நுகர்வோர் பாதுகாப்பு

நுகர்வோர்

இறுதிப் பாவனை நோக்கம் குறித்து பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்து பயன்படுத்துபவர் நுகர்வோர் (consumer) ஆவார். உற்பத்தியாளர் அல்லது மீள் விற்பனை நோக்கத்துடன் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் நுகர்வோர் அல்லர். ஒவ்வோர் நாட்டு அரசாங்கங்களும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்துகின்றன.

இந்தியாவில்

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் படி, பகுதி 2(1) (d) பிரிவின்படி யார் காசு கொடுத்து பொருளையோ, சேவையையோ வாங்குகிறார்களோ அவர்கள் நுகர்வோர்கள்.
  • காசு கொடுத்து பொருள் வாங்குகிறவர், நுகர்வோர்.
  • காசு கொடுத்து சேவையை அனுபவிக்கிறவர், நுகர்வோர்.
  • பொருளுக்கு விலை கொடுக்கப்பட்டிருந்தால், பொருளை ஆள்பவர், நுகர்வோர். உதாரணமாக குழந்தைக்கு, பால் பவுடர், தந்தை காசு கொடுத்து வாங்கினாலும், அதை அனுபவிக்கும் குழந்தை தான் நுகர்வோர்.
  • காசு கொடுத்து சேவையை வாங்காவிடினும், காசு கொடுத்தது எவராக இருந்தாலும், சேவையை அனுபவிப்பவர் நுகர்வோர். உதாரணமாக, மகன், மகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக தந்தை பணம் கொடுத்தாலும், மருத்துவ சிகிச்சை பெற்ற மகன்,மகள் இருவரும் தான் நுகர்வோர்கள். சுருங்கச்சொன்னால், பொருள், சேவை இரண்டிற்கும் காசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • நுகர்வோர் உரிமைகள்

    நுகர்வோர் பொருட்களையும், சேவைகளையும் நுகரும் போது அவர்களிற்கு உள்ள உரிமைகளே நுகர்வோர் உரிமைகள் (Consumer rights) ஆகும். காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட வகைகளில் நுகர்வோர் உரிமைகள் வகைப்படுத்தி கூறப்பட்டு வருகின்றது. இத்தகைய நுகர்வோர் உரிமைகளை முன் வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அல்லது நிறுவனங்கள் வருமாறு.
  • அமெரிக்க ஜனாதிபதி ஜோன். எப். கென்னடி(John F. Kennedy)
  • சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனம்.

பொருளடக்கம்

கென்னடியின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்

  • பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் உரிமை -
உயிருக்கும், சுகாதாரத்துக்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை நுகர்வதில் இருந்து பாதுகாப்புப் பெறல்.
  • தெரிவு செய்து கொள்ளும் உரிமை -
விரும்பிய இடத்தில் பல்வேறுபட்ட வகையான பொருட்கள்,சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், போட்டிச் சந்தையில் அரசாங்க விதிகளிற்கு உட்பட்ட, தரமான நம்பிக்கையான பொருட்களையும், சேவைகளையும் சந்தை விலையில் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.
  • தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை -
விளம்பரங்கள், வெளிப்புற தகவல் சீட்டுக்கள்(label) மற்றும் வேறு விளம்பர வழிமுறைகளில் குறிப்பிடப்படும் தகவல்கள், விலை, நிறை போன்றவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், தவறான தகவல்களை அறிந்து சரியான தெரிவுகளை தேர்வு செய்வதற்குமான உரிமை.
  • கவனத்தை ஈர்க்கும் உரிமை -
ஒரு குறிப்பிட்ட அரசாங்கம் பொருட்கள், சேவைகள் தொடர்பாக வெளியிடும், அறிவித்தல்கள், நியாய விலைகள், பொருட்களின் தரம் என்பன தொடர்பாக அவ்வரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்குள் வசிக்கும் நுகர்வோரால் அறிந்து கொள்ளும் உரிமை.

சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனத்தின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்

  • அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை.
  • நட்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
  • சூழல் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
  • சுமூகமான சூழலில் வாழ்வதற்கான உரிமை.

நுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவம்

  1. நுகர்வோர் பொருட்கள் சேவைகளை விலையினூடாகவே நுகர்வு செய்கின்றார். இதனால் திருப்தியளித்தல் வேண்டும்.
  2. நுகர்வோர் திட்டமிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவித்தல்.
  3. போட்டியான சூழலில் நுகர்வோர் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.
  4. நுகர்வோரது உடல், உள நலம் பாதிப்படயாதவாறு திருப்தியளிக்கப்படல் வேண்டும்.

நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி

எப்போதும் ஒரு பொருளையோ சேவையையோ ஒரு நுகர்வோன் (Consumer) கொள்வனவு செய்யும் போது அவன் பின்வரும் பொறிமுறைகளிற்கு ஊடாகச் செல்கின்றான். ஆகவே இதை ஒரு மாதிரியாகக் (Model) கொள்ளலாம். இதையே நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி எனக் கூறுகின்றோம்.
  1. பிரைச்சனைகளை அடையாளம் காணல்
  2. பிரைச்சனைகளிற்கான தீர்வுகளை ஆராய்தல்
  3. தீர்வுகளில் சிறந்ததற்கு முன்னுரிமை
  4. கொள்வனவு செய்வதற்கான இறுதி முடிவு
  5. கொள்வனவு செய்தல்
இந்தப் படிமுறைகளிற்கூடாக செல்வதற்கு தேவையான நேரம் பொருள் அல்லது சேவையின் (Goods or services) பெறுமதியின் அடிப்படையில் வேறுபடும். உதாரணமாக இரண்டு ரூபாயிற்கு ஒரு சாக்லட் வாங்குவதற்கு ஒரு நுகர்வோன் எடுக்கும் நேரம் சில வினாடிகளே. ஆனால் அதேவேளை 2 கோடி பெறுமதியான ஒரு வீட்டை வாங்குவதானால் அந்த நுகர்வோன் மாதங்கள் அல்லது வருடங்கள் கூட மேற்கூறிய பொறிமுறையினூடு செல்வதற்கு செலவழிக்கலாம்.

பொதுவாக நுகர்வோனின் கொள்வனவு அவனிற்கு இருக்கும் பிரைச்சனைகளைத் தீர்க்கும் முகமாகவே இருக்கும். பிரைச்சனைகளிற்கான தீர்வுகளையே மக்கள் வாங்குகின்றார்களே தவிர பொருட்களை வாங்குவதில்லை. ஆகவே சந்தைப்படுத்தலில் (Marketing) மக்களின் குறைகளைத் தெரிந்து கொண்டு அவர்களிற்கு பொருத்தமான தீர்வைத் தருவதன் மூலமே சந்தைப் படுத்தலை அதிகரிக்கலாம்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...