ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்வரன் சிங், திடீரென மாற்றப்பட்டது, தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் அதிர்ச்சி.

உணவு வழங்கல் துறையில், கமிஷனராக பொறுப்பேற்ற, மூன்று மாதங்களில், அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்வரன் சிங், திடீரென மாற்றப்பட்டது, தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மற்றும் ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில், ரேஷன் பொருட்கள் நகர்வு, புதிய ரேஷன் கார்டு வழங்குதல் உள்ளிட்ட பொது வினியோக திட்ட செயல்பாடுகளை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜூலை, 30ம் தேதி, உணவு வழங்கல் துறை ஆணையராக, ஸ்வரன் சிங் நியமிக்கப்பட்டார். 

 ஸ்வரன் சிங் பொறுப்பேற்றதும், சூதினம் இரண்டு ரேஷன் கடையை ஆய்வு செய்ய வேண்டும்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம், பொது மக்களுக்கு, தரமான உணவு பொருட்கள், சரியான அளவில் வழங்கப்பட்டது. இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு, விலைப் புள்ளியை, 2,650 ரூபாய் வரை உயர்த்தி கேட்டன. ஸ்வரன் சிங் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, பழைய விலைக்கே, அதாவது, 2,040 ரூபாய்க்கு சப்ளை செய்ய ஒப்புக் கொண்டன. இதே நடைமுறையை பருப்பு வகை கொள்முதலிலும் பின்பற்றினார். 

இதனால், அரசியல்வாதிகளுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போனதுடன், அரசின் மானிய செலவினமும் குறைந்தது. உணவு வழங்கல் துறையில், கமிஷனராக பொறுப்பேற்ற, மூன்று மாதங்களில், அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட, ஸ்வரன் சிங், திடீரென, நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக, கோபால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
 
 இது, ரேஷன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், புதிய கமிஷனரும், பழைய அதிகாரியை போல, சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பது, ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து, உதவி ஆணையர் ஒருவர் கூறுகையில், ""உணவு வழங்கல் துறைக்கு ஆணையராக யாரை நியமித்தாலும், மூன்று மாதத்திற்குள் மாற்றப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால், முக்கிய பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது,'' என்றார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...