’ஸ்நேகா’ - கண் தானம்


’ஸ்நேகா’ - கண் தானம்



நடிகை சினேகா இன்று தனது கண்களை தானம் செய்தார். இதற்கான படிவத்தின் கையெழுத்திட்டு மருத்துவமனைக்கு அவர் வழங்கினார்.


பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஆர்வம் காட்டி வரும் சினேகா, சமீபத்தில் கூட போலியோ விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இப்போது தனது கண்களை தானம் செய்துள்ளார் சினேகா. இதற்கான விழா இன்று காலை சென்னை ராஜன் ஐ கேர் மருத்துவமனையில் நடந்தது.

கண்தான பத்திரத்தில் கையெழுத்திட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய சினேகா, "கண்தானம் செய்வதன் மூலம், வாழ்க்கையை தொடர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கிறது" என்றார்.

கண்மணிகள் வேண்டுகிறோம்!

கண்களுக்கு மை இட்டு,
சாயம் பூசி,
வசீகரிக்கும் பெண்களே!

கண்களுக்கு கண்ணாடி இட்டு,
அழகு காட்டி,
வண்டியில் பறக்கும் ஆண்களே!

நாளை ஒரு நாள்,
தேடி வரும்,
அழகு எல்லாம்,
அழிந்து போகும்!
அன்றும் உங்கள்,
கண்மணிகள்,
காட்சி காட்டும்!

எதுவும் வேண்டாம்,
நீங்கள் இறந்த பின்,
நீங்கள் முறிந்த பின்,
கண்களை தந்திடுங்கள்,
காட்சியே காணாதவர்க்கு!

மண்ணில் விதைத்தால்,
பூக்கள் பூக்கும்,
விதை அல்ல நம் கண்மணிகள்!
மனிதரில் விதைத்தால்,
காட்சிகள் பூக்கும்,
அற்புத விதைகள் நம் கண்மணிகள்!

"கண்மணிகள் வேண்டுகிறோம்"
விதைத்திடுங்கள்!

கண்களுக்கு மையிடும் பெண்களில்,
நானும் ஒருத்தி!

ஆனால்,
கண்களை மண்ணில் இடுபவர்களில்,
ஒருத்தி அல்ல!






    கண்தானம் செய்தார் சினேகா!
    தொடர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கிறது" என்றார்.
























  • ’ஸ்நேகா’ - கண் தானம்
  • ’ஸ்நேகா’ - கண் தானம் 1
  • ’ஸ்நேகா’ - கண் தானம் 2

கண் தானம் - தேவை விழிப்புணர்வு !

கண் தானம் - தேவை விழிப்புணர்வு !
அ. போ. இருங்கோவேள்

ந்திய அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை  'தேசிய கண் தான இரு வார விழா'வாக அறிவித்துள்ளார்கள்.
இந்த இரண்டு வாரங்களும் மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சகம், கண் வங்கிகள், கண் மருத்துவமனைகள் பொது மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன. செப்டம்பர் 8 தேசிய கண் தான நாளாக கொண்டாடப்படுகின்றது.

சென்னை, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவ சமூகவியலாளன் மற்றும் மேலாளர் (நோயாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை)  (Medical Sociologist and Manager - Patients Education and Counseling) என்ற முறையில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் சில செய்திகளை விகடன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1. இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நமது பிறப்பு, வாழ்க்கை மற்றும் மரணம் என அனைத்து சூழ்நிலைகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்கிறோம். அந்த வகையில் மரணத்திற்கு பிறகும் நாம் செய்யக்கூடிய ஒரு புண்ணிய காரியமாக கண் தானம் அமைந்துள்ளது.

2. உலகின் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிகமான அளவில் தாங்கிக் கொண்டிருக்கும் தேசம் நமது தேசம். உலகின் ஒவ்வொரு நான்காவது பார்வையிழந்தவனும் இந்தியன். நமது நாட்டைப் பொருத்தமட்டில் பார்வையிழப்பிற்கு முதல் காரணம் கண் புரை, இரண்டாவது அல்லது மூன்றாவது காரணமாக இருப்பது கார்னியல் பார்வைக் கோளாறுகள்.

கண்ணின் பாகங்கள்

3. கார்னியா என்பது நமது கண்களின் முன்புறம் கண்ணுக்கு ஒரு கண்ணாடி ஜன்னலைப் போல அமைந்துள்ள நிறமேயில்லாத, ஒளி ஊடுருவி செல்லக்கூடிய, இரத்தக்குழாய்கள் ஏதுமேயில்லாத மெல்லிய திசு. இதுதான் நாம் பார்க்கும் பொருளிலிருந்து ஒளிக்கதிர்களைப் பெற்று நமது கண்ணுக்குள் அனுப்பி பார்வை என்னும் புலனைப் பெறுவதற்க்கு ஆதாரமாக இருப்பது. இது கண் சார்ந்த விபத்துகள், தொற்று நோய்கிருமிகள், ஊட்டச்சத்துக்குறைவு, கண் பராமரிப்புக் குறைபாடு மேலும் மரபியல் மற்றும் மூலக்கூறியல் குறைபாடு காரணங்களால் பாதிக்கப்படுகிறது.
கார்னியா பாதிக்கப்படும் நிலையில், பார்வை என்னும் புலனைப் பெறுவதற்கான முதல் செயலான ஒளிக்கதிர்களைப் பெற்று கண்ணுக்குள் செலுத்தும் பணி தடைபடுகிறது. இதுவே கார்னியல் பார்வைக்கோளாறு எனப்படுகிறது. இதனை கார்னியா மாற்று ஆபரேஷன் மூலம் சரி செய்ய முடியும்.

கார்னியாவின் அடுக்குகள் 


4. கார்னியா மாற்று ஆபரேஷன் என்பது பாதிக்கப்பட்ட கார்னியாவை அல்லது கார்னியாவின் பகுதியை / பாதிக்கப்பட்ட அடுக்கினை நீக்கிவிட்டு தானமாகக் கிடைத்த கண்ணின் கார்னியாவை அல்லது கார்னியாவின் பகுதியை / அடுக்கினை  பயன்படுத்தி செய்யும் ஆபரேஷன். இதன் வெற்றி விகிதம் மிக அதிகம். இந்த ஆபரேஷனுக்கு தேவையான அளவு கண்கள் தானமாகக் கிடைப்பது இல்லை. எனவே பலருக்கும் ஆபரேஷன் நடைபெறுவது தாமதமாகிறது அல்லது பார்வை கிடைப்பது நிறைவேறாமல் போகிறது. மரணமடைபவர்களது கண்கள் தானமாக வழங்கப்படும் பட்சத்தில் பலருக்கும் பார்வை கிடைக்கும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

5. மரணமடைந்தவர்களின் கண்களை தானமாகப் பெற்றுக் கொள்ள,மரணமடைந்தவர்களின் உறவினர்கள் உடனடியாக கண் வங்கிக்கு தகவல் அனுப்பி, மரணமடைந்தவர்களின் கண்களை தானமாகப் பெற்றுக் கொள்ள அனுமதி அளிப்பதுதான் கண் தானம். 

6. கண் தானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், ஆண் / பெண் பாகுபாடு ஏதும் கிடையாது. மரணமடைந்த அனைவரது கண்களும் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து மதங்களும் கண் தானம் உட்பட அனைத்துவிதமான தானங்களையும் போற்றுகின்றன.

7. கண்ணாடி அணிந்திருந்தாலும்,கேட்டராக்ட் ஆபரேஷன் செய்திருந்தாலும் அவர்களும் தாராளமாக கண் தானம் செய்யலாம்.

8. கண் தானம் செய்ய,ஒருவர் மரணமடைந்த ஆறு மணி நேரத்திற்க்குள் அவரது கண்களை அகற்றியாக வேண்டும்.அப்போதுதான் அந்தக் கண்களை ஆபரேஷனுக்கு பயன்படுத்த முடியும். எனவே எவ்வளவு விரைவாக கண்களை அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக அதற்குரிய விஷயங்களைச் செய்து தானமாக அளிப்பது நல்லது.

9. ஒருவரது மரணத்தின் பின்னணியில் ஏதேனும் தொற்று நோய்க்கிருமிகள், வெறிநாய்க்கடி, கல்லீரல் அழர்ச்சி, கண்களில் புற்றுநோய், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புற்று நோய் பரவிய நிலை, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் இருந்தால் அவர்களது கண்கள்  ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

10. முழுக் கண்ணையும் அப்படியே வேறொருவருக்கு மாற்றி ஆபரேஷன் செய்வது கிடையாது. தானமாகப் பெறப்பட்ட கண்களில் கார்னியா எனப்படும் விழி வெண் படலம் மட்டுமே கார்னியா மாற்று ஆபரேஷன் எனப்படும் கார்னியல் டிரான்ஸ்ப்ளாண்டேஷன் ஆபரேஷனுக்கும், ஸ்க்ளீரா எனப்படும் விழி வெளிப்படலம் க்ளகோமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மால்ட்டினோ இம்ப்ளாண்ட் எனபடும் ஆபரேஷனுக்கும் கண்களில் செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்கும், மற்ற பகுதிகள் கண் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும்.


11. கண்ணின் தர மதிப்பீட்டிற்காக மரணமடைந்தவரின் உடலிலிருந்து 10 சிசி அளவு வரை இரத்தமும் சேகரித்துக் கொள்ளப்படும். தரமான கண்கள் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபரேஷனுக்கு பயன்படுத்தப்படும். தரம் குறைந்தவைகளை கண்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கே பயன்படுத்த இயலும். முழுமையான கண்கள் தர மதிப்பீடு என்பது கண்களை தானமாகப் பெற்று வந்த பிறகு கண் வங்கியிலும் ஆய்வுக்கூடத்திலும் மட்டுமே சாத்தியம்.

மரணமடைந்தவர்களின் கண்களை தானமாக அளிப்பதற்கான முக்கியமான குறிப்புகள் :

1. நமக்கு தெரிந்து யாரேனும் ஒருவர் மரணமடைந்துவிட்டால்,அந்த வேளையில் நெருங்கிய உறவினர்கள் வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி, மரணமடைந்தவர் உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏதேனும் எடுத்திருந்தால் உடனடியாக கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். கண்தான உறுதிமொழி எடுத்திருக்கவில்லை என்றால் நெருங்கிய
உறவினரிடத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி "அவரது கண்களை தானம் அளிப்பதால், இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே.. அவரது ஆத்மா சாந்தியடையுமே" என்று ஊக்குவித்து அவர்களது சம்மதம் பெற்று கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம்.

2. கண் வங்கியை தொடர்பு கொண்டு மரணமடைந்தவரின் பெயர், வயது, ஆண்/பெண், மரணத்தின் காரணம், மரணமடைந்த நேரம், தற்போது உடல் இருக்கும் இடத்தின் முகவரி மற்றும் லேண்ட்மார்க் (அருகில் உள்ள இடத்தின் அடையாளம் உ.ம். கோயில், திரைஅரங்கு, கடைகள், போன்ற விவரங்கள்) ஆகியவற்றுடன், தகவல் அளிப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களை அளித்தால் உரிய
நேரத்திற்குள் கண் வங்கி மருத்துவர் குழு வர வசதியாக இருக்கும்.

3. மரணமடைந்தவரின் கண்களை மூடி இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சினை வைப்பது நல்லது. முடியுமேயானால் ஏதேனும் ஆன்டிபயாட்டிக் கண் சொட்டு மருந்தினை (Ciplox அல்லது Norflox) போடலாம். இது ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்கும். தலைக்கு நேர் மேலே மின்விசிறி சுற்றிக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தி விடுவது நல்லது. இவை கார்னியா ஈரப்பதத்திலும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவியாக இருக்கும்.

4. மரணமடைந்தவரின் தலையை இரண்டு தலையணைகளை வைத்து சுமார் 6 அங்குலம் உயர்த்தி வைக்க வேண்டும். இது கண்களை அகற்றும்போது உதிரம் வெளியேறுவதைத் தவிர்க்கும்.

