தேர்தல்நுகர்வோர் அமைப்புகள் சம்பந்தமான ஆலோசனையில்


தேர்தல் சம்பந்தமான ஆலோசனையில்

நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் போது நுகர்வோர் அமைப்பு பிரதிநிதி கட்டாயம் ஒருவர் நியமிக்கப்படவேண்டும். 

நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் நுகர்வோர் அமைப்பினர் மற்றும் நுகர்வோர் வழக்கறிஞர் உதவியில்லாமல் நேரடியாக வழக்கு தொடரும்போது எதிர்மனுதாரர் வழக்கறிஞர் நியமிக்க தடை விதிக்க வேண்டும். 

நுகர்வோர் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள நுகர்வோர் அமைப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும்.  நிகழ்ச்சி நடத்தும் முன் பாதி தொகை நிகழ்ச்சி முடிந்தபின் மீதி செலவின தொகை வழங்கிட வேண்டும்.  

குறிப்பாக நுகர்வோர் பாதுகாப்பு துறை. தர நிர்னய அமைவனம், சில்க் மார்க் எரிவாயு நுகர்வோர் விழிப்புணர்வு உணவு கலப்பட விழிப்புணர்வு போன்றவை நடத்தும் போது நுகர்வோர் அமைப்புகள் மூலம் நடத்த நடவடிக்கை தேவை.  அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகள் இயங்கஅரசு சார்பில் நிதி உதவி அளிக்க வேண்டும்.

மாவட்டங்களில் இயங்கும் வணிக நிறுவனங்கள் தங்களில் செயல்பாடுகளை குறதை்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் மாவட்ட நுகர்வோர் குழுக்களுக்கு அனுப்பி அவர்களிடம் இருந்தும் சான்றிதழ் பெற வேண்டும்.

நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடத்த வேண்டிய துறைகளில் முறையாக நுகர்வோர் கூட்டம் நடத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதோடு,  நுகர்வோர் சார்ந்த குறைபாடுகளை களைய விரைவான நடவடிக்கை எடுக்கவும் உரிய அறிவுரை தேவை.

மாவட்டந்தோறும் உணவு பகுப்பாய்வு கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விலை கண்காணிப்பு குழுக்கள் முறைபடுத்தி செயல்பட வைப்பதோடு  விலை உயர்வுகள்  மற்றும் இதர கட்டண நிர்ணயங்களை ஒழுங்குபடுத்த மேற்படி குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.  இந்த குழுவில் அங்கிகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிதுவம் இருக்க வேண்டும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நுகர்வோர் குறை தீர் மன்றங்களில் விரைவான தீர்வு பெற உரிய நடவடிக்கை எடுத்தல் அவசியம். அதன் அடிப்படையில்  வருவாய் கோட்ட அளவில் நுகர்வோர் குறை தீர் மன்றங்கள் அமைக்க வேண்டும்,  வாரம் இரண்டு நாட்களாகவது தற்போது ஆரம்பித்து அதன்பின் வழக்கு செயல்பாடுகளுக்கேற்ப தொடர்ந்து அனைத்து நாட்கள் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த நுகர்வோர் பாதுகாப்பு துறை அதாவது உணவு கலப்படம், தர நிர்ணயம், எடையளவு கட்டுபாடு, நுகர்வோர் பாதுகாப்பு, போன்ற நுகர்வேரர் சார்ந்த துறைகளை ஒருங்கிணைத்து   ஒருங்கிணைந்த நுகர்வோர் பாதுகாப்பு துறையாக அமைக்க வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் சார்ந்த குறைகளை ஒரு முகாமாக கொண்டு வந்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடைகளில் நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நுகர்வோர் ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அவர்களின் சேவையை கணக்கில் கொண்டு அவர்களுக்கு முதுமை பாதுகாப்பு மற்றம் இறந்தால் குடும்பத்திற்கு உதவி செய்யப்பட வேண்டும்.  இதனை முறைபடுத்த நுகர்வோர் வாரியம் அமைக்க வேண்டும்.

அரசு நடத்தும் நுகர்வோர் கூட்டங்களில் பஙகேற்கும் அங்கிகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்பு நுகர்வோர் ஆர்வலர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும்.



No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...