ஊட்டி,:கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஆகியவை சார்பில் ஊட்டியில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நுகர்வோர் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசுகையில், நுகர்வோர் நலன் காக்கும் வகையில் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதை சார்ந்து பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பொருட்களின் தரங்கள் அறிய தரக்குறியீடுகளை வழங்கியுள்ளது. தரமான பொருட்களை வாங்குவதால் நமது பணத்திற்குரிய மதிப்பினை பெற முடிகிறது என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், தரமான பொருட்களை அடையாளம் காணும் வகையில் இந்திய தர கட்டுபாட்டு சட்டம் 1986ன்படி இந்திய தர அமைவனத்தை அமைத்துள்ளது. இந்த அமைவனம் பொருட்களுக்கான தர குறியீடுகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மின் உபயோகம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரையும் உணவு பொருட்களுக்கு அக்மார்க் முத்திரையும், பழவகை உணவு பொருட்களுக்கு எப்.பி.ஒ.,முத்திரையையும், சில்க்மார்க், பிஇஇ., உள்ளிட்ட பல முத்திரைகளை வழங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தை ஆய்வு செய்து அவை முறைப்படி தயாரிப்பதை உறுதி செய்து இம்முத்திரைகளை வழங்குகிறது. இம்முத்திரைகளை பார்த்து வாங்குவதால் 90 சதவீத நம்பகத்தன்மை ஏற்படுகிறது. நகைக்கடைகளில் ஆல்மார்க் முத்திரை பெற அரசு வலியுறுத்தி உள்ளது. இதனால் ஆல்மார்க் முத்திரை இருந்தால் தங்கத்திற்கான நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது எனவே நுகர்வோர்களாகிய பொதுமக்கள் பொருட்களை வாங்கும் பொது தரமானதா தரக்கட்டுபாட்டு முத்திரைகளை பெற்றுள்ளதா என பார்த்து வாங்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி மைய உதவியாளர் சதீஸ் செய்திருந்தார்.

No comments:
Post a Comment