5. அன்னாரது உடல் குளிர்சாதனப் பெட்டியில் (ஃப்ரீஜரில்) வைக்கப் பட்டிருந்தால் ஏதும் பிரச்னை இல்லை.

6. சில குடும்பங்களில் மரணமடைந்தவரின் கண்கள் மீது மஞ்சளை அரைத்து கெட்டியாக பூசி மூடி வைப்பார்கள். அதனை கண்களை தானமாக அளித்த பிறகு செய்வது நல்லது.

7. கண் வங்கியிலிருந்து மருத்துவர் குழு வரும் முன்பே அருகில் உள்ள நர்சிங் ஹோம் அல்லது குடும்ப மருத்துவரிடமிருந்து மரண சான்றிதழ்  பெற்று வைத்துக் கொள்வது நல்லது. கண் வங்கி மருத்துவர் குழுவினருக்கு மரண சான்றிதழ் வழங்க உரிமை கிடையாது.

8. கண்களை மிகவும் நாகரீகமான முறையில் அதிகபட்சம் 20 முதல் 30 நிமிடத்தில் அகற்றி விடுவார்கள். கண்களை எடுத்த பிறகு கண்களை எடுத்த அடையாளமே தெரியாது என்பதே உண்மை.
பார்வை வழங்கும் தூதுவராவோம்:
1. நமது கண்களை தானமாக வழங்க உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்.






























http://cchepnlg.blogspot.in/

என்ற வலைத்தளத்திலும், கண் வங்கிகளில் படிவங்களைப் பெற்றும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளலாம்.

2. நமது நண்பர்கள், உற்றார்,உறவினர்களையும் கண்தான உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டிக் கொள்ளலாம்.

3. நமக்கு தெரிந்து யாரேனும் மரணமடைந்து விட்டால் அவர் கண் தானம் செய்ய உறுதி மொழி எடுத்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது  நெருங்கிய உறவினரை சந்தித்து ஊக்குவித்து மரணமடைந்தவரின் கண்களை தானமாக வழங்கலாம். 

Eye Donation

Eye Bank
Take a pledge to donate your eyes
Frequently Asked Questions

There are currently an estimated 15 million blind people in India. 6.8 million of these suffer from corneal blindness with vision less than 6/60 in at least one eye, and of these, about 1 million have bilateral corneal blindness. If the present trend continues, it is expected that the number of corneally blind individuals in India will increase to 8.4 million in 2010 and 10.6 million by 2020.

Of these at least 3 million can be benefited by corneal transplantation. Thus, to effectively meet the ever growing demand, we need around 150,000 corneal transplants to be performed every year.
C U Shah Eye Bank
The C U Shah Eye Bank started functioning in Sankara Nethralaya from September 1979. The department of Medical Sociology was established in 1990 with the aim of promoting awareness on eye donation by educating and motivating the public for this noble cause. The C U Shah Eye Bank, over the last 30 years, has seen a tremendous increase in the number of eye donations. From a mere 8 eyes in 1980, 1144 eyes were collected in 2009. 

Exclusive Facilities:
 
 
 
 
 
 
 
A suitable patient is called upon and corneal transplantation surgery is performed as early as possible.
EYE DONATIONS - FREQUENTLY ASKED QUESTIONS & ANSWERS
What is Cornea?
The cornea is the clear, transparent layer in front of the "black portion" of the eye. It is also the main focusing surface, which converges light rays as they enter the eye to focus on the retina. It is, therefore, the most important part of the optical apparatus of the eye. Loss of transparency directly results in loss of vision.
What is Corneal Transplantation?
A Corneal transplant is a surgery through which the opaque cornea is replaced with a clear cornea obtained from a human donor eye.
Before Surgery After Surgery
 
How does a cornea become opaque?
 
 
 
 
Who can be an eye donor?
Practically anybody from the age of 1 year. There is no upper age limit. People who wear spectacles, who have undergone cataract surgery, diabetics and those who have hypertension can donate their eyes. People blind from retinal or optic nerve disease can also donate their eyes.
The ultimate decision about usage for transplantation will be made after evaluation.
Can the next-of-kin consent to a donation if the deceased family member hasn't signed a pledge form?
Yes.
How can I be of help on the death of a close relative or friend?
Motivate the next of kin of the deceased person to donate their eyes. Eyes need to be collected within 6 hours of death so call your nearest eye bank at the earliest. You are authorized to donate the eyes of your beloved relatives at the time of their death, even if a pledge for donation has not been made earlier by the deceased.
What should I do till the Eye Donation team arrives?
 
 
 
 
What is the sequence of events in Sankara Nethralaya once I call?
A call for donating eyes sets in motion the Eye Bank machinery and a team is dispatched within 15 minutes. At the site, the eyes of the deceased are enucleated without causing any disfigurement. This procedure takes about 10-15 minutes.
Who cannot be a donor?
 
 
 
Can the whole eye be transplanted?
No. Only the cornea and sclera can be transplanted. However, the entire eyeball is enucleated, to enable the corneo-scleral disc to be fashioned surgically in a sterile environment.
Can a living person donate his/her eyes?
No
Can the recipients be told who donated the eyes?
No. The gift of sight is made anonymously.
Any specials phone no. for eye bank and eye donation?
Yes, a dedicated special phone: 044 28281919 and 044 28271616 
Our appeal
Take a pledge to donate your eyes
Eye Donation

eye donation Organ donation

கண் கொடை

.
கண் கொடை அல்லது கண் தானம் என்பது ஒருவர் இறப்புக்குப் பின்பு அவருடைய கண்களைத் தானமாக அளிப்பதாகும். தானமாகப் பெறப்பட்ட கண்கள் சோதனைகளுக்குப் பின்பு அதற்கான பாதுகாப்புகளுடன் வைக்கப்படுகிறது. தானமாகப் பெறப்பட்ட கண்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக கண் வங்கிகள்செயல்படுகின்றன.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]யார் கண் தானம் செய்யலாம்?

  • ஆண், பெண் இரு பாலரும், அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம்.
  • கண் கண்ணாடி அணிந்தவர்களும் செய்யலாம்.
  • இரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் கூட தானம் செய்யலாம்.
  • ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கூட தானம் செய்யலாம்.
  • உடலில் பிற உறுப்புகளில் புற்று நோய் வந்து இறந்தவர்களும் கூட தானம் செய்யலாம்.

[தொகு]யார் கண் தானம் செய்யக் கூடாது?

[தொகு]பயன்கள்

[cchepnlg@gmail.com]சில பொதுவான தகவல்கள்

  • ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்களைத் தானமாக அளிக்க முடியும்.
  • ஒருவர் இறந்து 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அவரது கண்கள் அகற்றப்பட வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே கண்களை அகற்ற வேண்டும்.
  • கண் வங்கிக் குழுவினர் கண் தானம் செய்தவரின் வீட்டிற்கே வந்து கண்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
  • இந்த கண்களைத் தானமாக பெறும் நிகழ்வு 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்து விடும்.
  • திசு ஒற்றுமை மற்றும் தொற்று நோய் பரிசோதனைக்காக சிறிது இரத்தம் இறந்தவரின் உடலிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
  • இறந்த பின் கண்களை எடுப்பதால் முக மாறுதல்கள் ஏதும் ஏற்படாது.
  • கண் தானம் செய்வதை மத சம்பிரதாயங்கள் எதுவும் எதிர்க்கவில்லை.
  • கண் தானம் அளிப்பவரின் பெயரும், பெறுபவரின் பெயரும் ரகசியமாக வைக்கப்படும்.

