பெறுனர்
திருமிகு.
ஆணையாளர் அவர்கள்
உணவுப்பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு துறை சென்னை.
முதலமைச்சா்
தனிப்பிரிவு
தலைமைச்செயலகம்
சென்னை
பொருள்
CCHEP - நிர்வாக குழு / செயற்குழு கூட்டம் தீர்மாணங்கள்
அனுப்புதல் சார்பாக
அய்யா ,அம்மையீர் அவர்களுக்கு
வணக்கம்,
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல்
பாதுகாப்பு மைய நிர்வாக குழு மற்றும் செயற்குழு
கூட்டம் பந்தலூரில் நடைப்பெற்றது.
கூட்டத்தில்
நிறைவேற்றபட்ட தீர்மாணங்கள்
தீர்மாணம்
12/2018 1. நன்றி தெரிவித்தல்
இதுவரை ஆதரவு தந்து அமைப்பின் வளர்ச்சிக்கு
உதவும் அரசு துறைகள், பத்திரிக்கை நன்பர்கள்,
தன்னார்வ அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள், தன்னார்வலர்கள், நிகழ்ச்சிகள் நடத்திட
ஆதரவு தரும் கல்வி நிலையங்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுதல்
அமைப்பின்
வளர்ச்சிக்கு ஊக்கமாக சட்ட உதவிகள் பெறும் பொருட்டு இளம் வழக்கறிஞர்கள் திரு. அரிபிரசாத்
உதகை,
திரு. ரா. கனேசன் பந்தலூர்,
திருமதி நஜிமாபாய் நசிர் அவர்களையும் அமைப்பில்
இணைத்துக்கொள்வது எனவும் தீர்மாணிக்கப்பட்டது.
மாவட்டத்தில்
அனைத்து வட்டங்கள் மற்றும் ஊராட்சி அளவில் அமைப்பு நிர்வாகிகள் நியமித்து கிளைகள் உருவாக்குதல்
எனவும் தீர்மாண.
தீர்மாணங்கள்
துறை சார்ந்து பிரித்து அனுப்புதல்
தீர்மாணம் 13/2018 2
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
துறை சம்பந்தமான தீர்மாணங்கள்
நுகர்வோர்
தினங்களான உலக நுகர்வோர் தினம் மார்ச் 15 மற்றும் தேசிய நுகர்வோர் தினமான டிசம்பர்
24 ஆகிய நாட்களில் அனைத்து மாவட்டத்திலும்
விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்நாளில்
நடத்துவதால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை சிறப்பாக கொண்டு செல்ல இயலும்.
பள்ளிகளில்
நடைப்பெறும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் குறித்து பள்ளி கல்வி துறை சார்பில் வெளியிடும்
கையேட்டில் தகவல் இடம்பெற செய்ய வேண்டும்.
இதனால் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் எளிதான கட்டாய செயல்பாட்டிற்கு
உதவும்.
பள்ளி
குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கு வழங்கப்படும் நிதியானது சிறப்பாக செயல்படும் பள்ளிகளை
மட்டும் தோ்வு செய்து
அதாவது பத்திரிக்கை செய்தி புகைப்படம், தீர்மாண புத்தக நகல்,
மாணவர்களின் நுகர்வோர் சார்ந்த செயல்பாடுகள் குறித்து தகவல் சேகரித்து அதன் அடிப்படையில்
நிதி வழங்க வேண்டும்.
பல பள்ளிகளில் ஏற்கனவே
வழங்கப்பட்ட நிதி முறைகேடு செய்யப்பட்டு எந்தவித விழிப்புணர்வு பணிகளும் மேற்க்கொள்ளாமல்
வீனடிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
நுகர்வோர்
அமைப்பு களை முகவரி பட்டியலில் சேர்க்க பல மாவட்டங்களில் அலைகழிக்கப்படுகின்றனர்.
இதனால் தன்னார்வ அடிப்படையில் எந்தவித நிதி ஆதாராமும்
இல்லாமல் சொந்த முயற்சியில் சிறப்பாக செயல்படும் நுகர்வோர் அமைப்புகள் கூட அலைகழிப்புக்கு
ஆளாக்கப்படுகின்றனர்.
நுகர்வோர்
சார்ந்த பிரச்சனைகளை சுட்டிகாட்டினால் அவர்களை சேர்ப்பதில்லை.
ஆனால் எந்தவித நுகர்வோர்
சேவையும் செய்யாமல் பெயரளவிற்கு இருப்பவர்களை முகவரி பட்டியலில் சேர்த்து கொள்கின்றனர்
என்பதும் வேதனையானது.
இதனால்
மாவட்ட நிர்வாகம் நுகர்வோர் அமைப்புகள் இடையே இணக்கமான போக்கு இருப்பதில்லை.
பெயரளவிற்கு மட்டுமே நுகர்வோர் கூட்டங்கள் நடத்தப்பட்டு
நுகர்வோர் பிரச்சனைகள் களையபடாமல் உள்ளது வேதனை அளிக்கின்றது.
எனவே
நுகர்வோர் அமைப்புகளின் சேவை அடிப்படையில் சிறப்பான சேவை செய்யும் நுகர்வோர் அமைப்புகளை
முகவரி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
நீலகிரி
மாவட்டத்தில் மன்ணென்னை அதிக அளவு தேவைப்படுகின்றது. எரிவாயு சிலிண்டர்களும் முறையாக கிடைப்பதில்லை.
விறகு வெட்டவும் வனத்துறை தடைவிதித்துள்ளது.
இதனால்
பணிகாலம், மழைகாலங்களில் அதிக எரிபொருள் தேவைக்கு பொதுமக்கள் சிரம்மப்படும் நிலை உள்ளது.
எனவே நீலகிரி மாவட்டத்திற்கு அதிக மண்ணென்னை ஒதுக்கீடு
செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்
காவல்துறை
காவல்துறை
சார்பில் பல்வேறு பகுதிகளில் வாகண தணிக்கை செய்யப்படுகின்றது.
இதில் அபராதம் விதிக்கும்போது சரியா ன ரசீதுகளை
வழங்குவதில்லை .
இதனால் காவல்துறை
சார்பில் எடுக்கும் நடவடிக்கை விதிக்கும் அபராதங்கள் தவறான முறையில் சித்தரிக்கும்
வாய்ப்பை உருவாக்குகின்றது.
இதனால்
காவல் துறை சார்பில் வாகண விதிமீறல்களுக்கான அபராதங்கள் குறித்த தகவல் பலகை மக்கள் மற்றும் வாகண ஓட்டிகள் அறியும் வகையில் வைக்க வேண்டும்
அபராதம்
விதிக்கும் நிலைக்கு கணினி ரசீதுகள் வாழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆய்வாளர்தான்
ரசீதுகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிலைபாட்டை தவிர்த்து யார் அபராதம் விதிக்கின்றாரோ அவரே அதற்கு பொறுப்பு என்ற
நிலைபாட்டை எடுத்து அதன் மூலம் அபராதம் விதிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment