எரிவாயு வினியோக குறைகள் விவாத பொருள் அனுப்புதல் சார்பாக.


பெறுனர்

                உயர்திரு. ஆணையாளர் அவர்கள்
                உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
                எழிலகம், சேப்பாக்கம் சென்னை.

பொருள்:       மாநில நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் /
எரிவாயு வினியோக குறைகள்  விவாத பொருள் அனுப்புதல் சார்பாக.

பார்வை ;           ஆணையாளர் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அவர்களின் கடிதம் எண் ந. க. எண். நு.பா.2/001691/2019  நாள் ; 07.02.2019

அம்மையீர், அய்யா அவர்களுக்கு வணக்கம்,

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நீலகிரி சார்பில் கீழ்கண்ட விவாத பொருட்கள் மாநில நுகர்வோர் காலாண்டு கூட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றோம்.  தக்க நடவடிக்கை எடுத்து குறைகளை களைய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கின்றோம்.

விவாத பொருள் 1

எரிவாயு வினியோகம் செய்யும் பலருக்கு அரசின் மானியம் முறையாக கிடைப்பதில்லை.  மானியம் வங்கியில் செலுத்தப்படுவதாக கூறுகின்றனர்.  ஆனால் வங்கியில் வரவில்லை என்கின்றனர்.  ஆன்லைன் மூலம் புகார் அளித்தாலும் சரியான பதில் கிடைப்பதில்லை.  மக்கள் ஏமாற்றப்படும் நிலை உள்ளது.  இதன் மாற்றாக  வங்கி கணக்கு புத்தகம் மற்றும் எரிவாயு இணைப்பு குறித்த தகவல்களை வங்கியில் மானியம் கிடைக்கவில்லை என புகார் தெரிவிப்போருக்கு சரிபார்த்து தர ஏஜென்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
               
விவாத பொருள் 2

எரிவாயு வினியோகத்திற்கு போக்குவரத்து கட்டணம் என தனியாக வசூலிக்கின்றனர். வீடுகளில் வினியோகம் அதற்கான தொகை ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 50 வீதம் எரிவாயு நிறுவணங்கள் தருவதை போதும் என்ற அடிப்படையிலேயே உரிமம் பெற்ற இவர்கள்  தனியாக போக்குவரத்து கட்டணம் வசூலிப்பது எந்தவகையில் நியாயம்.  அதற்கு உரிய ரசீதும் தருவதில்லை.  இதனால் எரிவாயு நுகர்வோர்களிடம் பல லட்சம் ரூபாய் தினசரி ஏமாற்றி பறிக்கும் நிலை உள்ளது.  இதனை வரன்முறைபடுத்த வேண்டும்.

அதுபோல இன்சூரண்ஸ் என்ற பெயரில் ரூபாய் 177 வீதம் பலரிடம் வசூலிக்கப்பட்டுள்ளது.  எரிவாயு சிலிண்டர் வாங்கும் ஒவ்வொரு முறையும் அதற்கு செலுத்தும் தொகையில் இன்சூரண்ஸ் பிடித்தம் செய்யும்போது  தனியாக எதற்காக இன்சூரண்ஸ் வாங்கப்படுகின்றது.  எனவே மேற்படி ரூபாய் 177 வீதம் வசூலித்த பணத்தை சம்பந்தபட்ட ஏஜென்சிகள் மூலம் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலையில் முரன்பாடுகள் வருகின்றன.  எரிவாயு தேவைக்கு பதிவு செய்யும்போது வரும் விலை, வாங்கும்போது வரும் விலை என இருவேறு விலைகள் வாங்கப்படுவதாக புகார்கள் எழுகின்றது.  வினியோகம் செய்யும் போது உள்ள விலை மக்களுக்கு சரியாக தெளிவுபடுத்த வேண்டும்.

விவாத பொருள் 3.

தற்போது வழங்கப்பட்டு வரும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெறுபவர்களுக்கு பதிவு செய்வதில்  முறைகேடு எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.  பலருக்கு விண்ணப்பித்து கிடைக்கவில்லை எனவும் சிலருக்கு உடனே கிடைக்கிறது எனவும்,  இதனால் ஏஜென்சிகள் பணம் பெற்றுக்கொண்டு இணைப்பு வழங்குகின்றது என்ற குற்றசாட்டும் உள்ளது. 



அதனை சரி செய்து அனைத்து நியாய விலை கடைகள் அருகில் சூழற்சி முறையில் முகாமிட்டு தேவை உள்ளவர்களுக்கு லேப்டாப் மூலம் அங்கேயே இணையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்வதன் மூலம் அவர்களுக்கு எளிதில் எரிவாயு இணைப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.  அதுபோல எரிவாயு இணைப்பு பெற்றது குறித்த தகவல் ரேசன் கடைகளுக்கும் பதிவாகும்,  மக்களும் அலைகழிக்கப்படாமல் எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவாத பொருள் 4
.
எரிவாயு சிலிண்டர் எடையை பரிசோதித்து பெற எடையளவு கருவி வாகணத்தில் வைத்திருக்க வேண்டும் எனவும்,  எடையை பரிசோதித்து தரப்படும் எனவும் கூறப்பட்டாலும் வாகணங்களில் எடையளவு கருவி உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது.  அதுபோல எடையிட்டு கொடுப்பதில்லை. கேட்டால் மறுப்பு தெரிவிக்கின்றனர். 

அதுபோல வழங்கும் சிலிண்டர்கள் வாகணங்களில் இருந்து தூக்கி போடுவதாலும்,  பழையனவாகியதாலும்,  அடிப்பக்கம் சிறிய ஓட்டைகள் ஏற்பட்டு கசிவு ஏற்படும் நிலை உள்ளது.  பழைய சிலிண்டர்கள் மாற்றிடவும், சரியான எடையளவுடன் சிலிண்டர்கள் வினியோகிககவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவாத பொருள்.5

எரிவாயு காலாண்டு கூட்டம் வட்டஅளவில் முறையாக நடத்தப்படுவதில்லை.  வருவாய் கோட்டாட்சியர் கூட சில நேரங்களில் கூட்டத்திற்கு வருவதேயில்லை.  இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் எரிவாயு கூட்டம் நடைபெறுவதாக செய்திதாள்களில் முதல் நாள் அறிவிப்பு வரும் கூட்டம் நடக்கும் வட்டாசியர் அலுவகத்தில் கூட்டம் நடக்கும் தகவல் தெரியவில்லை என்று கூறி அனுப்பிவிடுகின்றனர்.  சரியான தகவல் தெரிவிப்பதில்லை. 

எரிவாயு கூட்டம் முறையாக அனைத்து வட்டத்திலும் மாதம் ஒரு வட்டம் வீதம் நடத்தவும்,  கூட்டம் நடத்தும்போது வருவாய் கோட்டாட்சியர்  அல்லது துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் கூட்டத்தில் தலைமையேற்று நடத்தவும், எரிவாயு வினியோக மண்டல அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் கூட்டம் நடத்தப்படவேண்டும்.  அதில் எண்ணை நிறுவண மண்டல மேலாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டியது அவசியம்                இது 6 மாதத்திற்கு ஒரு முறையேனும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

எரிவாயு சேமிப்பு மற்றும் எரிவாயு சிக்கணம், எரிவாயு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை எல்லா மக்களும் பயன்படும் வகையில் அடிக்கடி நடத்திடவும் எரிவாயு நிறுவணங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

 மேற்கொண்ட விவாதபொருட்கள் குறித்து தக்க நடவடிக்கை எடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இப்படிக்கு

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...