பெறுனர்
மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழ்நாடு அரசு சென்னை
உயர்திரு தலைவர் அவர்கள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
சென்னை
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு
வணக்கம், நீலகிரி மாவட்டத்தில் மின்சார பகிர்மான வட்டத்தின் சிறப்பான பணிகளால் மின் பயனாளிகள் சிறப்பான சேவையை பெற்றனர். ஆனால் தற்போது மின் சேவையில் சுணக்கம் காணப்படுகின்றது.
மின்பகிர்மான வட்டத்தில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மின் பழுதுகளை விரைவாக சீரமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கடந்த வாரங்களில் மே 10 மற்றும் 11ம் தேதிகளில் பெருமழை பெய்தது. இதில் காற்று அதிகமாக தாக்கியதில் மின் கம்பங்கள் பழுதடைந்தது. அதுபோல் மின் வழித்தடங்களில் பல சேதராங்கள் ஏற்பட்டன.
இந்த பாதிப்புகளை சரி செய்ய போதிய ஆட்கள் இல்லாத நிலையால் தற்போது வரை மின் சீரமைப்பு பணிகள் முடிவடையாமல் பல குடும்பங்கள் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மின் வழித்தடங்கள் உள்ளன. இவை பெரும் காற்றில் மரங்கள் முறிந்து விழுவதாலும், காற்றின் வேகத்திற்கு தாக்குபிடிக்க முடியாத நிலையாலும் சேதமடைகின்றன.
இதனால் மின் இணைப்பு பெற்ற பல தர நுகர்வோர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
நகல் உயர்திரு. முதன்மை பொறியாளர் அவர்கள்
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சென்னை
உயர்திரு. தலைமை பொறியாளர் அவர்கள் கோவை
உயர்திரு. மேற்பார்வை பெறியாளர் அவர்கள் உதகை.
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்
மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழ்நாடு அரசு சென்னை
உயர்திரு தலைவர் அவர்கள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
சென்னை
மின் சீரமைப்பு பணிகள் பாதிப்பு விரைவில் பணியாளர்கள் நியமிக்கவும்,
தற்காலிக பணியாளர்கள் நியமித்து பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு
வணக்கம், நீலகிரி மாவட்டத்தில் மின்சார பகிர்மான வட்டத்தின் சிறப்பான பணிகளால் மின் பயனாளிகள் சிறப்பான சேவையை பெற்றனர். ஆனால் தற்போது மின் சேவையில் சுணக்கம் காணப்படுகின்றது.
மின்பகிர்மான வட்டத்தில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மின் பழுதுகளை விரைவாக சீரமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கடந்த வாரங்களில் மே 10 மற்றும் 11ம் தேதிகளில் பெருமழை பெய்தது. இதில் காற்று அதிகமாக தாக்கியதில் மின் கம்பங்கள் பழுதடைந்தது. அதுபோல் மின் வழித்தடங்களில் பல சேதராங்கள் ஏற்பட்டன.
இந்த பாதிப்புகளை சரி செய்ய போதிய ஆட்கள் இல்லாத நிலையால் தற்போது வரை மின் சீரமைப்பு பணிகள் முடிவடையாமல் பல குடும்பங்கள் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மின் வழித்தடங்கள் உள்ளன. இவை பெரும் காற்றில் மரங்கள் முறிந்து விழுவதாலும், காற்றின் வேகத்திற்கு தாக்குபிடிக்க முடியாத நிலையாலும் சேதமடைகின்றன.
கடந்த காலங்களில் கூடுதல் பணியாளர்கள் இருந்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்க்கொண்டனர். ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றினார்கள்.
இதனால் மழை மற்றும் புயலின் தாக்கங்களினால் மின் துண்டிப்பு மிகவும் குறைவாகவும் விரைவான சீரமைப்புகளும் இருந்தது.
ஆனால் தற்போது உள்ளூர் பணிகளை பார்க்கவே போதிய மின் ஊழியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு மின் வாரிய அலுவலகத்திற்கு ஒன்றிரண்டு லைன்மேன்
அதுபோல மின் வாரிய உதவி மின் பொறியாளர் பணியிடங்களே பெரும்பாலும்
காலியாக உள்ளது.
அதுபோல் களப்பணியில் உள்ள மின்சார ஊழியர்கள் பெருமளவு குறைவாக உள்ளதால்
மின்சார குறைபாடுகளை களையும் நிலையில் மிகவும் சுணக்கம் ஏற்படுகின்றது.
2003 தமிழ்நாடு மின்சார சட்டப்படியும், 2004 தமிழ்நாடு மின் பகிர்மான விதி தொகுப்பின் படியும் தமிழ்நாடு மின்சார மின்சார ஒழுங்கு முறை ஆணைய விதிகள் படியும் மினி்இணைப்பு கேட்கும்போது வழங்குதல் மற்றும் மின் மாற்றிகள், மின் வழங்கல் மற்றும் இதர சேவைகள் உரிய காலத்தில் வழங்க இயலாத
நிலை உள்ளது.
அதுபோல மின் தடங்கல்கள் ஏற்படும்போது மலைபிரதேசங்களில் 12 மணி நேரத்திற்குள் மின் தடங்கல்கள், மின்மாற்றியில் உள்ள தாழ்வழுத்தம் போன்றவை சர செய்ய வேண்டும் எனவும் மின் நுகர்வோரின மின் மாற்றியில் உள்ள குறைபாடுகளை 48 மணி நேரத்தில் சரி செய்ய வேண்டும் என்ற விதிகளை சரியாக செயல் படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மின் இணைப்பு பெற்ற பல தர நுகர்வோர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மின்சாரத்தை நம்பியே இன்றைய அனைத்து வித பணிகளும் உள்ளதால் இந்த
சேவை முறையாக மக்களுக்கு கிடைக்க முதற்கட்டமாக போதிய பணியாளர்கள் தேவை
என்பதை உணர்ந்து போதிய மின்கள பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என் கேட்டுக்கொள்கின்றோம்.
நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில் புயலினால் மரங்கள் மின் கம்பிகளில் விழுந்து மின் வினியோக பணிகள் மிகவும் பாதிக்க படும் நிலை உள்ளது. இதனால் பல்வேறு கிராமங்கள் மின் சேவை பெற இயலாத நிலை ஏற்படும்.
தற்போது தற்காலிக பணியாளர்கள் நியமிக்கும் பட்சத்தில் மின்வழித்தடங்களில் மின் தடை ஏற்படுத்தாக வகையில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் மேற்க்கொள்ள இயலும் இதானல் மின்தடை தவிர்க்க மின் பகிர்மான பொருட்களின் சேதங்கள் தவிர்க்க உதவும்
மின் ஊழியர்கள் நியமிக்கும் வரை தற்காலிக மின் பணியாளர்கள் குறைந்தபட்ச மாத சம்பளத்தில் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
நகல் உயர்திரு. முதன்மை பொறியாளர் அவர்கள்
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சென்னை
உயர்திரு. தலைமை பொறியாளர் அவர்கள் கோவை
உயர்திரு. மேற்பார்வை பெறியாளர் அவர்கள் உதகை.
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்
பொது செயலாளர். CCHEP. Nilgiris
No comments:
Post a Comment