கண் தானம் செய்தவரது உறவினர்கள் செய்ய வேண்டியது

கண் தானம் செய்த ஒருவர் இறந்த பின்பு அவரது உறவினர்கள் செய்ய வேண்டியவை
  • மிக அருகிலுள்ள கண் வங்கிக்கு உடனடியாக தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தகவல் அளிக்க வேண்டும்.
  • இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் சரியான முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றைத் தெளிவாக அளிக்க வேண்டும். இத்தகவல் கண் வங்கிக் குழுவினர் மிக விரைவாக வந்து சேர உதவுகிறது.
  • கண்களைத் தானமாகப் பெறுவதற்கு இறந்தவரின் கணவன், மனைவி, உடன் பிறந்தவர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரும் மற்ற சாட்சிகள் இருவரும் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • கண் தானம் செயதவர் இறந்த உடனே கண் இமைகளை மூடி வைக்க வேண்டும்.
  • இறந்தவர் உடல் இருக்குமிடத்தில் மின் விசிறியை நிறுத்தி வைக்க வேண்டும்.
  • குளிர் சாதனப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருந்தால் அதனை இயக்கத்தில் வைக்கலாம்.
  • தலையணையை வைத்து இறந்தவரது தலையைச் சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.

[தொகு]சில இந்தியப் புள்ளி விவரங்கள்

  • இந்தியாவில் பார்வையற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சம்.
  • கருவிழி நோயால் பார்வையிழந்து கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 10 இலட்சம்.
  • ஒரு ஆண்டுக்குத் தேவையான கருவிழிகளின் எண்ணிக்கை 75 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை.
  • இந்தியாவில் கண் தானம் மூலம் கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கை 22 ஆயிரம். இந்த எண்ணிக்கையில் தரப் பரிசோதனைகளுக்குப் பின்பு நல்ல நிலையில் கிடைப்பது 40 முதல் 50 சதவிகிதம்தான். பிற கருவிழிகள் வேறு சில ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கண் தானம்


இந்த உலகில் எண்ணற்ற அதிசயங்களும், அற்புதங்களும் உள்ளன. அந்த அதிசயங்களையும், அற்புதங்களையும் கண்டு கழித்து இன்பமுற பயன்படுவது கண் என்ற இன்றியமையாத உறுப்பு தான். மேலும் மனிதன் நல்லவற்றையும்,தீயவற்றையும் காண்பதற்கு பயன்படுவதும் கண் தான். இவ்வாறு தனிச்சிறப்பு பெற்று விளங்கக் கூடிய கண்பார்வையானது சிலருக்கு பிறப்பில் இருந்தே கிடையாது. சிலருக்கு ஆபத்து மற்றும் இதர குறைபாடுகளின் மூலமும் கண்பார்வை பறிபோகின்றது. இவ்வாறு இருக்கக் கூடியவர்களுக்கு நாம் கண் தானம் செய்வதின் மூலம் வாழ்வளிக்கலாம். கண் தானம் என்பதை நாம் வாழும் போதே செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது, நமது இறப்பிற்குப் பிறகு கூட செய்யலாம். கண் பார்வையற்றவர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். நமது இறப்பிற்குப் பிறகு சில மணி நேரங்கள் வரை கண் துடிப்பு இருக்கும். எனவே நாம் தாரளாமாக கண் தானம் செய்யலாம். இவ்வாறு நாம் செய்யக்கூடிய கண் தானமானது ஒரு மிகப்பெரிய சேவை. கண் தானம் செய்வதின் மூலம் கண் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கலாம். இப்பேற்பட்ட கண் தானம் என்ற உன்னதமான சேவையை நாமும் செய்ய உறுதியேற்போம், பிறரையும் செய்யத் தூண்டுவோம்.

தானங்களில் சிறந்த தானம் கண் தானம்.............

கண் வரைபடம்




தையல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்


பந்தலூர் : "தையல் தொழிலாளர்களுக்கு அரசு மூலம் வழங்கும் பல்வேறு சலுகைகளை பெறுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பந்தலூரில்   இந்திய அரசு நேரு யுவகேந்திர சார்பில், தையல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சேரங்கோடு தையல் பயிற்சி மையத்தில் நடந்தது.

தையல் பயிற்சி ஆசிரியை மகேஷ்வரி வரவேற்றார். 

