உதகையில் சுகாதார துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு அயோடின் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
பொது சுகாதாரம் மற்றும் நேய்தடுப்பு துறை மற்றும் நியுட்ரிசியன் இந்தியா, கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடைப்பெற்ற பயிற்சிக்கு பொதுசுகாதாரம் மற்றும் நேய்தடுப்பு துறை துணை இயக்குனர் பொற்கொடி தலைமை தாங்கினார்.
மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் ரமேஷ், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நியுட்ரிசன் இந்தியா
திட்ட மேலாளர் சையது அகமது பேசும்போது
அயோடின் சத்து என்பது அனைவருக்கும் தேவையான நுண்ணூட்ட சத்தாகும். புவியின் மேற்பரப்பில் இருந்த அயோடின் தாது இயற்கை சீற்றங்களால் இந்த சத்து பூமியில் குறைந்து கடலில் சேர்ந்தது. இதனால் இம்மண்ணில் வளரும் தாவரங்களிலும், தாவரங்கள் உண்டு வாழும் விலங்குகளிலும், தேவையான அளவு அயோடின் சத்து இருப்பதில்லை. மனிதன் தனது உணவு தேவைக்காக இந்த விலங்குகளையும் தாவரங்களையும் சார்ந்து இருக்கின்றார்கள். இவற்றில் போதுமான அளவு அயோடின் இல்லாததினால் இந்த உணவுகளில் இருந்து கிடைப்பதில்லை. இதனால்தான் அயோடின் உப்பில் கலக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகின்றது. அனைவரும் உப்பை பயின்படுத்துவதால் அயோடினை உப்பில் கலந்து தரப்படுகின்றது.

தொடர்ந்து அயோடின் குறைபாட்டினை களையப்பட்டிருந்தாலும், பல கிராம பகுதிகளில் இன்னும் அயோடின் குறைபாடு உள்ளது. அயோடின் குறைபாட்டினால் கர்ப்பினிகளுக்கு குறை பிரசவம், குழந்தை இறந்து பிறத்தல், உடல் மற்றும் மன வளர்ச்சி குறைந்த குழந்தைகள் பிறக்கும் அபாயம் உள்ளது. குழந்தைகளின் அறிவு திறன் மிக குறைவாக இருப்பதற்கும், மந்ததன்மையுடைய குழந்தையாக இருப்பதற்கும் முக்கிய காரணம் அயோடின் சத்து குறைபாடே. அயோடின் சத்துலகுறைப்பாட்டினால் 15 புள்ளிகள் ஐகியூ IQ திறன் குறைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைவருக்கும் அயோடின் சத்துடைய உப்பினை பயன்படுத்த வேண்டும் என்றார்.

தமிழ்நாடு உப்பு ஆலோசகர் சரவணன் பேசும்போது அயோடின் அளவு நமக்கு தினசரி நமக்கு 150 மைக்ரோகிராம் அளவு தேவை இருக்கிறது. கர்ப்பினி பெண்களுக்கு 200 மைக்ரோகிராம் அளவு தினசரி தேவை உள்ளது. இது நாம் பயன்படுத்தும் தரமான உப்பு பயன்படுத்துவதன் மூலம் பெறலம். குறிப்பாக தமிழகத்தில கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் 64 சதவீதம் அயோடின் அளவு உள்ளது.
உப்பு வாங்கும் போது தரமான உப்பாக பார்த்து வாங்க வேண்டும். தூள் உப்பில் அதிக அளவு இருந்தாலும், கல் உப்பில் அதிக அளவு இல்லை என்பது குறிப்பிடதக்கது, அரசு வழங்கும் 3 வகையான உப்பை அதிக அளவு பயன்படுத்தலாம். உப்பில் அயோடின் இல்லாமலே, தரமானதாக இல்லாமல் விற்பனை செய்தாலோ போலி முகவரி இட்ட முழு முகவரி இல்லாத உப்பு பாக்கெட் விற்பனை செய்யப்பட்டாலோ, பதப்படுத்தும் உப்பினை உணவிற்காக விற்பனை செய்தாலோ உணவுதுறை வாட்சப் 94440 42322 எண்ணில் புகைப்படம் எடுத்து குறைபாடு நடைபெறும் இடத்தை சுட்டிகாட்டி புகாரினை தெரிவிக்கலாம் இதன்முலம் அயோடின் இல்லாத உப்பினை விற்பனை செய்வதை தடுக்கலாம். ஆஷா பணியாளர்கள் வீடு மற்றும் கடைகளில் உள்ள உப்பு ஆய்வு செய்து தரமான உப்பை பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
அயோடின் குறைப்பாட்டினால் தைராய்டு சுரப்பியை சுரக்க வைக்கும், இதனால் உடலும் மனமும் வளர்ச்சி பெறும். நீலகிரியில் இதுவரை மேற்கொண்ட மாதிரிகளில் தற்போது 52 சதவீதம் மட்டுமே அயோடின் அளவு உள்ளது. உப்பில் அயோடின் அளவு 48 சதவீதம் அயோடின் இல்லாத உப்பு பயன்பாட்டில் உள்ளது. உப்பு வாங்கும்போது கடைக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளதை வாங்க கூடாது, அதுபோல சேதமான உப்பு பாக்கொட்டுகளை தவிர்க்க வேண்டும். என்றார்.

நிகழ்ச்சியில் உதகை குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் பணிபுரியும் ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment