குன்னூர் பிரவிடன்ஸ் கல்லூரி திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு

நீலகிரி மாவட்ட திசைகாட்டி, 
குன்னூர் பிரவிடன்ஸ் கல்லூரி பிரென்ஞ் துறை, 
கூடலூர் நுகர்வோர் மளிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் 

இணைந்து கல்லூரியில் 

திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு முகாமினை நடத்தின

இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் சகோதரி ஷிலா தலைமை தாங்கினார்,

குன்னூர் திசைகாட்டி மைய அமைப்பாளர் டேவிட் முன்னிலை வகித்தார்,

திசைகாட்டி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சித்திரவேல் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு பேசும்போது

கல்வியில் சரியான தேர்வை மாணவ பருவத்தில் தேர்வு செய்யாமல் போவதால் பலரும் படித்தபின் தன்னுடைய குறிக்கோளை எட்ட முடியாவில்லை,

ஒரு பிரிவை எடுத்து படிக்கும்போது அதற்கான வாய்ப்புகளையும் அறியவேண்டும்,
ஆசிரியர் படிப்பை தேர்வு செய்தால் அதில் எந்த வகை ஆசிரியர், எந்த பிரிவு ஆசிரியர் என தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அதுபோல சமூகபணிகள், பட்ட படிப்பு போன்றவற்றில் தன்னுடைய படிப்பை தேர்வு செய்யும் போது அடுத்த நிலை என்ன வாய்ப்பு என்பதை அறிய வேண்டும்,

எந்த வகை தேர்வு என்பதை அறிந்துகொள்ளவும்,  அடுத்த கட்ட படிப்பை தேர்வு செய்யவும்  இந்த திசைகாட்டி மையம் வழிகாட்டியாக செயல்படும் என்றார்,

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளரும், திசைகாட்டி மையத்தின்  மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான சிவசுப்பிரமணியம் பேசும்போது

பட்ட படிப்பு முடித்தவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.  அதற்கு பொது அறிவு அவசியம், பத்திரிக்கைகள் வாசிப்பு மற்றும்  பாட புத்தகங்களை படித்தல் அவசியம், 

இன்று அரசு பணிகளில் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 70 சதவீதம் பேர் வெளிமாவட்டத்தை சாரந்தவர்கள்  இந்த மாவட்டத்தில் பட்டம் படித்தவர்கள் மீண்டும் பெற்றோருடன் கூலிவேலைக்கே செல்லும் நிலை உள்ளது,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தின் மூலம்  குருப் 1, குருப் 2, குருப் 4 மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தி அதில் வெற்றிபெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கப்படுகின்றது.

அரசு துறை பணியிடங்களை பெற போட்டி தேர்வுகளுக்கு படிக்கும்போதே தயாராக வேண்டும் என்றார்.

குன்னூர் உதவி மின் பொறியாளர் நிர்மல்குமார் பேசும்போது

கல்வியில் நாம் முன்னேறினாலும், வேலை  வாய்ப்பில் பின்தங்கியுள்ளோம்,  இன்று வேலை வாய்ப்புகள் பல துறைகளில் உள்ளது, 

எந்த பட்டம் படித்தாலும் ரெயில்வே, வங்கி பணிகள், அஞ்சல்துறை,  காவல் துறை பணிகள் என பல துறைகளில் ஆண்டுக்கு ஒருமுறையாவது தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு வழங்கப்பபடுகின்றது. 

பொறியியல் படிப்புகளிலும் வேலைவாய்ப்பு உள்ள துறைகள், சுயமான தொழில் தொடங்கும் துறைகள் உள்ளன.

அதனை பயன்படுத்திட நாம் படிக்க வேண்டியது அவசியம்.

தாழ்வு மனபான்மையை அகற்றிவிட்டு  தன்னால் முடியும் என்ற எண்ணத்துடன் படிக்க வேண்டும். 

பலரும் கிராமத்தில் வாய்ப்புகள் இல்லாத இடத்தில் இருந்துதான் சிரம்மப்பட்டு உருவாகியுள்ளார்கள் அதனால் வாய்ப்பு கிடைக்காது என்ற மனநிலையை மாற்றி முயற்சிக்க வேண்டும் என்றார்.

குன்னூர் ஜேசிஐ பயிற்றுனர் அமிர்தராஜ் பேசும்போது

படிப்பு சமூகத்தில் உயர்வை தரும்,  ஆனால் எதற்கான படிப்பு என்பதை பொறுத்து வாழ்வில் மாற்றம் உருவாகும்.  

அதுபோல நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பலரும் முன்னேறியுள்ளனர். 

அடிப்படையில் சில தகுதிகள் இல்லாவிட்டாலும்,  கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.

அதன் மூலம் தன்னுடைய திறமையை மேம்படுத்தி மாற்றங்களை உருவாக்குவதும் தம்முடைய முயற்சியால் சாதிக்க முடியும் என்றார்.

குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் பேசும்போது

பொது அறிவு மற்றும் வாழ்க்கை கல்வியை கற்றுக் கொள்வது முக்கியம்,  பட்டம் பெறுவது சாதாரன படிப்பு  அதன்பின் பொது அறிவும், பல அறிவு சார் புத்தகங்களில் வழிகாட்டலும் மாணவர்களை மேம்படுத்தும்,

மற்றவருக்காக படிப்பதைவிட.
தனக்கு பிடித்ததை படிக்க வேண்டும் .

எல்லாரும் தேர்வு செய்யும் படிப்பை நாமும் தேர்வு செய்வது பின்னர் பாதிப்பை ஏற்படுத்தும்
படித்த படிப்புக்கு வேலை என்ற நிலை மாறிவிட்டது

எனவே மாணவ பருவத்தில் சிந்தனை செய்து சரியான வழியை கண்டறிதல் அவசியம் என்றார்,

கல்லூரி போராசிரியர் சிந்தியா பேசும்போது 

வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதே நமது வெற்றிக்கு வழியாக அமையும்,   கால்பந்து வீரரான டோனி கிரிகெட்டில் சாதித்தார்,  அறிவியலில் ஆர்வம் கொண்ட அம்பேத்கார் சட்டத்தை வடிவமைத்தார்.

அதுபோல லட்சியம் நிறைவேறாவிட்டாலும், துவண்டுவிடாமல்,  அடுத்த கட்ட முயற்சியை தொடர்ந்து வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பிரென்ச் பிரிவு மாணவர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பங்கேற்ற மாணவியர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...