உணவு பாதுகாப்பு துறை நுகர்வோர் காலாண்டு கூட்டம் விவாத பொருள்

அனுப்புநர்:

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
பந்தலூர் பந்தலூர் (Po & Tk)  நீலகிரி மாவட்டம் 643233
9488520800, 7094276700


பெறுநர்:

இயக்குநர்,
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை,
எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 600006.

மாநில நுகர்வோர் காலாண்டு கூட்டம் 2026 உணவு பாதுகாப்பு துறை மற்றும் மின்சார வாரியம் சார்ந்த
 துறைகள் நுகர்வோர் காலண்டு கூட்டத்திற்கு கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்மொழிவுகள் அனுப்பப்படுகிறது

உணவு பாதுகாப்பு துறை 

வ.எண் தலைப்பு புகார் / குறைபாடு இதனால் ஏற்படும் பிரச்சனை முறையான தீர்வு / பரிந்துரை

1 வழிகாட்டுதல் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல் கமிட்டி கூட்டம் முறையாக நடப்பதில்லை, பெயரளவில் மட்டுமே நடத்தப்படுகிறது. 

கொள்கை முடிவுகள் எடுக்கப்படுவதில்லை, துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

 காலாண்டுக்கு ஒரு முறை கட்டாயக் கூட்டம் நடத்துவதுடன், நுகர்வோர் அமைப்புகளின் பங்கேற்பை உறுதி செய்து, முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

2 மாதாந்திர சுழற்சி ஆய்வு இல்லை அனைத்து பகுதிகளிலும் காலாவதி மற்றும் கலப்பட உணவுகள் குறித்து மாதாந்திர ஆய்வு செய்யப்படுவதில்லை. 

பல ஹோட்டல்களில் காலாவதி பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற கிச்சன்கள் உள்ளன. நம்பிச் செல்லும் நுகர்வோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வயிற்றுப்போக்கு, உணவு விஷமாதல் (Food Poisoning) போன்ற தீவிர நோய்களுக்கு ஆளாகின்றனர். 

மாவட்டத்தை 6 வட்டங்களில் மாதம் 50 கடைகளில் சுழற்சி முறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, விதிகளை மீறுவோருக்கு அபராதம் மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


3 சாலையோர / பாஸ்ட் புட் கடைகளில் ரசாயனம் சாலையோர மற்றும் பாஸ்ட் புட் கடைகளில் அஜினமோட்டோ, சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் மற்றும் கருகிய தீய எண்ணெய்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. 

நரம்பு மண்டல பாதிப்பு, புற்றுநோய் அபாயம் ஏற்படுவதுடன், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அவ்வப்போது உணவு மாதிரி எடுத்து ஆய்வு செய்வதுடன், உணவுப் பாதுகாப்பு + உள்ளாட்சி + சுகாதாரத் துறை இணைந்து கூட்டு ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

4 மீன் / இறைச்சி கடைகள் சுகாதாரமின்மை மீன் மற்றும் இறைச்சிகள் திறந்த வெளியில் விற்கப்படுகின்றன. ஈ, கொசுக்கள் மொய்க்கின்றன மற்றும் கால்நடை மருத்துவரின் சான்று இல்லாமல் வெட்டப்படுகின்றன.

 கிருமித் தொற்று, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் எளிதில் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. 

வலை மூடிப் பாதுகாத்தல், குளிரூட்டப்பட்ட விற்பனை முறையைக் கையாளுதல், கால்நடை சான்று சரிபார்த்தல் மற்றும் கழிவுகளை முறையாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

5 புகார்களுக்கு நடவடிக்கை இல்லை மாநில அளவில் புகார் எண்கள் செயல்பாட்டில் இருந்தாலும், பெறப்படும் புகார்களுக்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை மற்றும் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை.

பொதுமக்கள் மீதுள்ள துறை சார்ந்த நம்பிக்கை குறைவதுடன், எதிர்காலத்தில் மக்கள் புகார் செய்ய முன்வருவதில்லை. 

48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தைப் புகார்தாரருக்கு SMS அல்லது தொலைபேசி மூலம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

6 காலாவதி தேதி நிறுவனங்களே நிர்ணயம் பொருட்களின் காலாவதி தேதியை உற்பத்தி நிறுவனங்களே பெயரளவிலும் தங்களது விருப்பத்திற்கேற்பவும் நிர்ணயிக்கின்றன. 

ரசாயனம் கலந்த உணவு நீண்ட நாள் கெடாமல் இருக்கும் என தவறாகக் காட்டப்பட்டு, மக்கள் குழப்பமடைவதுடன் உடல்நலக் கேடு விளைகிறது. 

அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் உரிய பரிசோதனை செய்து, அரசே காலாவதி தேதியை நிர்ணயிக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும்.

7 ஊட்டச்சத்து தகவல் சிறிய எழுத்தில் பொருட்களின் சத்துக்கள் பட்டியல் மற்றும் காலாவதி தேதி ஆகியவை மிகச் சிறிய எழுத்துகளில், படிக்க முடியாத அளவில் அச்சிடப்படுகின்றன.

சாதாரண மக்கள் மற்றும் முதியவர்கள் உரிய விவரங்களை அறிய முடியாமல் வாங்கிப் பயன்படுத்தி பாதிக்கப்படுகின்றனர்.

