’ஸ்நேகா’ - கண் தானம்


’ஸ்நேகா’ - கண் தானம்



நடிகை சினேகா இன்று தனது கண்களை தானம் செய்தார். இதற்கான படிவத்தின் கையெழுத்திட்டு மருத்துவமனைக்கு அவர் வழங்கினார்.


பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஆர்வம் காட்டி வரும் சினேகா, சமீபத்தில் கூட போலியோ விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இப்போது தனது கண்களை தானம் செய்துள்ளார் சினேகா. இதற்கான விழா இன்று காலை சென்னை ராஜன் ஐ கேர் மருத்துவமனையில் நடந்தது.

கண்தான பத்திரத்தில் கையெழுத்திட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய சினேகா, "கண்தானம் செய்வதன் மூலம், வாழ்க்கையை தொடர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கிறது" என்றார்.

கண்மணிகள் வேண்டுகிறோம்!

கண்களுக்கு மை இட்டு,
சாயம் பூசி,
வசீகரிக்கும் பெண்களே!

கண்களுக்கு கண்ணாடி இட்டு,
அழகு காட்டி,
வண்டியில் பறக்கும் ஆண்களே!

நாளை ஒரு நாள்,
தேடி வரும்,
அழகு எல்லாம்,
அழிந்து போகும்!
அன்றும் உங்கள்,
கண்மணிகள்,
காட்சி காட்டும்!

எதுவும் வேண்டாம்,
நீங்கள் இறந்த பின்,
நீங்கள் முறிந்த பின்,
கண்களை தந்திடுங்கள்,
காட்சியே காணாதவர்க்கு!

மண்ணில் விதைத்தால்,
பூக்கள் பூக்கும்,
விதை அல்ல நம் கண்மணிகள்!
மனிதரில் விதைத்தால்,
காட்சிகள் பூக்கும்,
அற்புத விதைகள் நம் கண்மணிகள்!

"கண்மணிகள் வேண்டுகிறோம்"
விதைத்திடுங்கள்!

கண்களுக்கு மையிடும் பெண்களில்,
நானும் ஒருத்தி!

ஆனால்,
கண்களை மண்ணில் இடுபவர்களில்,
ஒருத்தி அல்ல!






    கண்தானம் செய்தார் சினேகா!
    தொடர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கிறது" என்றார்.
























  • ’ஸ்நேகா’ - கண் தானம்
  • ’ஸ்நேகா’ - கண் தானம் 1
  • ’ஸ்நேகா’ - கண் தானம் 2

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...