கண் தானம் செய்வோம்........ கடவுளை காண்போம்...!!!!!!!


கண் தானம் செய்வோம்........ 

கடவுளை காண்போம்...!!!!!!!


இன்றைய நடைமுறையில் பார்வை இழப்பு என்னும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் இந்தியா உள்ளது. இன்றைய நிலவரப்படி , ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், பல  லட்சம் பேர், “கார்னியல்’' பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 கண் தானம்
இதில், மிகவும் வருந்தத்தக்க விஷயம் 60 சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இவர்களுக்கு நம்மால் நிச்சயமாக உதவ முடியும். அதுவும்  கண் தானத்தினால் மட்டுமே முடியும். மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் மட்டும் போதும்.

இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவார்கள். இதற்கு தேவை மனப்பக்குவம் மட்டுமே. இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். எனவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும்.

இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மட்டும் இல்லாமல், இறந்த பிறகும் இவர்கள் மூலம் அவர்கள் வாழ்வார்கள் என்றே சொல்ல வேண்டும். மக்கள் தொகையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவாக இருந்தாலும், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிக அளவில்  இலங்கையில் இருந்தே தானமாக பெறப்பட்டு வருகிறது.

இதற்கு மிக முக்கிய காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாய தானம் ஆகும். ஆனால், இங்கே இன்னும் அதற்கான விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. அந்த விழிப்புணர்வு நம் நாட்டிலும் வந்துவிட்டால், நம் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட நாம் கண் தானம் செய்யலாம்.

கண் தானம்

ஜெ.ராஜ்குமார்
பெற்றெடுத்த அன்னையும்
கற்றுத் தந்த தந்தையும்
காதல் சொல்லும் தோழியும்
ஊற்றெடுக்கும் அருவியும்
பொங்கிடும் கங்கையும்
காலைச் சூரியனும்
நிலவு வெளிச்சமும்
அந்தி மழையும்
பனித் துளியும்
பரந்திருக்கும் பூமியும்
பார்க்க முடியாமல் 
செய்துவிட்டான் – என்
கண்ணின் மணியில் – கடவுள்
குற்றம் இழைத்து விட்டான்…!
மண்ணில் சிறந்த -
மாமனிதனையும் படைத்து விட்டான்
கண்ணைத் தானம் தரும் – 
கலையை அவனுக்கு வித்திட்டான்!
மாமனிதன் ஒருவன் -
கண்தானம் செய்ததால் 
என்வானம் திறந்திருச்சி இன்று
என் வாழ்க்கை விடிஞ்சிருச்சி இன்று!
பொன்போன்ற கண்ணைப்
படைத்த ஆண்டவனுக்கு -
நன்றி சொல்வோம்!
கண்ணைத் தானம் கொடுத்த – மாமனிதனுக்கு
சொர்க்கத்தில் இடம் கிடைக்க – இறைவனிடம்
வேண்டிச் செல்வோம் …!
 

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...