கண் சிகிச்சை இலவச முகாமில் 20பேர் கண் புரை அறுவை

பந்தலூர் : பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் நடந்த கண் சிகிச்சை இலவச முகாமில் 20பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். 

நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், நேரு யுவ கேந்திரா இணைந்து கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. 
முகாமிற்கு நுகர்வோர் மைய தலைவர்  சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.

கண் டாக்டர் அகல்யா, சுகாதார நிலைய டாக்டர் ரமேஷ் சிகிச்சையளித்தனர். முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். 

அதில் 20பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக, ஊட்டி அழைத்து செல்லப்பட்டனர். 

ஷாலோம் டிரஸ்ட் செயலாளர் சுப்ரமணி வரவேற்றார். 

No comments:

Post a Comment

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...