நுகர்வோர் கவுன்சில் கூட்டம் 15 ஆண்டுகளாக பயணப்படி மறுப்பு : ஐகோர்ட் உத்தரவு



மதுரை: விருதுநகர் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற கவுரவ நிர்வாகிக்கு, 15 ஆண்டுகளாக பயணப்படி வழங்கவில்லை என தாக்கலான வழக்கில், அரசு விதிப்படி வழங்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 
ராஜபாளையம் சேதுராமராஜா தாக்கல் செய்த மனு: நான் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அலுவல்சாரா உறுப்பினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், நுகர்வோர் கவுன்சில் கூட்டம் ஆண்டுக்கு 6 முறை நடக்கும். அரசு உத்தரவுப்படி கவுன்சில் உறுப்பினர்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்க வேண்டும். நான் 15 ஆண்டுகளில், 90 கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். இதுவரை, ஒருமுறைகூட படி வழங்கவில்லை. பயணம் மற்றும் இதர படிகள் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு: பயணம், தினப்படி வழங்க வேண்டும் என, மாநில அரசின் விதிகளில் தெளிவாக உள்ளது. மனுதாரர் சம்பளம் இல்லாத, கவுரவ பதவி வகிக்கிறார். அவர், சொந்த பணத்தை செலவு செய்து கூட்டத்திற்கு வர வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. மனுதாரர், மீண்டும் கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொகையை வழங்க வேண்டும், என உத்தரவிட்டார்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=619509

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...