நான் டீக்கடை வைக்கலாம்னு இருக்கேனுங்க. டீக்கடையோடு குட்டியா ஒரு பங்க் கடையும் சின்னதா ஒரு பேக்கரி சேர்த்து வைக்கலாம்னு இருக்கேன். நமக்கு விதவிதமான டீ போட தெரிஞ்சா தானே நம்ம கடை பக்கம் கூட்டம் வரும். கிழே தரப்பட்டுள்ள டீ வகைகள் நம்ம கடையில் கிடைக்கும். டீ தயாரிக்க கூடிய முறைகளையும் உங்களுக்கு சொல்லியிருக்கேன். டீ தயாரிக்க தெரிஞ்சுக்கிட்டிங்க, அதனால நம்ம கடை பக்கம் வராம இருந்தராதிங்க. கண்டிப்பா வந்து டீயை ருசிங்க.
சூடான கொதிக்க வைத்த டீயில் பாலுக்கு பதிலாக சிறு துளி எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் சர்க்கரை போட்டு நன்றாக கலந்து குடிக்கவும்.
சூடான கார டீ
தேவையான பொருட்கள்:தண்ணீர்: 2 லிட்டர்
சர்க்கரை: 30 ml
கிராம்பு: 1/2 டீ ஸ்பூன்
ஆரஞ்ச் ஜூஸ்: 1/4 pint (1 pint - 500 ml)
2 எலுமிச்சைபழம் சாறு.
பட்டை
செய்முறை:
பட்டை, கிராம்பு இவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். டீ தூளை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை போடவும், பழச்சாறுகளை போடவும், தேவையான சூடுக்கு ஆற்றிக் கொள்ளவும். சுமார் 12 பேருக்கு கார டீ பரிமாறலாம்.
மசாலா டீ
கிராம்பு, பட்டை, நட்மெக், இஞ்சி, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு கொதித்தவுடன் டீ தூள் ஒரு டீஸ்பூன் போட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வாடி கட்டவும்.
ஐஸ் மின்ட் டீ
ஒரு தம்ளரில் உடைத்து வைத்துள்ள ஐஸ் கட்டியில் டீ டிக்காசனை ஊற்றவும். அதில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்ச் துண்டுகளை போடவும். சிறிது புதினா இலைகளை தண்ணீர் கலந்து மிக்ஸ்யில் அடித்து அதில் போடவும், பின்னர் பரிமாறினால் சுவையாக அருந்தலாம்.
ஆப்பிள் அபரிடிஃப்
ஒரு தம்ளரில் டீ டிகாஷன் மற்றும் ஆப்பிள் ஜூஸ் இரண்டும் சம அளவில் ஊற்றவும். அதில் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போடவும். அதில் ஒரு டீஸ்பூன் சீனி மாற்று மேலுமிச்சை பழ சாறுகளை ஊற்றவும். நன்றாக கலந்த பின் பரிமாறினால் நன்றாக இருக்கும்.
டீ டிக்காஷன் செய்முறை
1/2 லிட்டர் பச்சை தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் டீ தூளை கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு வடிகட்டினால் டீ டிக்காஷன் ரெடி.
கிரீன் டீ, பிளாக் டீ, புதினா டீ போடும் முறையும் நன்மையையும் ...
கிரீன் டீ
கிரீன் டீ உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது. கான்சர், ஆர்த்தரைடீஸ், இரத்தக் கொதிப்பு போன்றவற்றிற்கும் மருந்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது. உடல் எடை குறைய உதவுகிறது. தினமும் காலையில் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீயை ரொம்ப சூடாகவோ, ரொம்ப ஆறியோ குடிக்கக் கூடாது. 56 - 62 சென்டிகிரேட் வெப்பத்தில் குடிப்பது நல்லது. எந்த ஒரு பொருளுக்கும் பிளஸ்ஸும் உண்டு, மைனஸும் உண்டு. கிட்னி ப்ராப்ளம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கவும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். ஒரு நாளைக்கு 6 கப் டீக்கு மேல் குடிக்கக் கூடாது. ஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கக் கூடாது. அல்சர் தொந்திரவு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும். உணவின் இடையிலும் குடிக்கக் கூடாது.
செய்முறை:
கிரீன் டீ சாதாரண டீ போடுவது போல் போடக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது இறக்கி, ஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால், குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும். வடிகட்டி ஓரிரு சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது ரொம்ப நல்லது. குடிக்க கஷ்டமாக இருந்தால், தேன் கலந்தோ, சிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம். ரொம்ப துவர்ப்பது போல் இருந்தால், தூளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.
சாதாரண டீ:
நிறைய பேருக்கு எவ்வளவு பாலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்து, எப்படி டீபோடுவது என்றே தெரியாது. நல்ல திக்கான பாலாக இருந்தால், 1/2 லிட்டர்பாலுக்கு 200 மிலி டம்ளரில், 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம். மொத்தமாக 5 டம்ளர்அளவு வரும். கால் டம்ளர் சேர்த்து ஊற்றினால் கொதித்து குறைவதற்கு சரியாகஇருக்கும்.
தேவையான பாத்திரங்கள்:
கெட்டில், டீ வடிகட்டி, டீ வடிக்க ஒரு பாத்திரம், டம்ளர்கள்.
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்,
தண்ணீர் - 2 டம்ளர் + 1/4 டம்ளர்,
டீத்தூள் - 5 தேக்கரண்டி,
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி.
செய்முறை:
பாலுடன் தண்ணீர், டீத்தூள், சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம்கொதிக்க விடவும்.
