று, ஒரு exparte ad-interim injunction இம்மனு முடியும்வரை தரும்படிக்கும், பிரார்த்திக்கபடுகிறது. இதில் ஒவ்வொரு இடை நிலை மனுவுக்கும், படி மெமோ வைக்க வேண்டும். dispense வித் மனுவுக்கு மட்டும் தேவை இல்லை. படி, பிராதில் சொன்ன படிதான். ஒரு நபருக்கு ஐந்து ரூபாய். முடிந்தால், ஒரு வழக்கறிஞரிடம் ரெடி செய்து வாங்கி கொள்ளுங்கள். அல்லது நீங்கள் தயார் செய்து, ஒரு வழக்கறிஞரிடம் காண்பித்து கொள்ளுங்கள். அதன் பின்பு, file செய்வது நல்லது. இது ஒரு மாதிரியே. இதில் நீங்கள் வழக்கை நன்றாக சட்டப்படி எழுதினால்தான், வழக்கு வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஒரே நாளில் நம்பர் ஆகி விடும், சரியாக இருந்தால். இடைக்கால உறுத்து கட்டளையும், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு. அசல் ஆவணங்களை வைத்தால், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு அப்பிடவிட், மனு ஆகியவற்றுக்கும் டாக்கட் போட்டு கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...