கவனித்து சென்றால் கவலை உங்களுக்கு இல்லை...!!

சாலையிலுள்ள போக்குவரத்து சைகைகள் !

சிவப்பு விளக்கு :

👉 சிவப்பு விளக்கு எரிந்தால் அனைத்து வாகனங்களும் சாலையின் அகல வாக்கில் வரையப்பட்டிருக்கும் வெள்ளை கோட்டிற்கு முன் நிற்க வேண்டும்.

பச்சை விளக்கு :
👉 பச்சை விளக்கு எரிந்தால் வெள்ளை கோட்டிற்கு முன் நின்றிருக்கும் வாகனங்கள் செல்லலாம்.

மஞ்சள் விளக்கு :

👉 கவனி என்று தானே நினைக்கிறீர்கள். ஏறக்குறைய அதுதான், ஆனால் மேலும் சற்று தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

👉 மஞ்சள் விளக்கு எரியும்போது, நாம் அகலவாக்கில் இருக்கும் வெள்ளைக் கோட்டைத் தாண்டி இருந்தோம் என்றால், நாம் அந்த சந்திப்பைக் கடந்து விடலாம். 

மாறாக, மஞ்சளின் போது நாம் அந்த வெள்ளைக் கோட்டிற்கு முன்னால் இருந்தால், கோட்டிற்கு முன்பே வாகனத்தை நிறுத்திவிட வேண்டும்.

மஞ்சளும், சிவப்பும் :

👉 சில இடங்களில் சிவப்பிற்கு அடுத்து பச்சை வருவதற்கு முன்பாக மஞ்சளும், சிவப்பும் ஒருசேர ஒளிரும்.

👉 இது நிறுத்தத்தில் இருக்கும் வாகனங்கள், புறப்பட தயாராக வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

சிவப்பு விளக்கு மற்றும் 
இடதுபுறம் சைகை எரிந்தால் :

👉 இந்த சைகை இருந்தால் வாகனங்கள் இடதுபுறம் செல்ல வேண்டும்.

வலதுபுறம் சைகை எரிந்தால் :

👉 இந்த சைகை இருந்தால் வாகனங்கள் வலதுபுறம் செல்ல வேண்டும்.

பாதசாரிகளுக்கான சைகை :

👉 பாதசாரிகளுக்கான சைகை சிவப்பு நிறம் எரிந்தால் நிற்க வேண்டும்.

👉 பாதசாரிகளுக்கான சைகை பச்சை நிறம் எரிந்தால் சாலையை கடக்கலாம்.

பொறுப்புடன் ஓட்டுவோம்! 
சிறப்புடன் வாழ்வோம்!

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்



No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...