பெறுனர்
கணம் மாவட்ட நீதிபதி
அவர்கள்
மாவட்ட நீதிமன்றம் உதகை.
பொருள் : கூடலூர்
போக்குவரத்து கிளை கழகம் மூலம் இயக்கப்பட்ட
அரசு பேருந்துகள்
நிறுத்தப்பட்டதை மீண்டும் இயக்க
முறையாக பராமரித்து
இயக்க நடவடிக்கை எடுத்து
உதவுமாறு கேட்டல்
சார்பாக.
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்
தமிழ்நாடு
அரசு போக்குவரத்து கழகம் கூடலூர் கிளை சார்பில் கூடலூர் வைத்திரி பேருந்தும் கூடலூர்
பத்தேரி வழித்தட பேருந்தும் பல ஆண்டுகாளக இயக்கப்பட்டது. இவை தற்போது தீடிரென் நிறுத்தப்பட்டுள்ளது.
வைத்திரி
செல்லும் பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு
மற்றும் தனியார் நிறுவணங்களில் பணிபுரிவோர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பேருந்துகள்
நிறுத்த கூறப்படும் காரணம் வருவாய் இல்லை என்பது,
ஆனால் பேருந்தில் காலை மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதில் பெரும்பாலும் அரசின் இலவச பயணஅனுமதி திட்டத்தின்
பயணடையும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் இவர்கள்
இந்த பேருந்துகளை மட்டுமே நம்பி உள்ளனர்.
இலவச
அனுமதி பெற்றவர்கள் அதிகம் பயன்படுத்துவதால் பயணகட்டணம் செலுத்தி பயணிப்போர் குறைவாக
செல்லும் நிலை ஏற்படுகின்றது. இதனால் வருவாய் இழப்பு ஏற்படலாம், அதற்கு மக்கள் பொறுப்பல்ல என்பதும் குறிப்பிடதக்கது.
பேருந்தில்
பயணம் செய்பவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர். அதுபோல அரசு இலவச பயண அனுமதி வழங்கியதாலே மாணவர்களும்
இலவசமாக பயணிக்கின்றனர். அனுமதித்த அளவை விட
இருமடங்கு பயணிகள் அதிகமாக செல்லும் போது பேருந்து நஷ்டத்தில் இயங்குவதற்கு மக்கள்
பெறுப்பல்ல என்பதும் குறிப்பிடதக்கது.
குறிப்பாக
தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு வசதி மேப்பாடி அருகில் உள்ள அரப்பட்டா பகுதியில்
உள்ள விம்ஸ் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடலூர் பந்தலூர் பகுதி மக்கள் மேல் சிகிச்சை அறுவை
சிகிச்சை பெற கோவைக்கு சென்றுவர இயலாத நிலையில் இந்த மருத்துவமனை பெரிதும் உதவியாக
உள்ளது.
அதுபோல
சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளிக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கும்
மருத்துவ தேவைக்கு சென்று வர இப்பேருந்துகள் உதவியாக உள்ளது,
வைத்திரி
பகுதியில் செயல்படும் விம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ தேவைக்கு செல்பவர்கள் அதிகம் நம்பியுள்ள
வைத்திரி மற்றும் கள்ளிக்கோட்டை பேருந்துகளை நிறுத்தியுள்ளது அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை எற்படுத்தியுள்ளது.
அதுபோல
கூடலூர் பந்தலூர் வழித்தடத்தில் தனியார் வாகணங்கள் இயக்க தடை விதிக்க்ப்பட்டு அதற்கு
பதிலாக அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சிலநாட்கள்
இயக்க்ப்பட்ட கூடலூர் பந்தலூர் பேருந்துகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்
பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் போக்குவரத்து வசதி
இன்றி பாதிக்கப்படுகின்றனர்.
எனவே
மேற்படி வைத்திரி் மற்றும் கூடலூர் பந்தலூர் வழித்தடம் மற்றும் நிறுத்தப்பட்ட பேருந்துகளை
மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கும் பேருந்துகள்
பலவும் அதன் பாகங்கள் உடைந்தும் சேதமடைந்தும் காணப்படுகின்றது. இவை பல 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒடகூடியவையாக உள்ளது.
இதனால்
இதன் பாகங்கள் பலவும் சேதமடைந்து காணப்படுகின்றது. மேற்கூரைகள் உடைந்தும், பக்கவாட்டு தகரங்கள் உடைந்தும் சீட்டுகள் சேதமடைந்தும்
காணப்படுகின்றது.
மழை
காலங்களில் பேருந்துகள் மேற்கூரை பழுது காரணமாக ஒழுகும் சூழ்நிலையும் உள்ளது , இதனால்
பயணிகள் பேருந்துகளின் உள்ளேயே குடை பிடிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்,
அதுபோல கல்லூரி மாணவர்களின் நலன்கருதி
கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள்
இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
No comments:
Post a Comment