பொங்கி வரும் போதெல்லாம் கலக்கி, கலக்கி, திரும்ப வைக்க வேண்டும். பொங்கிவழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
நன்கு கொதித்ததும், வடித்தால் டீ ரெடி. (ஒரு ஏலக்காயும், சிறிது தோல் சீவியஇஞ்சியையும் சின்ன இடிப்பானில் நசுக்கி, டீ கொதிக்கும் போது போட்டால் டீயின்சுவை இன்னும் கூடும்.)
டீயை சரியாக கொதிக்க விடலைன்னா, பால் வாசம் அடிக்கும். டீத்தூள் குறைவாகபோட்டாலும் டீ நன்றாக இருக்காது. எப்போதுமே டீ போட்டதுமே, வடித்து,டம்ளர்களில் ஊற்றி விட வேண்டும். அப்போது தான் சூடு ஆறாமலிருக்கும்.
இந்த அளவுகள் 5 பேருக்கானது. அவ்வளவு பேர் இல்லையே, ஒருத்தருக்குமட்டும் தான் போடணுமானால் என்ன செய்யணும்னு கேட்கறீங்களா?சொல்றேனே.
எப்படியும் 1/2 லிட்டர் பால் வாங்குவீர்கள். பாலை காய்ச்சி தனியே வைத்துக்கொள்ளவும். 3/4 டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டிடீத்தூள், 3/4 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து 2,3 முறை நன்கு பொங்கி வர வரகொதிக்க விட்டு, இறக்கி உடனே வடிக்கட்டினால் டீ ரெடி.
ரொம்ப தலைவலியாக இருந்தால், ஒரு சிறு துண்டு இஞ்சி நசுக்கி டீ கொதிக்கும்பொழுது போட்டு, கொதித்ததும் வடிகட்டி அருந்தினால் தலைவலி குறையும்.
டீயைப் பற்றி சொல்லும் போது புத்துணர்ச்சி தரும் புதினா டீ பற்றியும், உடலுக்குநன்மை பயக்கும் கிரீன் டீ பற்றியும் சொல்லாமல் விட்டு விட்டேன்.
அதே போல் காஃபியிலும் பித்தம் போக்கும் கொத்தமல்லி காஃபி, கடுங்காப்பி எனகிராமத்தில் அழைக்கப்படும் காஃபியையும் சொல்ல வேண்டும்.
புதினா டீ
Black teaவழக்கமாக 5 பேருக்கு டீ போடுவது போல் போட்டு, டீ நன்கு கொதித்து,அதை இறக்கப் போகும் போது, அதில் சுத்தம் செய்து நன்கு கழுவிய புதினா இலைஒரு கைப்பிடி, சிறிய கோலி அளவு நசுக்கிய இஞ்சி போட்டு, ஓரிரு நிமிடங்கள்கொதிக்க விட்டு இறக்கி மூடி வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டிகுடித்தால் களைப்பெல்லாம் பறந்து, புத்துணர்வு வரும். ஒருவருக்கு மட்டும்என்றால், ஆறேழு புதினா இலைகள், கொட்டைப்பாக்களவு இஞ்சி போடவும்.
புதினா எப்போதும் புதியதாக கிடைக்காது என்றால், நிறைய கிடைக்கும் போதுவாங்கி சுத்தம் செய்து கழுவி, காயவைக்கவும். நன்கு காய்ந்தபின் பொடியாக்கிஒரு டப்பாவில் போட்டு இறுக மூடி வைக்கவும். ஒருவருக்கான டீ போடுவதுஎன்றால் கால் தேக்கரண்டி அளவும், 5 பேருக்கு என்றால், ஒரு தேக்கரண்டிஅளவும் புதினா பொடி போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
பிளாக் டீ
சாதாரண டீத்தூளை மட்டும் கொதிக்க வைத்து, பால் சேர்க்காமல் வைப்பது தான்பிளாக் டீ. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு (சுமாராக 5 நிமிடம்) இறக்கி வடிகட்டினால் பிளாக் டீ ரெடி. இதனுடன் கால்மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்புகட்டுப்படும். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் துவர்ப்பாக இருப்பது நல்லது.குடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தால், சிறிதளவு தேன் அல்லது சர்க்கரைசேர்க்கலாம். சீனாக்காரர்கள், ஜப்பானியர்கள் பிளாக் டீயைத்தான் அதிகம் விரும்பிகுடிக்கிறார்கள்.
ரோஸ்மெரி டீ
ரோஸ்மெரி நெட்டுகள் - 4
டீ பாக்ஸ் - 2
சீனி & பால் - அவரவர் சுவைக்கேற்ப
அலம்பிய ரோஸ்மெரி நெட்டுக்களை ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்திலிட்டுஒன்றரை கோப்பை கொதிநீர் விட்டு மூடி, குறைந்தது பத்து நிமிடங்கள்ஊறவிடவும்.
இலையின் வாசனை ஊறி நீரும் மெல்லிய பச்சை நிறமாக மாறிவரும் போழுது,இலைகளை நீக்கிவிட்டு வடிகட்டிய நீரை மீண்டும் கொதிநிலைக்குக்கொண்டுவரவும்.
இரண்டு பாக் தேயிலையைச் சேர்த்து கடுமையான தேநீராக தயாரித்துக்கொள்ளவும்.
- தேவைக்கு பால், சீனி சேர்த்துக் கலக்கினால் சுவையான, புத்துணர்ச்சியூட்டும்ரோஸ்மெரி டீ தயார்.
No comments:
Post a Comment