eye donation Organ donation

கண் கொடை

.
கண் கொடை அல்லது கண் தானம் என்பது ஒருவர் இறப்புக்குப் பின்பு அவருடைய கண்களைத் தானமாக அளிப்பதாகும். தானமாகப் பெறப்பட்ட கண்கள் சோதனைகளுக்குப் பின்பு அதற்கான பாதுகாப்புகளுடன் வைக்கப்படுகிறது. தானமாகப் பெறப்பட்ட கண்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக கண் வங்கிகள்செயல்படுகின்றன.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]யார் கண் தானம் செய்யலாம்?

  • ஆண், பெண் இரு பாலரும், அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம்.
  • கண் கண்ணாடி அணிந்தவர்களும் செய்யலாம்.
  • இரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் கூட தானம் செய்யலாம்.
  • ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கூட தானம் செய்யலாம்.
  • உடலில் பிற உறுப்புகளில் புற்று நோய் வந்து இறந்தவர்களும் கூட தானம் செய்யலாம்.

[தொகு]யார் கண் தானம் செய்யக் கூடாது?

[தொகு]பயன்கள்

[cchepnlg@gmail.com]சில பொதுவான தகவல்கள்

  • ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்களைத் தானமாக அளிக்க முடியும்.
  • ஒருவர் இறந்து 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அவரது கண்கள் அகற்றப்பட வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே கண்களை அகற்ற வேண்டும்.
  • கண் வங்கிக் குழுவினர் கண் தானம் செய்தவரின் வீட்டிற்கே வந்து கண்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
  • இந்த கண்களைத் தானமாக பெறும் நிகழ்வு 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்து விடும்.
  • திசு ஒற்றுமை மற்றும் தொற்று நோய் பரிசோதனைக்காக சிறிது இரத்தம் இறந்தவரின் உடலிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
  • இறந்த பின் கண்களை எடுப்பதால் முக மாறுதல்கள் ஏதும் ஏற்படாது.
  • கண் தானம் செய்வதை மத சம்பிரதாயங்கள் எதுவும் எதிர்க்கவில்லை.
  • கண் தானம் அளிப்பவரின் பெயரும், பெறுபவரின் பெயரும் ரகசியமாக வைக்கப்படும்.

கண் தானம் செய்தவரது உறவினர்கள் செய்ய வேண்டியது

கண் தானம் செய்த ஒருவர் இறந்த பின்பு அவரது உறவினர்கள் செய்ய வேண்டியவை
  • மிக அருகிலுள்ள கண் வங்கிக்கு உடனடியாக தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தகவல் அளிக்க வேண்டும்.
  • இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் சரியான முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றைத் தெளிவாக அளிக்க வேண்டும். இத்தகவல் கண் வங்கிக் குழுவினர் மிக விரைவாக வந்து சேர உதவுகிறது.
  • கண்களைத் தானமாகப் பெறுவதற்கு இறந்தவரின் கணவன், மனைவி, உடன் பிறந்தவர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரும் மற்ற சாட்சிகள் இருவரும் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • கண் தானம் செயதவர் இறந்த உடனே கண் இமைகளை மூடி வைக்க வேண்டும்.
  • இறந்தவர் உடல் இருக்குமிடத்தில் மின் விசிறியை நிறுத்தி வைக்க வேண்டும்.
  • குளிர் சாதனப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருந்தால் அதனை இயக்கத்தில் வைக்கலாம்.
  • தலையணையை வைத்து இறந்தவரது தலையைச் சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.

[தொகு]சில இந்தியப் புள்ளி விவரங்கள்

  • இந்தியாவில் பார்வையற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சம்.
  • கருவிழி நோயால் பார்வையிழந்து கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 10 இலட்சம்.
  • ஒரு ஆண்டுக்குத் தேவையான கருவிழிகளின் எண்ணிக்கை 75 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை.
  • இந்தியாவில் கண் தானம் மூலம் கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கை 22 ஆயிரம். இந்த எண்ணிக்கையில் தரப் பரிசோதனைகளுக்குப் பின்பு நல்ல நிலையில் கிடைப்பது 40 முதல் 50 சதவிகிதம்தான். பிற கருவிழிகள் வேறு சில ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கண் தானம்


இந்த உலகில் எண்ணற்ற அதிசயங்களும், அற்புதங்களும் உள்ளன. அந்த அதிசயங்களையும், அற்புதங்களையும் கண்டு கழித்து இன்பமுற பயன்படுவது கண் என்ற இன்றியமையாத உறுப்பு தான். மேலும் மனிதன் நல்லவற்றையும்,தீயவற்றையும் காண்பதற்கு பயன்படுவதும் கண் தான். இவ்வாறு தனிச்சிறப்பு பெற்று விளங்கக் கூடிய கண்பார்வையானது சிலருக்கு பிறப்பில் இருந்தே கிடையாது. சிலருக்கு ஆபத்து மற்றும் இதர குறைபாடுகளின் மூலமும் கண்பார்வை பறிபோகின்றது. இவ்வாறு இருக்கக் கூடியவர்களுக்கு நாம் கண் தானம் செய்வதின் மூலம் வாழ்வளிக்கலாம். கண் தானம் என்பதை நாம் வாழும் போதே செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது, நமது இறப்பிற்குப் பிறகு கூட செய்யலாம். கண் பார்வையற்றவர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். நமது இறப்பிற்குப் பிறகு சில மணி நேரங்கள் வரை கண் துடிப்பு இருக்கும். எனவே நாம் தாரளாமாக கண் தானம் செய்யலாம். இவ்வாறு நாம் செய்யக்கூடிய கண் தானமானது ஒரு மிகப்பெரிய சேவை. கண் தானம் செய்வதின் மூலம் கண் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கலாம். இப்பேற்பட்ட கண் தானம் என்ற உன்னதமான சேவையை நாமும் செய்ய உறுதியேற்போம், பிறரையும் செய்யத் தூண்டுவோம்.

தானங்களில் சிறந்த தானம் கண் தானம்.............

கண் வரைபடம்




No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...