தாய் பத்திரம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
எஸ்.முருகேசன்
🌹🌹🌹🌹🙏🙏
‘உங்கள் வீட்டுத் தாய் பத்திரம் எந்த ஊரில் தொலைந்ததோ, அந்த ஊரின் காவல் நிலையத்தில் உடனே பத்திர விவரத்தை குறிப்பிட்டு காணவில்லை என்று புகார் தந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பெறுவது அவசியம். காவல் துறையினர் அந்த ஆவணத்தை யாராவது கண்டெடுத்து காவல் நிலையத்தில் தந்திருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். அல்லது விசாரிப்பார்கள். தாய் பத்திரம் கிடைக்கவில்லை என்றால்,' பத்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை' (Non Tracable) என போலீஸார் சான்றிதழ் கொடுப்பார்கள்.
இதன்பிறகு, பத்திர விவரங்கள் மற்றும் காவல் துறை அளித்த சான்றிதழுடன் உங்களின் குடும்ப வழக்குரைஞரை அணுகவும். அவர் ஆவணத்தைக் காணவில்லை, கண்டெடுப்போர் குறிப்பிட்ட காலத்துக்குள் தன்னிடம் ஒப்படைக்குமாறு இரண்டு பத்திரிகைகளில் (ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம்) விளம்பரம் செய்வார். விளம்பரம் செய்து 15 நாட்களுக்குள் ஆவணங்கள் வழக்குரைஞருக்கு கிடைத்தால் உங்களிடம் ஒப்படைப்பார்.
விளம்பரம் தந்தபின்னும் ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றால் ஆவணத்தின் நகலை (Certified copy) சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்று, விளம்பரம் செய்த பத்திரிகையுடன் இணைத்து உங்கள் வழக்குரைஞர் ஒரு சான்றிதழ் வழங்குவார். அந்தச் சான்றிதழ் மூலம் நீங்கள் மேற்குரிய சொத்தினை எந்தவொரு வில்லங்கமும் இல்லாமல் ஆண்டு அனுபவித்து வரலாம். இருப்பினும் தொலைந்த ஆவணங்கள் காலி நிலத்தினுடையது என்றால், தங்கள் மனைவி, மகள், மகன் பெயர்களில் ஒரு தான செட்டில்மென்ட் (Settlement deed) எழுதி வைத்துவிடுவது நல்லது.’’

No comments:
Post a Comment