காவல் ஆணைகள் 3

51. A என்பவரின் மரணம் நஞ்சினால் விளைவிக்கப் பட்டதா என்கிற கேள்வியில் அவர் இறந்திருப்பது எந்த நஞ்சினால் என்று யூகிக்கப்படுகிறதோ அந்த நஞ்சினால் உண்டாக்கப்படும் அறிகுறிகள் பற்றி வல்லுனர்கள் கூறும் கருத்துக்கள் இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவின்படி தொடர்புடையதாகிறது? (Expert’s Opinion)

- இ.சா.ச. பிரிவு 45

52. Dactylo graphy என்பது எதனைக் குறிக்கிறது?

-கைரேகை

53. மரபணு சோதனை எதற்கெல்லாம் பயன்படும்?

- தந்தை வழி மரபு கண்டறிய, மனிதனை இன்னாரென அடையாளம் காண்பிப்பதற்கு.

54. Digital Signature http://wordinfo.info/unit/3673/ip:1/il:D (இலக்க முறை குறியிட்டுக் கையெழுத்து) குறித்து கருத்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

-பிரிவு 47 (A)

55. குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் தீய குணநலன்கள் வழக்கிற்கு தொடர்பற்றது என்று கூறும் பிரிவு யாது?

-பிரிவு 54

56.நீதிமன்றம் நீதி முறையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருண்மைகளின் பட்டியல், இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

- பிரிவு 57

57. IEA (Indian evidence act) sec 60-ன் கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத சாட்சியம் யாது?

- செவிவழி சாட்சியம்

58. செவிவழி சாட்சியம் தொடர்பற்றது என்ற விதியின் விதிவிலக்கு எது?

-ஒன்றிய செயல் கோட்பாடு மற்றும் மரண வாக்குமூலம்.

59. ஒரு ஆவணத்தின் உள்ளடக்கங்களை தலை நிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ மெய்ப்பிக்கலாம் எனக் கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 61

60. சார்நிலை சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலைகளை விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 65.

61. எது தனியார் ஆவணமாகும்?

-கிரைய ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், பாகப்பிரிவினை பத்திரம் ஆகியவை

62. எவை பொது ஆவணம்?

-சட்டமன்றத்துறை பதிவேடு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்

63. ஒரு ஆவணத்தை தொல் ஆவணம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்?

-முப்பது ஆண்டுகள்

64.ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்க்கவில்லை என்று வாதிட்டார். குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்த்ததாக வாதிட்டார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரைச் சேர்ந்தது?

-உரிமையாளர்.

65. B யின் மரண வாக்குமூலத்தை மெய்ப்பிக்க Aவிரும்புகிறார். இந்து அதற்குத் தொடர்புடைய பொருண்மையான B யின் மரணத்தை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு A யை சேர்ந்ததாகும் என்று சொல்லுகின்ற பிரிவு யாது?

-IEA sec 104

66.கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட Aஎன்பவர் அது ஒரு விபத்து என்று கூறி தண்டனையில் இருந்து விலக்குக் கேட்கிறார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரை சேர்ந்தது?

- குற்றம் சாட்டப்பட்டவர் A யை சார்ந்தது.

67.வரதட்சணை மரணம் தொடர்பான அனுமானம் குறித்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் கூறப்படுகிறது?

-பிரிவு 113 –B

68.இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 113-A இந்திய தண்டனை சட்டத்தின் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது?

-இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-A

69. வன்புணர்ச்சி குற்றம் குறித்து அனுமானம் பற்றி விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 114-A IEA

70.குழந்தை சாட்சியங்கள் குறித்து கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 118 IEA

71.IEA sec 119 எதைப் பற்றி விளக்குகிறது?

_ ஊமை சாட்சியம்

72.ஒரு கணவன், தன் மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் முன்னிலையில் குற்ற ஏற்பினை அளித்தார். இதில் யார் யார் அதனை மெய்ப்பிக்கலாம்?

-உறவினர்கள் மட்டும்

73.A எனும் கட்சிக்காரர்  B எனும் தனது வழக்கறிஞரிடம் பொய் ஆவணம் ஒன்றைப் பயன்படுத்தி சொத்தின் அனுபவத்தைப் பெற விரும்புகிறேன். எனவே அந்த ஆவணத்தின் மீது வழக்கிட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இது இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவோடு சம்மந்தப்பட்டிருக்கிறது?

-பிரிவு 126 ன் கீழ் மெய்ப்பிக்கலாம்.

74. உடன் குற்றவாளியின் சாட்சியம் தகுதியான சாட்சியே எனக் கூறும் பிரிவு யாது?

_பிரிவு 133 IEA

75.ஒரு சாட்சி எதிர்த்தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணையாகும்?

_குறுக்கு விசாரணை

76.ஒரு சாட்சி குறுக்கு விசாரணைக்குப் பிறகு அவரை அழைத்த தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணை ஆகும்?

-மறு விசாரணை

77. விடையமை வினாக்கள் (leading questions) எந்த விசாரணையின்போது கேட்கக் கூடாது?

-முதல் விசாரணை

78. பிறழ் சாட்சி (hostile witness) பற்றி கூறுகின்ற பிரிவு யாது?

_ பிரிவு 154 IEA

79.சாட்சியின் நாணயத்தைத் தாக்குதல் என்பது எந்தப் பிரிவில் விளக்கப்படுகின்றது?

-பிரிவு 155 IEA

80.நினைவைப் புதுப்பித்தல் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?


- பிரிவு 159 IEA

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...