தேவர்சோலை எஸ்டேட்டில் காட்டெருமைகள் அட்டகாசம்


தேவர்சோலை எஸ்டேட்டில்  காட்டெருமைகள் அட்டகாசம்
ஊட்டி, மார்ச் 27:
ஊட்டி அருகேயுள்ள தேவர்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சமீப காலமாக உலா வரும் ஒற்றை காட்டெருமையால் வேலை செல்லும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஊட்டி & மஞ்சூர் சாலையில் உள்ள கைகாட்டி அருகில் தேவர்சோலை கிராமம் உள்ளது. தேவ ர்சோலை பகுதியை சுற்றிலும் தேயிலை எஸ்டேட் உள்ளது. இப்பகுதி மக்கள் தேயிலை எஸ்டேட்டில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்கின்றனர்.சிலர் மலை காய்கறிகளான கேரட், உருளைகிழங்கு விவசாயம் மேற்� காண்டு வருகின்றனர். தேவர்சோலை கிராமத்திற்கு அருகில் உள்ள பிக்கோள், காசோலை, கைகாட்டி போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இந்த வனங்களில் பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் காட்டெருமை, கரடி, காட்டுபன்றி போன்ற வன விலங்குகள் இரவு நேரங்களில் கிராம பகுதிகளுக்குள் வரும். அவ்வாறு வரும் விலங்குகள் அவ்வப்போது தேவர்சோலை கிராமத்திற்கும் செல்லும். அங்கு பயிரிடப்பட்டிருக்கும் காய்கறி பயிர்களையும் நாசப்படுத்திவிடும். சில சமயங்களில் வேலைக்கு செல்பவர்களையும் துரத்தி விடும்.
இந்நிலையில், தேவர்� சாலை குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் சமீப காலமாக ஒற்றை காட்டெருமை ஒன்று உலா வருகிறது. இந்த காட்டெருமை தேயிலை பறிப்பதற்காக செல்லும் தொழிலாளர்களை துரத்துகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் பசு மாடு காட்டெருமையின் தாக்குதலில் பலியானது. இந்த ஒற்றை காட்டெருமை வனப்பகுதிக்கு செல்லாமல் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளிலேயே உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே காட்டெருமையை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...