இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
கூடலூர் பாரதியார் கலை அறிவியல் கல்லூரி
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
காவல்துறை ஆகியன இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் மேப்பில்டு மோகன் தலைமை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, செயலாளர் சிவசுப்பிரமணியம், சுற்றுலா வாகன ஓட்டுநர் நல சங்க தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர் கல்லூரி முதல்வர் சுரேஷ் , போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வளர் காசி விஸ்வநாத், காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் துவக்கி வைத்தனர்
நிகழ்ச்சியில் கல்லூரி கண்காணிப்பாளர் ஜார்ஜ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவசங்கர், போக்குவரத்து காவல்துறை சத்யன், மற்றும் காவலர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணி கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி காந்தி சிலை, புதிய பேருந்து நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நாந்தட்டி வழியாக கோழிபாலம் கல்லூரியை அடைந்தது

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...