பந்தலூர் புனித சேவியர் உயர்நிலைப்பள்ளியில்
சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு
பந்தலூர், செப். 5:
கூடலூர் நுகர்வோர், மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அரசு உணவுப்பொருள் வழங்கல் துறை, நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியவற்றின் சார்பில், சுகாதார விழிப்புணர்வின் அவசியம் என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவி மஞ்சு வரவேற்றார்.
கருத்தரங்குக்கு நுகர்வோர் மன்ற தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து, ஊட்டச்சத்து குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள், சத்தான உணவு உண்பதன் அவசியம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதன் வழிமுறைகள் குறித்து பேசினார்.
பந்தலூர் அரசு மருத்துவமனையின் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் யசோதரன், பேசியதாவது:
இந்தியாவில் காச நோய் பாதிப்பால் 3 நிமிடத்திற்கு 2 பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதன் காரணமாக இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. தொடர் காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று காசநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தக்க விழிப்புணர்வு இருந்தால், எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம். ஒவ்வொரு தலைமை அரசு மருத்துவமனையிலும் நம்பிக்கை மையம் உள்ளது. அங்கு சென்று பரிசோதனை மற்றும் ஆலோசனை பெறலாம்� என்றார்.
இக்கருத்தரங்கில், நுகர்வோர் மைய நிர்வாகி தனிஷ்லாஸ், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், மாணவி கீர்த்தனா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment