குளிர்பானம், பழச்சாறு

CCHEP Nilgiris
http://cchepnlg.blogspot.in/?m=1


குளிர்பானம், பழச்சாறு விற்பனையாளர்கள்
 சுகாதாரத்தை கடைப்பிடிக்க  அறிவுறுத்தல்

by SENTHIL

குளிர்பானங்கள், பழச்சாறு தயாரிப்பில் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என.  அறிவுறுத்தியுள்ளது.


தற்போது கோடைக் காலம் துவங்கி உள்ள நிலையில் தாகம் தணிப்பதற்கும், உடலுக்குக் குளிர்ச்சியூட்டவும் பொதுமக்கள் அதிகமானோர் குளிர்பானங்கள், பழச்சாறு, குடிநீர், ஐஸ்கிரீம், கரும்புச்சாறு, கம்மங்கூழ், மோர் ஆகியவற்றைப் பருகி வருகின்றனர்.

 இந்நிலையில், இவற்றை விற்பனை செய்யும் வணிகர்கள்

தங்களது தயாரிப்பில் கலப்படமில்லாத சுத்தமான, தரமான மூலப் பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்று விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேற்கண்ட குளிர்பானங்களைத் தயாரிப்பவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குளிர்பானங்களைத் தயாரிக்கும் இடமும் சுகாதரத்துடன், ஈ , எறும்புகள் இடையூறு இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.

மேலும், குளிர்பானம் தயாரிப்பில் ஈடுபடும் நபர்களும் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்:

ஜூஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்க வேண்டும்.

மேற்கண்ட குளிர்பானங்கள் தயாரிக்கப் பயன்படும் மிக்சி, ஜுஸர், வடிகட்டி , இதர உபகரணங்களைத் துருப்பிடிக்காமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

அழுகிய பழங்களை சாறு தயாரிக்கப் பயன்படுத்தக் கூடாது.

குளிர்சாதனப் பெட்டியை தினமும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குளிர்பானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணச் சாறுகளைப் பயன்படுத்தக் கூடாது.

செய்கை முறையில் ரசாயனப் பொருள்கள் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தவிர்த்து இயற்கையான முறையில் பழுத்த தரமான பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு தயாரிக்க வேண்டும்.

 *தரச்சான்றும், உரிமமும் அவசியம்:*

குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஐஎஸ்ஐ தரச் சான்றிதழும், உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் சுத்திகரித்து முறையான லேபிள் விவரங்களுடன் பேக் செய்து குடிநீர் விற்பனை செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வோர் குடிநீர் பாக்கெட், பாட்டில்களில் தயாரிப்பு, காலாவதி தேதி, பேட்ச் எண், குடிநீரில் உள்ள சத்துகளின் அளவு ஆகிய விவரங்களுடன் தயாரிப்பாளாரின் முழு முகவரி அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், 20 லிட்டர் கேன்களை ஒவ்வோர் முறையும் சுத்தமாக சோப் பவுடர் மூலம் சுத்தம் செய்து உலர வைத்து குடிநீர் நிரப்பி உரிய லேபிள் விவரங்களுடன் விற்பனை செய்ய வேண்டும்.

 *கண்காணிப்புக்குழு அமைப்பு:*

 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு குளிர்பானம் தயாரிப்பு, விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேற்படி வழிமுறைகளைப் பின்பற்றாமல் தரமற்ற குளிர்பானங்கள், குடிநீர் விற்பனை செய்யும் வணிகர் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்,

இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 94440-42322 என்ற கட்செவி (வாட்ஸ் அப்) எண்ணிலோ அல்லது

 மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தையோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...