போக்குவரத்து கழகம் குறைபாடுகள்

அய்யா வணக்கம்

கூடலூர் கிளையில் இயக்கபடும் பேருந்துகள் மழையில் ஓழுகும் நிலை உள்ளது.

கூடலூர் மாங்கோடு வழித்தடத்தில் இயங்கும் பேருந்து
ஓட்டுனர் பக்கம் மற்றும் எதிர்பக்கம் இருபுறமும் ஒழுகுவதால் இருக்கைகள் நனைந்து பயணிகள் பேருந்தில் பயனிக்க சிரமத்தை அளிக்கிறது

இது போல பல பேருந்துகளும் இதே நிலையில் உள்ளது

பேருந்தின் மேற்கூரை பகுதியில் தார் சீட்டு ஒட்டுவதுடன்

பக்கவாட்டு கண்ணாடி பிரேம்களில் புட்டி வைத்து கொடுப்பதன் மூலம் பேருந்தின் உள்ளே மழைநீர் வராமல் தடுக்க முடியும்

தக்க நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சரியான நேரத்தில் இயக்குதல்

சில பேருந்துகள் அட்டவணை நேரத்தில் இயங்குவதில்லை,  பேருந்துகளின் நேரத்திற்கு முன்னதாக செல்வது பயணிகளை சிரம்மத்திற்குள்ளாக்குகிறது.

தற்போது பள்ளி கல்லூரி விடுமுறை காலமாதலால் பயண நேரத்திற்கு முன்னதாக வந்து சேரும் நிலை உள்ளது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருந்துகளின் குறைபாடுகளை உரிய நேரத்தில் சரிசெய்து முறையான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலூர் கோவை சேரம்பானி வழித்தடத்தில் இயக்கும் பேருந்து பல நாட்கள் கோவையில் இருந்து வந்தவுடன் கூடலூரிலேயே நிறுத்தப்கடுகின்றது.  பயணிகளுக்கும் கூடலூர் வரையே பயணசீட்டும் வழங்கப்படுகின்றது.

இந்த பேருந்துதான் தாளூர் வரை சென்று திரும்ப கூடலூர் வருவதற்கான கடைசி பேருந்தாகும்.  இப்பேருந்து பல நாட்கள் இயக்காததினால் பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

எனவே இந்த வழித்தட பேருந்தை தினசரி இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடத்தில் பெண்களிடம் ரூபாய் பத்து வரை கட்டணம் சிறு குழந்தைகளுக்கும் கட்டாயமாக கட்டணம் வசூலிப்பதுடன் ஆண்களிடம் ஐந்து ரூபாய் வசூலிக்கின்றனர்  கட்டணம் அதிகமாக உள்ளது என கூறினால்  மாச கமிசன் கொடுத்துதான் நடத்துறோம்  யார்கிட்ட சொன்னாலும் இதேதான் என்கிறார்கள்   தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கின்றோம்

அன்புடன்

சு. சிவசுப்பிரமணியம்
பொதுசெயலாளர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
(மாநில அரசு அங்கீகாரம் பெற்றது)



இதுகுறித்து 

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...