குறைந்தபட்சம் 3 மி.மீ அளவிற்கும் மேல் பெரிய எழுத்துகளிலும், தமிழிலும், மாற்று நிறத்திலும் தெளிவாக அச்சிடப்படுவதை கட்டாயமாக்க வேண்டும்.

8 பால் பொருட்களில் கலப்படம் பால், தயிர், பன்னீர் ஆகியவற்றில் தண்ணீர் கலப்பதுடன், யூரியா மற்றும் ஸ்டார்ச் போன்ற ஆபத்தான கலப்படங்கள் செய்யப்படுகின்றன. 

குழந்தைகள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் உடல்நலனும் தீவிரமாகப் பாதிக்கப்படுகிறது.

வாரந்தோறும் முறையான ஆய்வு மேற்கொண்டு, கலப்பட மாதிரிகளைப் பரிசோதனை செய்து, தவறு செய்வோருக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.

9 மறுசுழற்சி எண்ணெய் பயன்பாடு ஹோட்டல்களில் ஒரே சமையல் எண்ணெயைக் கருகும் வரை மாற்று இன்றி பலமுறை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் அதிகரிக்கின்றன. 

TPC கருவி மூலம் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்வதுடன், RUCO திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை உரிய முகமையிடம் ஒப்படைக்கக் கட்டாயமாக்க வேண்டும்.

10 மதிய உணவு / அங்கன்வாடி உணவு தரமின்மை பள்ளி மதிய உணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து முறையான ஆய்வுகள் செய்யப்படுவதில்லை. 

குழந்தைகள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும், பல்வேறு நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.

மாதந்தோறும் சமையலறை, சமைக்கப் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் எண்ணெயின் தரத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.


11 FSSAI உரிமம், பலகை இல்லை பல கடைகளில் FSSAI உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லை மற்றும் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் புகார் எண் பலகையும் வைக்கப்படவில்லை. 

உரிமம் இல்லாத கடைகளைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படுவதுடன், மக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்க எங்கு அணுகுவது எனத் தெரியாமல் தவிக்கின்றனர். 

FSSAI உரிம எண் மற்றும் புகார் எண் அடங்கிய அறிவிப்புப் பலகையைத் தமிழில் வைப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்; இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்.

12 பள்ளி CCC மன்றங்களில் விழிப்புணர்வு இல்லை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களில் (CCC) உணவு பாதுகாப்பு குறித்த விளக்கம் அளிக்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செல்வதில்லை. 

மாணவர்கள் மற்றும் எதிர்கால நுகர்வோர்களான இளைய தலைமுறையினருக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் போய்விடுகிறது. 

ஆண்டுக்கு 2 முறை அலுவலர்கள் நேரில் வந்து பயிற்சி அளிப்பதுடன், உலக உணவு தினம் மற்றும் நுகர்வோர் தினங்களில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து கண்காட்சிகள் நடத்த வேண்டும்.

13 நடமாடும் பரிசோதனைக் கூடம் இல்லை நீலகிரி மாவட்டத்தில் தொலைதூர மற்றும் மலைப்பகுதி கிராமங்களுக்கு உணவுப் பரிசோதனை வசதிகள் முறையாகச் சென்று சேர்வதில்லை. 

கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் உள்ள கலப்படங்களை உடனுக்குடன் கண்டறிய முடிவதில்லை. 

மாதம் குறைந்தது 2 முறையாவது 'Food Safety on Wheels' (நடமாடும் உணவுப் பரிசோதனை வாகனம்) மூலம் கிராமப் பகுதிகளில் உடனடிப் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும்.

14 ஆன்லைன் / Cloud Kitchen ஆய்வு இல்லை வீடுகளில் இருந்தபடியே முறையான உரிமம் பெறாமல் இயங்கும் ஆன்லைன் கிச்சன்கள் (Cloud Kitchen) மற்றும் உணவு விநியோக மையங்கள் பெருகியுள்ளன.

சுகாதாரமற்ற மற்றும் தூய்மையற்ற சூழலில் சமைக்கப்படும் உணவுகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

இது போன்ற Cloud Kitchenகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு FSSAI பதிவு கட்டாயமாக்கப்படுவதுடன், சமையலறைகளில் நேரடி சுகாதார ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

15 பிளாஸ்டிக் பயன்பாடு சூடான உணவுகள் மற்றும் தேநீர் ஆகியவை பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் தட்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருட்கள் உணவில் கலந்து புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துவதுடன், நீலகிரி மாவட்டத்தின் பிளாஸ்டிக் தடைச் சட்டமும் மீறப்படுகிறது. 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழித்து, வாழை இலை மற்றும் பாக்கு மட்டைத் தட்டுகளின் பயன்பாட்டை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளில் முக்கிய முதல் ஐந்து கோரிக்கைகள் கூட்ட விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் இதர கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து பதில்கள் பெற்று தரவும் கேட்டுக் கொள்கிறோம் 


No comments:

Post a Comment

உணவு பாதுகாப்பு துறை நுகர்வோர் காலாண்டு கூட்டம் விவாத பொருள்

அனுப்புநர்: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பந்தலூர் பந்தலூர் (Po & Tk)  நீலகிரி மாவட்டம் 643233 9488520800, 709...