நடுவட்டம் இலவச கண் சிகிச்சை முகாம்


கூடலூர்  அருகே நடுவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது உலக பார்வை நாளை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,ரீப் மினிஸ்ட்ரிஸ் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியன சார்பில்  நடுவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை மருத்துவருமான  அமராவதி ராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று கண் சம்மந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்  
முகாமில்  நடுவட்டம் டி ஆர் பஜார் ஊக்கர் டெரஸ் உள்ளிட்ட பல்வேறு  கிராம பகுதிகளை சேர்ந்த  70 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  
நிகழ்ச்சிக்கான  எற்பாடுகளை  கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் சூரியகுமார் வேலு பிள்ளை நடுவட்டம் தன்ராஜ்  செய்திருந்தனர்




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

No comments:

Post a Comment

Ckyc என்றால் என்ன

  CKYC (Central Know Your Customer) என்றால் என்ன? CKYC (Central Know Your Customer) என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட Central KYC Rec...