காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நீலகிரி திசைகாட்டி மையம் ஆகியன சார்பில் நடைப்பெற்ற திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு
தலைமை தாங்கிய
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் முத்துராமன் பேசும்போது
மாணவர்கள் படிக்கும்போது கவனத்துடன் படிப்பது அவசியம், மேற்படிப்புகள் வேலை வாய்ப்பை உருவாக்கி தர கூடிய படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
சுய தொழில் சார்ந்தோ, வேலை வாய்ப்பு நல்க கூடிய படிப்பை தேர்வு செய்தால் படிப்பிற்கு பின் வருவாய் பெற முடியும்,
பலரும் சரியான பாடபிரிவை தேர்வு செய்யவில்லை இதனால் படித்த பின்னரும் வேலையின்றி அவதிபடுகின்றனர் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய செயலாளரும், திசைகாட்டி மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான சிவசுப்பிரமணியம் பேசும்போது
கல்வி மூலம் முன்னேற்றமடைந்தவர்கள் பலர் உள்ளனர். பலரும் சரியான வழிகாட்டல் இல்லாமல் பள்ளி படிப்பை மட்டும் படித்துவிட்டு பின்னர் சிரம்மப்படுகின்றனர்.
திறமையின் அடிப்படையிலேயே வேலை என்ற நிலை தற்போது உள்ளது. எனவே பாடபுத்தக படிப்போடு பொது அறிவு, கணிணி அறிவு, மொழி அறிவு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வளர்த்து கொள்ளுதல் அவசியம்.
அரசு பள்ளிகளில் படித்த பலரு நாட்டின் முக்கிய பதவிகளில் இருந்துள்ளனர். தற்போதும் சாதனையாளர்களாக பலர் உள்ளனர்.
புரிந்து படித்து மனதில் உள்வாங்கி கொண்டால் போட்டி தேர்வுகளை எளிதில் வெல்ல கூடிய திறமை பெற முடியும்.
குறிக்கோளை நிர்ணயித்து படித்தாலும் அதை அடையாவிட்டால் அடுத்த வாய்ப்பை பயன்படுத்தி சாதிக்கும் துணிவு மாணவர்களுக்கு அவசியம் என்றார்
பள்ளி ஆசிரியர் சிவகுமார் பேசும்போது
மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக தற்போதைய கல்வி முறை மாறி வருகின்றது.
பள்ளிகளில் நூலகம், அறிவியல் கண்காட்சி, இலக்கிய மன்ற செயல்பாடுகள், சேவை வாய்ப்புகள் என அனைத்தும் தரப்படுகின்றது.
மாணவர்களிடம் ஆர்வம் இருந்தால் மட்டுமே ஆசிரியரின் உழைப்புக்கு பலன் கிடைக்கும். மாணவர்கள் சாதிக்கும் எண்ணம் கொண்டு தங்களின் லட்சியத்தை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்
மாணவர்களின் எதிர்கால லட்சியம் குறித்து கலந்துரையாடப்பட்டது. மருத்துவம், காவல்துறை, பொறியியல், ஆசிரியர், ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் அதிகம் விரும்புவதாக கூறினர்.
மாணவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டல்கள் வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டது நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்
No comments:
Post a Comment