பேருந்துகள் குறைப்பு மாணவர்கள் மக்கள் தவிப்பு

அரசு பேருந்துகள் முறையாக இயக்காததினால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  கல்லூரி மாணவர்கள் படிகட்டுகளில் தொங்கி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கூடலூர் கிளை சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பல வெளி மாவட்டங்களுக்கு வழித்தடம் நீட்டித்து இயக்கபடுகின்றது.  இதனால் உள்ளூர் கிராம பகுதிகளுக்கு இயக்கும் பேருந்துகள் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்தி்ற்கு பெரிதும் பாதிக்கப்பட்டள்ளனர்.

பந்தலூர் கூடலூர் இடையே தனியார் வாகணங்கள் இயக்குவதை தடை செய்து அரசு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்தது  அதன்படி போக்குவரத்து கழகம் இயக்கிய பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல கள்ளிக்கோட்டை, வைத்திரி, பத்தேரி உள்ளிட்ட  பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

 இதனால்  பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் தங்கள் தேவைக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் கிடைக்கும் பேருந்துகளில் அடித்து பிடித்து ஏறி செல்கின்றனர்.  

இதில் கல்லூரி மாணவர்களை முறையாக நிறுத்தி ஏற்றி செல்வதில்லை என்று புகாரும் தெரிவிக்கின்றனர்.  சிலர் மரியாதை குறைவாகவும் நடத்துவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

கல்லூரி மாணவர்கள் நிற்கும் கோழிபாலம், மரபாலம், ஆமைக்குளம் ஆகிய பகுதிகளில் மாணவர்கள் பேருந்துகளில்  எறிகொண்டிருக்கும் போதே பேருந்துகளை நகர்த்துவதால் மாணவர்கள் தொங்கி கொண்டே செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதனால் மாணவர்கள் தவறி விழுந்தால் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
ஏற்கனவே சேரம்படி செல்லும் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் நெரிசலில் நின்று கொண்டு பயணம் செய்தபோது தேவாலா கைத்தக்கொல்லி பகுதியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் இரு மாணவர்கள் அடிப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அரசு இலவச பயணத்திற்கான அடையாள அட்டை வழங்கியும், கல்லூரி பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி  பேருந்தில் இலவச பயணம் செய்யலாம் என்று பலமுறை அறிவுறுத்தியும்,  சிலர் டிக்கெட் வாங்க செல்லி கண்டிப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.

அரசின் திட்டத்தில் மாணவர்கள் பயண்பெற இயலாத நிலையே தொடர்கிறது என்பது வேதனையானது.

மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து துறை, காவல் துறைக்கு விபத்து நடக்காமல் இருக்க  பள்ளி கல்லூரி மாணவர்கள் செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...