விஜயன் சாமுவேல் பேசுகையில்,"தற்போது பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தொடர்ந்தும் தையல் பயிற்சி நடத்துவதுடன், ஏழை மாணவர்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர் பயிற்சி மையமும் துவக்கப்படும்,'' என்றார். 

பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், "பொழுதுபோக்காக தையல் பயிற்சி பெற்றுவந்த காலம் மாறி, தற்போது குடும்பத்தையே காப்பாற்றும் அளவிற்கு தையல் தொழில் வளர்ந்துள்ளது. பயிற்சி பெற்றவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சலுகைககளை பெறுவதற்கும் ஆர்வம் காட்ட வேண்டும்,'' என்றார். 

தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தண்டபானி, கவுன்சிலர்கள் சந்திரன், ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். 

சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். தையல் பயிற்சி  மைய ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் நன்றி கூறினார்.

தையல் பயிற்சி பெற்றோருக்கு நேரு யுவகேந்திரா சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது




கூடலூர் அருகே 2 ம் மைல்ஸ் பகுதியில் தையல் பயிற்சி பெற்றோருக்கு நேரு யுவகேந்திரா சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது




கூடலூர் அருகே லிட்ரசி மிஷன் சென்டரில்  இந்திய அரசு நேரு யுவகேந்திரா சார்பில் இலவச  தையல் பயிற்சி பெற்ற மகளிர்களுக்கு  தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி  நடைப்பெற்றது



நிகழ்ச்சிக்கு லிட்ரசி மிஷன் மையத்தின் மேற்பார்வையாளர்  எபினேசர் தலைமை தங்கினார் 

கூடலூர்  நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,   கூடலூர்  நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மைய ஆலோசகர் சுந்தரலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 6 மாத காலம் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்

தையல் தொழில் முலம் வருவாய் பெருக்கும் வழிமுறைகள் மற்றும் அரசு உதவிகள் பெரும் வழிமுறைகள் குறித்தும் மகளிர் மேம்பாடு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது


நிகழ்ச்சியில் சூரியகுமார் தையல் பயிற்சி மைய ஆசிரியை மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் 20-க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர் 




தையல் பயிற்சி பெற்றோருக்கு நேரு யுவகேந்திரா சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது


கூடலூர்  நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு   மையம் - மக்கள் மையம்
       Center for Consumer Human resource
Environment Protection- Citizen Center
( Govt, Approved VCO - Reg under society reg act 1975)
Pandalur, Pandalur  (PO & Tk)  Nilgiri District,  Tamilnadu- 643 233.
Email:  cchepnlg@gmail.com,   cchep.siva@gmail.com,  cchepnlg@in.com
Cell:   9488 520 800,  94898 60250,  9486 393 406,  75985 22102,  94429 74075.

Ref No: cchep / con / 12/2013 Date: 6.1.2013

கூடலூர் அருகே 2 ம் மைல்ஸ் பகுதியில் தையல் பயிற்சி பெற்றோருக்கு நேரு யுவகேந்திரா சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

கூடலூர் அருகே லிட்ரசி லேர்நிங் சென்டரில்  இந்திய அரசு நேரு யுவகேந்திரா சார்பில் இலவச  தையல் பயிற்சி பெற்ற மகளிர்களுக்கு  தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி  நடைப்பெற்றது

நிகழ்ச்சிக்கு மையத்தின் இயக்குனர்  எபினேசர் தலைமை தங்கினார் கூடலூர்  நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மைய ஆலோசகர் சுந்தரலிங்கம் கூடலூர்  நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 6 மாத காலம் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்

தையல் தொழில் முலம் வருவாய் பெருக்கும் வழிமுறைகள் மற்றும் அரசு உதவிகள் பெரும் வழிமுறைகள் குறித்தும் மகளிர் மேம்பாடு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது
நிகழ்ச்சியில் சூரிய குமார் தையல் பயிற்சி மைய ஆசிரியை மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் 20-க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

S.SIVASUBRAMANIAM,  President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER
PANDALUR, PANDALUR TALUK & POST
THE NILGIRIS 643 233.


ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் முக்கிய பயன்களை    “திடீர் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால் குடும்ப...